முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

பேஸ்புக்கில் தனது உருவமாற்ற படம்: அவமானத்தால் இளம் பெண் தற்கொலை!

சென்னை – பேஸ்புக்கில் தனது மார்பிங் செய்யப்பட்ட படத்தைப் பார்த்த வினுபிரியா (வயது 22) என்ற பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி என்ற பொறியியலாளர் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கொலை செய்யப்பட்ட செய்தியும் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வேளையில், வினுபிரியாவின் தற்கொலை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...
Read More

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு – பெரும் விபத்து தவிர்ப்பு!

சிங்கப்பூர் – எண்ணெய் கசிவு காரணமாக, இன்று காலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாங்கி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது ஓடுபாதையில் விமானத்தில் தீப்பற்றியுள்ளது. எனினும், அதிருஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.05 மணியளவில், சாங்கி விமான நிலையத்தில் இருந்து, எஸ்க்யூ368 என்ற விமானம் இத்தாலியின் மிலன் நகரை நோக்கிச் சென்றுள்ளது. அப்போது பயணிகளில் ஒருவரான லீ பீ யீ (வயது 43) என்பவர், வாயுக் கசிவு போன்ற நெடியை...
Read More

அமெரிக்க பங்கு சந்தை 610 புள்ளிகள் வீழ்ச்சியுடன் நிறைவு!

நியூயார்க் – பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பொது வாக்கெடுப்பு மூலம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலகம் எங்கிலும் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. அமெரிக்க பொருளாதாரத்தின் நிர்ணய சக்தியாகவும், உலக நாடுகளின் பங்கு சந்தைகளை ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார அளவு கோலாகவும் பார்க்கப்படும் அமெரிக்க பங்கு சந்தை நேற்று 500 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று, அமெரிக்க பங்கு சந்தை வணிகம் நிறைவடைந்த போது 610 புள்ளிகள் குறைந்து, முடிவடைந்தது. உலகின் மற்ற நாடுகள் பல வற்றிலும்...
Read More

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இராஜினாமா!

இலண்டன் – பொது வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது இன்று உறுதியானது. 52 சதவீத மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் 48 சதவீத மக்கள் நீடிக்க வேண்டும் என்றும் வாக்களித்ததைத் தொடர்ந்து, இக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் முதல் நாடானது பிரிட்டன். வாக்கெடுப்பு முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து 52% மக்களும், அதில் நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து 48% மக்களும்...
Read More

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு: குறுகிய பெரும்பான்மையில் பிரிட்டன் நீடிக்கக்கூடும்!

இலண்டன்: நேற்று நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்ற பிரதமர் டேவிட் கெமரூனின் பிரச்சாரத்திற்கு ஏற்ப, மிகக் குறுகிய பெரும்பான்மையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கும் என ஆரம்ப கட்ட முடிவுகள் – கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பல இடங்களில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளதால், முடிவுகள் மாறி மாறி வரலாம் என்றும் இறுதி முடிவு மிகக் குறுகிய...
Read More

ஜெர்மனியில் திரையரங்கில் பொதுமக்களை சிறைப் பிடிக்க முயன்றவன் சுட்டுக் கொலை!

பெர்லின் – ஜெர்மனில் பிராங்பர்ட் அருகே உள்ள வியர்ன்ஹெய்ம் என்ற பகுதியில் இருந்த திரையரங்கு வளாகத்தில், நேற்று வியாழக்கிழமை மதியம் முகமூடி அணிந்த ஆயுதமேந்திர ஒருவன்,  துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் சுமார் 20 முதல் 50 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் ஜெர்மன் ஊடகங்கள் கூறுகின்றன. எனினும், அவர்கள் அவனது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்களா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், திரையரங்கு வளாகத்தில் அங்கிருந்த பார்வையாளர்களை சிறைப் பிடிக்க நினைத்த அவனது...
Read More

மின்னல் தாக்கி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் உயிரிழப்பு!

புதுடில்லி – வட மாநிலங்களை உலுக்கி வரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக, இதவரை மின்னல் தாக்கியதால் மட்டும் 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வயல் வெளிகளிலும், திறந்த வெளி பண்ணைகளிலும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.

கினபாலுவில் சூரிய ஒளி படும் போது மலையில் தெரியும் ‘முகம்’

கோத்தா கினபாலு – கினபாலுவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் சிகரத்தில், சூரிய ஒளியின் போது, ‘முகம்’ ஒன்று தெரிவதாக அண்மையில் வெளியான புகைப்படம் ஒன்று மலையேற்ற வீரர்களையும், நட்பு ஊடகங்களில் இருப்பவர்களையும் திடுக்கிட வைத்துள்ளது. இது குறித்து கினபாலு பூங்காவின் நிர்வாகி யாசின் மிக்கி கூறுகையில், சில நேரங்களில் சூரிய ஒளி பரவும் போது, அந்த முகம் மிகத் தெளிவாகத் தெரியும் என்று தெரிவித்துள்ளார். “சூரியஒளி பரவிய பின்பு தான் அந்த முகம் தெளிவாகத் தெரியும்” என்று...
Read More

சுடப்பட்ட பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கோக்ஸ் உயிரிழந்தார்!

இலண்டன் – நேற்று தனது தொகுதி மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டு, பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்ட தொழிலாளர் கட்சியின் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கோக்ஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். (மேலும் விவரங்கள் தொடரும்)

அமெரிக்க வான் வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் மரணம் – உறுதிப்படுத்தப்படாத தகவல்!

வாஷிங்டன் – சிரியாவில் அமெரிக்க படை நடத்திய வான் வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாடி இறந்துவிட்டதாகக் கூறப்படும் தகவலை பெண்டகன் அதிகாரிகள் “சந்தேதேகக் கண்ணோடு” பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து பாக்தாத்தில் உள்ள அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ்டோபர் சி. கார்வெர் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள தகவலில், “இதற்கு முன்பும் இது போன்ற செய்திகள் வெளியாகியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஈராக் மற்றும் இன்னும் மற்ற...
Read More

ஒர்லாண்டோ தாக்குதல்: ஓமாரின் திட்டத்தை முன்பே அறிந்திருந்த மனைவி மீது விரைவில் வழக்கு!

ஒர்லாண்டோ – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒர்லாண்டோவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான கேளிக்கை விடுதியில் புகுந்து 49 பேரை சுட்டுக் கொன்ற ஓமார் மாட்டீன், தனது சதித்திட்டத்தை முன்பே தனது மனைவியிடம் கூறியிருக்கின்றான். அவனது திட்டத்தை முன்பே தெரிந்தும் அதைப் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக ஓமாரின் மனைவி நூர் சல்மான் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது. அமெரிக்காவின் இரட்டை வர்த்தக கோபுரம் தாக்குதலுக்குப் பின் நடந்த மிகப் பெரிய தாக்குதலுதாக இச்சம்பவம் கருதப்படுகின்றது.
error: Content is protected !!