முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

ஜோலோ அருகே துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது!

ஜோலோ – கனடா நாட்டவர் ராபர்ட் ஹாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்டதாக அபு சயாப் நேற்று அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில், துண்டிக்கப்பட்ட தலை ஒன்று ஜோலோ நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்தத் தலை சான்செஸ் வீதி அருகே நேற்று இரவு 9 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது. எனினும், அந்தத் தலை ராபர்ட் ஹாலின் தலை தானா என்பதை முழுமையான பரிசோதனைகளுக்குப் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என்றும் காவல்துறை...
Read More

ஜெயலலிதா-மோடி சந்திப்பு: சில பின்னணித் தகவல்கள்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஜெயலலிதா. அதன் தொடர்பில் சில பின்னணித் தகவல்கள்: தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். இன்று காலை விமானம் மூலம் புதுடில்லி செல்லும் ஜெயலலிதா இன்று இரவே சென்னை திரும்புகின்றார். அண்மைய சட்டமன்றப் பிரச்சாரங்களில் கூட எங்கும் அவர் இரவு தங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, புதுடில்லியிலிருந்தும் இன்றிரவே அவர் சென்னை திரும்புகின்றார்....
Read More

புளோரிடா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஓமார் மனநலம் பாதிக்கப்பட்டவன்: முன்னாள் மனைவி தகவல்!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில், கேளிக்கை விடுதி ஒன்றில் தனியாளாக துப்பாகிச் சூடு நடத்தி 50 பேர் இறப்பிற்குக் காரணமான நபர், மனநலம் பாதிக்கப்பட்டு, நிதானத்தை இழந்திருப்பதாக அவரது முன்னாள் மனைவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஓமார் மாட்டின் என்ற அந்த 29 வயது நபரின் முன்னாள் மனைவி சிடோரா யூசிபி நேற்று காவல்துறை மற்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமணம் செய்து நான்கு மாதங்கள் அந்நபரோடு தான் வாழ்ந்ததாகவும், பல போராட்டங்களுக்குப் பிறகு தனது குடும்பத்தினர்...
Read More

கூகுள் ‘ஸ்ட்ரீட் வியூ’ சேவைத் திட்டத்தை நிராகரித்தது இந்திய அரசு!

புதுடெல்லி – கூகுள் நிறுவனம் தனது “ஸ்ட்ரீட் வியூ” சேவையை இந்தியாவில் நிறுவ செய்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. காரணம் இந்திய உள்துறை அமைச்சகம் கூகுளின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக அறிவித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட 360 பாகையில் வீதிகள், நினைவுச் சின்னங்கள், மலைகள் மற்றும் ஆறுகளைக் காட்டும் இந்த வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூகுள் விண்ணப்பித்தது. ஆனால் நாட்டின் பாதுகாப்பு குறித்து தற்காப்பு அமைச்சு சில...
Read More

ஒர்லாண்டோ துப்பாக்கிச் சூடு: 50 பேர் பலி! 53 பேர் காயம்! அமெரிக்க வரலாற்றில் ஒரே சம்பவத்தில் அதிக உயிர்கள் பலியான சம்பவம்!

ஒர்லாண்டோ – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் தனிநபர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். இது போன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அமெரிக்காவில் நிறைய நடந்தாலும், ஒரே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அதிகமானோர் உயிர்ப்பலியானது இந்த சம்பவத்தினால்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கின் இரட்டை கோபுரத் தாக்குதலான செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பின்னர் மிகப் பெரிய மரண எண்ணிக்கையைக் கொண்ட பயங்கரவாத சம்பவமாக நேற்றைய...
Read More

அமெரிக்காவில் மோடி – ஒபாமாவுடன் 2 ஆண்டுகளில் 7வது முறையாக சந்திப்பு!

வாஷிங்டன் – பொதுவாக அமெரிக்க அதிபர் ஒருவர் உலகத் தலைவர்களைச் சந்திப்பது என்பது வெகு அபூர்வமாகவே நடைபெறும். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து அவருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையிலான சந்திப்பு, ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்களைப் போல அடிக்கடி நடந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில், எதிர்வரும் ஜனவரியோடு பதவி விலகிச் செல்லும் ஒபாமா, தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகின்றார். நேற்று ஒபாமா- மோடி...
Read More

200-க்கும் அதிகமான புராதனச் சின்னங்களை மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!

அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 668 கோடி ரூபாய் மதிப்பிலான புராதன சிற்பங்களை ஒப்படைத்துள்ளது அமெரிக்கா. அதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தெய்வச் ‌சிலைகள் உள்ளிட்டவை திரும்ப அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான சோழர் காலத்துச் சிலையும் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியப் புராதனச் சின்னங்கள் மீது அக்கறை...
Read More

முன்னாள் குத்துச் சண்டை வீரர் முகமது அலி மரணம்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது அலி, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். 74 வயதாகும் முகமது அலி அமெரிக்காவின் அரிஜோனா பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அவருக்கு பார்கின்சன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. (பார்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவிதமான வாத நோயாகும்.) அந்த நோயின் பாதிப்பால் முகமது அலிக்கு தற்போது சுவாசக் கோளாறு...
Read More

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை:வெள்ளத்தில் மிதக்கும் ஜெர்மனி-பிரான்ஸ்

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்துவருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்க்கின்றன. கன மழை காரணமாக ஐரோப்பா முழுவதும் 10க்கும் மேற்பட்ட பலியாகி உள்ளனர். ஜெர்மனியில் தான் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அந்த நாட்டின் மத்திய, தென் கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக...
Read More

ஜெயலலிதா வழக்கு: வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல – உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து!

கர்நாடக – ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்றும், பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய...
Read More

தாய்லாந்து புலிக் கோயிலில் 40 புலிக் குட்டிகளின் உடல்கள் மீட்பு!

பாங்காக் – தாய்லாந்தில் உள்ள புலிக் கோயிலில் இன்று அதிரடியாகச் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கு உறை நிலையில் வைக்கப்பட்டிருந்த 40 புலிக்குட்டிகளின் உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். அக்கோயிலில் இருந்த சமயற்கட்டில் இருந்த உறைவிப்பானில் ( freezer) இருந்து இந்த 40 புலிக்குட்டிகளின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய வனவிலங்கு பூங்கா துறையின் துணை இயக்குநர் அடிசோர்ன் நுச்டாம்ரோங் தெரிவித்துள்ளார். காஞ்சனாபூரி என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த புத்த ஆலயம், சுற்றுலாப் பயணிகள் பலர் வரும் இடமாகும். அங்கு வரும்...
Read More
error: Content is protected !!