முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

மங்கையரே சற்று சிந்தியுங்கள்!

செவ்வாய் கிரகம் போகும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள நவீன உலகு, பண்டைய கால நடை உடை பழக்கவழக்கங்களை தான் பின்பற்ற ஆரம்பிக்கின்றது என்பதை எம்மில் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம் என்பது கேள்விக்குரியே. இன்றைய சமுதாயத்திலே பெண்களாகிய நாம் எமது சுயகௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். மற்றவர்களிடம் இதற்காக போராட முனையும் நாம், மற்றவர்கள் எம்மை விமர்சிக்காத வகையில் வாழ முயற்சிப்பது சிறந்ததாகும். அநேகமாக பெண்கள் தங்களின் உடை அலங்காரங்களிலேயே அதிக விமர்சணத்திற்க்கு உள்ளாக நேரிடுகிறது....
Read More

மர்மங்கள் நிறைந்த நவநாத சித்தரின் காட்டுக்குகை! இன்றும் உடையாமலிருக்கும் பூஜை அறை!!

இந்தியாவின் கொல்லிமலைக்காட்டியிலிருந்து வருகைதந்து நாவலப்பிட்டிய குயின்ஸ்பேரி தோட்டத்தில் குடியேறி அங்குள்ள மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கிய- விளங்கிவரும் ஸ்ரீ நவநாத சித்தரின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொகுப்பை கருடன் வெளியிட்டுவருகின்றது. இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு நவநாத சித்தர் எப்படி வந்தார், குயின்ஸ்பேரி தோட்டத்தை மிரட்டிய இரத்தக்காட்டேரியை அவர் எப்படி கட்டுப்படுத்தினார் என்பது உள்ளிட்ட தகவல்களை பகுதி 1 இலும், நவநாத சித்தரின் சிவாலயம் பற்றியும், அவரை படம்வரைந்த பெண் மறுநாளே மரணமான சம்பவம் உள்ளிட்ட விடயங்களை பகுதி- 02...
Read More

வடக்கு மக்கள் புறக்கணித்த பொருத்து வீடு நுவரெலிய பீட்ரு தோட்டத்தில் அறிமுகம் பெ.முத்துலிங்கம்!

வடக்கில் யுத்தம் முடிவடைந்தப் பின்னர் யுத்தத்தினால் வீடிழந்த வடக்கு மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் முயற்சியினை கடந்த அரசாங்கம் முன்னெடுத்தது. இம்முயற்சிக்கு இந்திய அரசாங்கமும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவ முன்வந்தன. இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டது. இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகையில் மகிந்த தலைமையிலான அரசாங்கம் மக்களால் 2015ஆம் ஆண்டு தூக்கியெறியப்பட்டது. ஆட்சிபீடமேறிய இன்றைய நல்லாட்சி அரசாங்கம் வடக்கின் வீ;ட்டுத் திட்டத்தை துரிதப்படுத்துவோம் எனக் கூறி வெளிநாட்டு தனியார் கம்பனியுடன் ஒப்பந்தம்...
Read More

நவநாத சித்தரை படமாக வரைந்த பெண் மறுநாளே மரணம்: (பகுதி-02)

பகுதி-02 இந்தியாவின் கொல்லிமலைக்காட்டிலிருந்து நாவலப்பிட்டிய- குயின்ஸ்பேரி தோட்டத்துக்கு வந்து அற்புதங்களை நிகழ்த்திய நவநாத சித்தரின் வருகை பற்றியும், பெண்கள் குழந்தை பாக்கியம் பெறுவதற்காக இரத்தக்காட்டேரியை அவர் எப்படி கட்டுப்படுத்தினார் என்றும் பகுதி-01 விரிவாக பார்த்தோம். இன்று நவநாத சித்தருக்காக அமைக்கப்பட்ட சிவாலயம் உட்பட மேலும் பல விடயங்கள் பற்றி அறிந்துகொள்வோம். நவநாத சித்தர் ஜீவ சமாதியடைந்த   இடத்தை காட்டியபோது கோவில் தலைவர் கண்கலங்கிவிட்டார். சிறிதுநேரம் மௌனமாக இருந்த அவர் மறுபடியும் நாம் தொடுத்த வினாக்களுக்கு பதிலளிக்க தொடங்கினார். ‘...
Read More

கொல்லிமலைக்காட்டிலிருந்து குயின்ஸ்பேரி தோட்டம்வந்த நவநாத சித்தர்: இரத்தக்காட்டேரியை கட்டுப்படுத்தியது எப்படி? ( பகுதி-01)

இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இறை பக்தியோடு இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள் எனப்படுகின்றனர். கூடுவிட்டு கூடுபாய்தல் உட்பட மேலும்பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவர்களாக அவர்கள் இருக்கின்றனர். ஆனால், அவை எப்படி என்ற இரகசியத்தை அவர்கள் இன்னும் வெளியிடவே இல்லை. அது பரமஇரகசியமாகவே இருந்துவருகின்றது. தீராத நோய்களுக்கான சித்தர்களின் வைத்திய முறைமை, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கங்கள் எல்லாம் எப்படி நடந்தன- நடக்கின்றன என்பது இன்றைய விஞ்ஞான உலகிலும் வியப்பாகவே பார்க்கப்படுகின்றன. பண்டையகாலங்களில் அடர்ந்த காடுகளிலும், மலைஅடிவாரத்திலுள்ள குகைகளிலுமே சித்தர்கள் வாழ்ந்தனர்....
Read More

முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றில் எப்படி செயற்படுகின்றனர்? ( ஓர் அலசல்)

2015 ஜுன் மாதம் 3 ஆம் திகதி உதயமான தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று 3 ஆவது ஆண்டில் வெற்றிகரமாக காலடிவைத்துள்ளது. வடக்கு,கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், உரிமைக் குரல் எழுப்பும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கூட்டணியில் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகியன பங்காளிக் கட்சிகளாக சங்கமித்துள்ளன. குறித்த கூட்டணியிலுள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை பார்ப்போம். தமிழ் முற்போக்கு கூட்டணியானது...
Read More

மலையகத்தில் உயர் கல்வி கற்றோர் “நாசாவிலும் தொழில் புரிகின்றனர்! (மலையக கல்வி ஆய்வு கட்டுரை)

இலங்கையினை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் வாழ்கின்ற ஒரு பகுதியாக மலைநாடு என்பது காணப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகையில் மலையக மக்கள் சுமார் 6 வீதமாக உள்ளனர். தற்போது மலையக பகுதி கல்வித் துறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இலங்கையின் கல்வி வரலாறு பல தசாப்தங்களை கடந்துள்ளது. குறிப்பாக குருகுலக் கல்வி முதல் போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற வெளிநாட்டவர்கள் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார்கள். இந்த வகையில் மலையகத்தில் இன்று மலையகத்தில் உயர் கல்வி துறையானது வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாய்...
Read More

மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா? கொதிக்கிறது கொரிய தீபகற்பம்

உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள விடயம்தான் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்குமிடையில் மூண்டுள்ள போர் பதற்றம். எந்நேரத்திலும் இரண்டு நாடுகளுக்கிடையிலும் போர் வெடிக்கும் சூழல் கொரிய தீபகற்பத்தில் நிலவுகிறதால் உலகின் நான்கு முனைகளின் பார்வையும் வடக்கொரியாவையும், அமெரிக்காவையும் நோக்கியதாகவே 24 மணித்தியாலயமும் உள்ளது. உலக வல்லாதிக்கச் சக்தியான அமெரிக்காவுக்குச் சவால் விடும் வடகொரியாவின் செயற்பாடுகளுக்கு உலகில் பெருவாரியான நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தாலும், அமெரிக்காவுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்ற செய்தியை வடகொரியா கொடுத்த வண்ணம்தான் உள்ளது. வடகொரியாவின் ஆயுத வல்லமையைப் பறைசாற்றும்...
Read More

செத்த பிறகு செய்முறையென்றால் வாழ்க்கை எதற்கு? மீதொட்டமுல்ல பேரனர்த்தம் குறித்து ஒரு ஆய்வு!

மீதொட்டமுல்ல வான்பரப்பை துன்பமேகங்கள் முழுமையாகவே ஆக்கிரமித்துள்ளன. திரும்பும் திசையெல்லாம் துயரம் என்ற இடிமுழக்கத்தோடு கண்ணீர்மழையே பெய்கின்றது. நாலா புறத்திலிருந்தும் மரண ஓலங்கள் ஓங்கி ஒலித்தவண்ணமிருப்பதால் கொலன்னாவைப் பகுதியே மயானபூமியாக காட்சியளிக்கின்றது. உறவுகளையும், உடமைகளையும் இழந்துவிட்டு உயிரைமட்டுமே கையில் பிடித்தப்படி தப்பிவந்தவர்கள் தமது உறவுகளை தேடி அழையும் காட்சியானது பார்ப்பவர்களை கதறி அழவைக்கின்றது. குறிப்பாக குப்பை மேட்டுக்குள் இருந்து சடலங்களை தோண்டிஎடுக்கையில், ஐயோ அது தனது அம்மாவாக இருக்குமோ, அப்பாவாக இருக்குமோ, அக்காவாக இருக்குமோ என்ற மனப் பதற்றத்தில்...
Read More
error: Content is protected !!