முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

ஊடகவியலாளர்களின் எழுத்துரிமையை கட்டிப்போட்டு வைத்திருக்கும்; ஊடக முதலாளிகள்!

“என்னுடன் காரில் வருவதற்கு பலர் விரும்புகிறார்கள்.கார் பழுதடைந்துவிட்டால் என்னுடன் சேர்ந்து பஸ்ஸில வரக்கூடியவர்களே எனக்குத்தேவை” இது அமெரிக்க ஊடகவியலாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ஓப்ரா வின்பிரே கூறியது. இதனை மூத்த ஊடகவியலாளரான வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் தனது முகநூலில் அன்மையில் பதிவு செய்திருந்தார். அமெரிக்காவின் முன்னணி ஊடகவியலாளரான ஓப்ரா அம்மையாரின் வருடாந்த வருமானம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் நமது ஊடகவியலாளர்களின் நிலை வேறு பலருக்கு இது தெரிவதில்லை. இதனால் ஊடகவியலாளர்களை விலைக்கொடுத்து வாங்க பலர்...
Read More

வடக்கின் தலைமைகள் உதட்டளவில் மட்டுமே தமிழ்த்தேசியம் பேசுகின்றன!

தமிழர்களை பலவீனப்படுத்தும் செயலில் ஏனைய சமூகத்தவர்கள் ஈடுப்படுகிறார்கள் என்று யாரவது சொன்னால் அது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல் ஆகிவிடும். தமிழ்த்தேசியம் என பேசும் அரசியல் தலைமைகள் தமிழர்களை பிளவுபடுத்தி பார்ப்பது கண்டிக்கதக்க விடயம். குறிப்பாக வடக்கின் தலைமைகள் வாயலவில் மட்டுமே தமிழர்களின் ஒற்றுமையை குறித்து பேசுகிறது .செயலில் இல்லை. ஏனெனில் அன்மையில் தமிழ் முற்போக்கு கூட்டனியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் சகல தமிழ்க்கட்சிகளும் பிரதேசவாதம் இன்றி ஒன்றிணைய அழைப்பு விடுத்தார். ஆனால் அதற்கு...
Read More

கலாசார ரீதியிலும் மலையக பெண்களுக்கு எதிராக வன்முறை; என்றுமாறும் அடிமைத்தனம்?

ஆண்களுக்கு இணையாக பெண்களும் போராடி பெற்ற வென்ற தினம்தான் மார்ச் 8. இந்த திகதியை சீனா உள்ளிட்ட சில நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளன. இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்புசெய்கின்ற 3 பிரதான துறைகளான சுதந்திர வர்த்த வலயம்¸ புலம் பெயர் பணிப்பெண்கள்¸ பெருந்தோட்ட துறை ஆகியவற்றின் பெண்களே அதிகம் வேலை செய்கின்றனர். 50 சதவீதத்துக்கும் மேலான வருமானத்தை அவர்களே ஈட்டிகொடுக்கின்றனர். அதேநேரம் வாக்காளர்களிள் 56 வீதமானோர் பெண்களாவர். இருப்பினும் இவர்கள் சிவில் அரசியல் உரிமைகள்¸ அதேபோல் பொருளாதார...
Read More

வெலிக்கடை படுகொலை தினம் இன்று அனுட்டிப்பு!

இலங்கை அரசின் முழுமையான அணுசரனையுடன் 33 வருடங்களுக்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையின் அதி உச்சகொடூரங்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் போது இடம்பெற்ற வெலிகடை சிறைச்சாலை படுகொலை நாள் இன்று தமிழர்களால் மிக உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த இலங்கை அரச படையினரில் 13 பேரின் உயிரைப் பறித்ததற்காக பழிதீர்க்கும் வகையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக்...
Read More

மலையக அரசியல் கலாசாரமும், சமூக நகர்வும்! (தனுஷன்)

இனத் துவேசமும், மதத் துவேசமும் வேரூன்றி விருட்சமாகிக் கிடக்கும் இலங்கைத் தீவினிலே, இனபேதம், மத பேதம் தாண்டி ஒரு தாய் மக்களாய் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என வாழும் ஓரிடத்திற்கு உதாரணம் காட்டச் சொன்னால் மலையகத்தை காட்டுவேன், அங்கு வளர்ந்த நாட்களில் ஒரு போதும் நான் கண்டதில்லை இந்த இன, மத துவேசங்களை. மூவின மக்களும் செறிந்து வாழ்ந்த போதும், “மலையகம்” என்ற பதம், இந்திய வம்சாவளி தமிழர்களை அடையாளமிட்டுக் காட்டும் பதம் என்பதை யாரும் மறுக்க...
Read More

தமிழருக்கு துரோகம் செய்யும் சர்வதேசம்; ஜெனிவா மாநாட்டால் என்ன பயன்?

இலங்கையில் யுத்தம் முடிந்த கையோடு மஹிந்த அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா கையாண்ட துருப்புச் சீட்டுத்தான் யுத்தக் குற்ற விசாரணை என்பது. இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிவாரணம் கோரி சர்வதேசத்தை நாடியதும் அந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா.யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறி பல தடவைகள் ஐ.நாவுக்குப் பிரேரணையைக் கொண்டு வந்து அவற்றை நிறைவேற்றவும் செய்தது. இந்த விவகாரத்தில் ஐ.நாவை முன்நிறுத்தி தமிழருக்கு...
Read More

மனதை உருக்கும் மலையகத்தில் இருந்து வந்த சிறுகதை “ஏக்கம்”

ஏக்கம் இயற்கை சீற்றத்திற்குட்பட்டு பிறம்பொடிந்த கூடை போல் ஆங்காங்கே சதுரப் பிளவுகளை கண்டிருந்தது அந்த மண் பாதை. அப்பாதையில் செல்வோர் பத்தடிக்கு ஒரு சருக்குகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும். மலையகத்தில் பிறந்து மண் பாதைகளையும் மலைமேடுகளையும் பற்றிய விளக்கமளிப்பது சற்று விந்தையான விடயம் தான். இருப்பினும் ஆங்கிலேயன் வகிந்தெடுத்த மலைக் கொழுந்தின் தலை மேடுகள் வாரப்படாத வடுக்களாய் காயப்பட்டு நிற்பதை கம்பனிகள் கண்டகொள்ளாதது வேதனை தினமும் விதைத்துத்தான் செல்கிறது. காலங்காலமாய் இப்பாதையில் பயணித்திருப்பினும் இன்று தான் ஒரு...
Read More

இன்னொரு பிரபாகரனின் தோற்றம்?

முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், இன்னொரு பிரபாகரனின் உருவாக்கம் பற்றி எதிரெதிர் முனைகளில் இருந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன. வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக கடந்தவாரம் கொழும்பில் நடந்த பொதுநிகழ்வு ஒன்றில் சி.வி.விக்னேஸ்வரன், உரையாற்றியிருந்தார். ஊடகவியலாளர் குசல் பெரேராவின் நூல் வெளியீட்டு விழாவையடுத்து நடந்த கருத்தரங்கிலேயே, அவர் உரையாற்றியிருந்தார். அவரது உரையின் ஒரு கட்டத்தில் தான், வடக்கில் தற்போதைய இராணுவ நெருக்குவாரங்கள் உள்ள சூழல் தொடர்ந்தும் நீடித்தால், இன்னொரு பிரபாகரன்...
Read More

நல்லாட்சி மீது சர்வதேசத்தின் அதிருப்தி அதிகரிக்கிறதா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. ஜனாதிபதியின் செயலகப் பிரதிநிதிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வலி வடக்கு பாதுகாப்பு வலயப் பகுதியையும்,அகதி முகாம்களையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இந்த வருகையின் நோக்கமானது,தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விட நிலங்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பதும், அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீள்குடியேற்றுவதுமே,ஜனாதிபதி செயலக அதிகாரிகளின் விஜயத்திற்கான நோக்கங்கள் என...
Read More
error: Content is protected !!