முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

இரண்டாம் இணைப்பு- நாவலபிட்டி கலபொட ஆற்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு

நாவலபிட்டி கலபொட ஆற்றின் ஆழமான பகுதியில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டடி பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக வகுப்புக்கு செல்வதாக காதலியுடன் குளிக்க சென்ற மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு!!

மேலதிக வகுப்புக்கு செல்வதாக காதலியுடன் குளிக்க சென்ற மாணவன் உயிரிழப்பு. நாவலப்பிட்டி கலபொட நீர்வீழ்ச்சியில் சம்பவம். நாவலபிட்டி கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பக்தி பரவசத்துடன் இடம்பெற்ற பூண்டுலோயா ஹெரோ கீழ்ப்பிரிவு பால்குட பவனி…

மலையகத்தில் தமிழர்கள் வாழும் பல பிரதேசங்கள் திருவிழா மயமாக காணப்படுகின்றன.அந்தவரிசையில் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மிக கோலாகலமாக திருவிழா இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.5 நாட்கள் திருவிழா காணும் இத்தோட்டத்தில் மூன்றாம் நாளான இன்று பால் குட பவனி மிக பக்திமயமாக இடம்பெற்றது.

வட்டவளையில் வேன் விபத்து – 9 பேர் காயம்!!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் காலி பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 9 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எட்டியாந்தோட்டையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கிந்த தெலிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் பெண்ணின் சடலம் ஒன்று 17.04.2019 அன்று மதியம் மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவத்தனர்.

மகியங்கனை பஸ் விபத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பலி – 4 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகளும் உயிரிழந்த சோகம்!!

பதுளை மகியங்கனை பிரதேசத்தில் 17.04.2019 அன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 6 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

ஸ்டொனிக்கிளிப் பகுதியின் சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது அருகில் நாயின் தலையும் இணங்காணப்பட்டது!!

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்டொனிக்கிளிப் பகுதியில் சிறுத்தையின் உடலொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு அருகில் நாயொன்றின் தலையும் காணப்பட்டுள்ளமை மக்களிடத்தே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத்தை தடை செய்ய தீர்மானம்….

இலங்கையில் மீண்டும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 2 3 163
error: Content is protected !!