அட்டன் நோக்கி பயணித்த பஸ் தெஹியோவிட்ட பகுதியில் விபத்து; 23 பேர் காயம்!
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அட்டன் பிரதான வீதியின் தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 27.11.2017 அன்று பகல் 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து அட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. விபத்தில் பேரூந்து சாரதி உட்பட 23 பேர்... Read More
மலையகத்தின் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி கொட்டகலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது!
கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் கலாமன்றம் ஏற்பாடு செய்துள்ள “மலையக வரலாறும் வாழ்வியலும்” என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி, கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாகியது. கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி குழுவின் பணிப்பாளர் சு.முரளிதரன் இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து 28.11.2017 அன்றும், 29.11.2017 அன்றும் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சயில், மலையக மக்களின் அரசியல், கல்வி, பொருளாதார, வரலாறு தொடர்பான கிடைக்கத்தற்க அரிதான எழுத்து ஆவணங்கள் தொடர்பான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப வைபவத்தில் அட்டன்... Read More
தாய் வெளிநாட்டில் – சித்தியால் சித்திரவதைக்கு உள்ளான சிறுமியை பொலிஸார் மீட்டனர்; பொகவந்தலாவையில் கொடூரம்!
பொகவந்தலாவ போனோகோட் தோட்டத்தில் தரம் 05ல் கல்விபயிலும் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்கு உட்படுத்தபட்ட சித்தியையும் சிறுமியின் மைத்துனர் ஒருவரையும் 04.10.2017. சனிக்கிழமை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளதோடு குறித்த சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தர்மராஜ் சர்மிலா எனும் பத்துவயது சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் சிறுமியின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்துவருவதாகவும் குறித்த சிறுமி கடந்த ஒன்பது வருடகாலமாக தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்ததாகவும் கடந்த வருடம் இவரை சிறுமியின்... Read More
விறகு வெட்ட சென்ற பெண் பரிதாப மரணம், டயகமையில் சோகம்!
டயகம வெஸ்ட் இரண்டாம் பிரிவு தோட்டத்தில் விறகு வெட்ட சென்ற தாய் ஒருவரின் மீது வெட்டப்பட்ட மரம் சரிந்து விழுந்ததில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக மரணித்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் 20.09.2017 அன்று மாலை 6 மணியளவில் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது. உயிரிழந்தவர் 55 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான மயில்வாகனம் இந்திராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவுள்ளது.... Read More
அட்டன் எரிபொருள் நிலையத்தில் இப்படியும் நடந்தது; மக்களே அவதானம்!
அவசர அழைப்பொன்றை மனைவிக்கு எடுக்கவென கைப்பேசியை வாங்கிய நபர் தலைமறைவாகிய சம்பவமொன்று அட்டனில் இடம்பெற்றுள்ளது அட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியரிடம் கைபேசியை பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் நகர மத்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 30.08.2017 மதியம் 1 மணியளவில் எரிபொருள் நிரப்ப வாகண நெரிசல் காணப்பட்ட சந்தப்பத்தில் திடீரென அவ்விடத்திற்கு வந்த நபர் தனது மனைவிக்கு அவசரமாக அழைப்பென்றை எடுக்கவேண்டும் என கூடி எரிபொருள் நிரப்பு ஊழியரிடம் கைபேசியை பெற்றுள்ளார்... Read More
தலவாக்கலையில் ஆட்டோ” மீது மரம் முறிந்து வீழ்ந்தது; பெண்ணொருவர் அந்த இடத்திலேயே பலி!
முச்சக்கரவண்டியின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதுடன் நுவரெலியா அட்டன் மார்க்க போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் சென்கிளோயர் பகுதியிலே 29.08.2017 மதியம் 12.00 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. டிக்கோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச்சென்ற முச்சக்கரவண்டியானது சென்கிளோயர் பகுதியில் சென்றுகொண்டிருக்கையில் பாதையோரமிருந்த ஆல மரமொன்றின் பாரிய கிளையொன்று முறிந்து முச்சக்கரவண்டியின் மீது வீழ்ந்துள்ளதாகவும் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார் முச்சக்ரவண்டியின் சாரதி... Read More
தமிழ் தின போட்டியில் டயகம மாணவன் சாதனை!
அகில இலங்கை ரீதியாக தமிழ் தினப்போட்டியில் முதல் முறையாக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று நு டயகம மேற்கு 02 தமிழ் வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்வி கற்கும் வினுஷகாந் விகாசன் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் முதலாம் பிரிவில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அண்மை காலமாக இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி அனைவரையும் போற்றதக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது... Read More
மஸ்கெலியாவில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனின் உருக்கமான மடல்!
மலையகத்தில் மாற்றம் வேண்டும் அங்கு வாழும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் எம்மில் எவருக்கும் மாற்று கருத்து இருக்கப்போவதில்லை, புதிய அரசு பதவிக்கு வந்தவுடன் எமது வாழ்வில் ஒரு புதுயுகம் பிறக்கும் என புது தெம்பு பிறந்தது, அதே போல மலையகத்தில் நீண்ட காலமாக கோலோச்சி வந்த அரசியல் தலைமையும் வீழ்ந்தது, அங்கு தேனும் பாலும் வழிந்தோடும் என்ற கனவு தொடர்ந்தது, ஆனால் இன்று அதற்கு மாறான ஒரு சூழ்நிலையில் தோட்டத்தொழிலாளர் வாழ்வு அமைந்து... Read More
மலையக மக்களுக்கு பத்தாயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும்; மோடி உறுதி!
மலையக மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இந்தியா அனைத்து பங்களிப்புகளையும் வழங்கும் என பல்லாயிரகணக்கான மக்கள் மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நான்காயிரம் வீடுகளுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படும் என றும் பாரத பிரதமர் உறுதியளித்தார் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களை போன்றே எதிர்காலத்திலும் இலங்கையுடன் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும்... Read More