முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

பசறையில் பஸ் விபத்து – 8 பேர் பலி – பலர் கவலைக்கிடம்

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலபிட்டி வனபகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!!

நாவலபிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி ஹிந்தின்ன வனப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் 31.12.2019.செவ்வாய்கிழமை முற்பகல் 11.30மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் தோட்ட மக்கள்மீது இனவாதிகள் தாக்குதல்!

பெருந்தோட்ட நெடுங் குடியிருப்பு தொகுதிக்குள் நுழைந்த கிராமிய இளைஞர்கள் பலர், தோட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள் ஆகியோர் மீது தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது. பண்டாரவளைப் பகுதியின் ஊவா ஹய்லன்ஸ் பெருந்தோட்ட எல்லவெல பிரிவிலேயே, இக்கொடூரம் அரங்கேறியுள்ளது. இத்தாக்குதலில் தோட்ட இளைஞர்கள், மாணவர்கள் என்ற வகையில் ஐவருக்கு காயங்கள் ஏற்பட்டு, அட்டாம்பிட்டிய கிராமிய அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் க.பொ.த. உயர்தரப் பெறுபேற்றினை எதிர்நோக்கியிருந்த மாணவன் ஒருவனும் அடங்கியுள்ளார்....
Read More

ஹட்டன் பகுதியில் மஞ்சள் கோட்டில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் மோதி விபத்து ஒருவர் காயம்!!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்தியில் உள்ள மஞசள் கோட்டுப்பகுதியில் இன்று (30) பகல் 12.00 மணியளவில் திகதி மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துக்கொண்டிருந்த சொகுசு பஸ்,பத்தனைபகுதியிலிருந்து வருகை தந்த முச்சக்கரவண்டி,கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பிரதேசத்தினை நோக்கி வந்துகொண்டிருந்த ஜீப் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

மலையக பகுதிகளில் அறநெறிப் பண்புகளை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்!

மலையகப் பிரதேசங்களில் உள்ள சிறார்களின் அறநெறிப் பண்புகளை மேம்படுத்தவும் சமய ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தினையும் பாதகாக்கும் நோக்கோடு மலையக சமூக அபிவிருத்திப் பேரவை மற்றும் வன்னி ஹோப்ஸ் அவுஸ்ரேலியா நிறுவனமும் இணைந்து சென் கூம்ஸ் தோட்டம் தேயிலை ஆராய்ச்சி நிலையம் தலவாக்கலையில் இன்று 27.12.2019 சனிக்கிழமை அன்று சென்கூம்ஸ் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மலையக சமூக அபிவிருத்திப் பேரவையின் ஆலோசகர் சிரேஸ்ட சட்டத்தரணி பெ. மோகனதாஸ் பிரதம அதிதியாக...
Read More

மலையக பகுதிகளுக்கு உல்லாச பிராயாணிகளின் வருகை அதிகரிப்பு வசதிகளை செய்து கொடுக்குமாறு கோரிக்கை!

கடந்த சில தினங்களாக மலையக பகுதிகளுக்கு வரும் உல்லாச பிராயணிகளின் எண்ணிகை அதிகரித்துள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஏனைய நாட்களுடன் ஒப்பிடும் போது சாதாரணமாக சுமார் 80 சதவீதம் வரை உயர்ந்து காணப்படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டு உள்ளாச பயணிகள் பெரும்பாலும் எல்ல ,ஹட்டன்,நுவரெலியா,சிவனொளிபாதமலை கண்டி ஆகிய பிரதேசங்களில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடுவதற்கே வருகை தருகின்றனர். இவ்வாறு வருபவர்களில் பெரும் பாலோனோர் புகையிரதத்தின் மூலம் எல்ல வரை செல்வதற்கு விரும்புவதாகவும் ஆனால் போதியளவு புகையிரத வசதிகள்...
Read More

லிந்துலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; ஐவர் காயம்!

அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் 26.12.2019 அன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வெல் பகுதியில் தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் நுவரெலியா பகுதியிலிருந்து பாணந்துறை பகுதியை நோக்கி சென்ற கார் மோதுண்ட வேளையில், காரின் பின்னால் மடுல்சீமையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி காரின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...
Read More

முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி – மூவர் படுங்காயம் வெல்லவாய பகுதியில் சம்பவம்

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
error: Content is protected !!