முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

அமைச்சர் திகா சமர்ப்பித்த; பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் மீது விவாதம் இன்று நாடாளுமன்றில்!

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் சமர்பித்த ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை’ மீதான பாராளுமன்ற விவாதமும் வாக்கெடுப்பும் (19) இடம்பெறவுள்ளது. ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை’ ஒன்றினை உருவாக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்தின் பின் பாராளுமன்றில் சட்டமூலமாக அங்கீகரிப்பதற்கு சமர்பிக்கப்பட்டது. அதன்பின்னர் பாராளுமன்றம் நீதிமன்ற விளக்கத்திற்காக காத்திருந்த நிலையில், எவ்வித எதிர்ப்புக்களும் முன்வைக்கப்படாத காரணத்தால் சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள...
Read More

கொட்டகலையில் மாணவர்களுக்கு மத்தியில் தகாத வார்த்தை பிரயோகத்துடன் சண்டையிட்ட; ஆசிரியைகளை இடமாற்ற கோரி மகஜர்!

மாணவர்கள் மத்தியில் மோதலில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தை பிரயோகம் செய்த ஆசிரியைகளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் நுவரெலியா வலயக கல்வி பணிமனையில் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளளதாக பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ் கிருஷ்னராஜா தெரிவித்தார் நுவரெலியா கல்வி வயத்திற்குட்பட்ட கொட்டகலை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு ஆசிரியைகள் மாணவர்கள் மத்தியில் தகாத வார்த்தை பிரயோகம் செய்து சண்டையிட்டமை தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் முறைபாடு...
Read More

மஸ்கெலியா பெயாலோன் நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மஸ்கெலியா மின்னா பெயாலோன் நீர் தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் இந்த சடலம் 18.09.2018.செவ்வாய் கிழமை மதியம் 12மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் மஸ்கெலியா மின்னா பெயாலோன் தோட்டபகுதியை சேர்ந்த கறுப்பையா லெச்சுமி ஒரு பிள்ளையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது குறித்த வயோதிப பெண் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமற் போனார் அவரின் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்து இருந்ததாகவும்...
Read More

பன்றிக்கு விரித்த வலையில் சிக்கிய ஏழு அடி நீளமான சிறுத்தை!

பட்டிபொல காவல்துறைக்குட்பட்ட போகோம்பர பகுதியில் வலையில் சிக்குண்டு ஏழு அடி நீளம் கொண்ட சிறுத்தை புலியின் உடலம் ஒன்று 18.09.2018.காலை 09மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக பட்டிபொல காவல்துறையினர் தெரிவித்தனர் குறித்த சிறுத்தை புலியின் உடலத்தை இன்று காலை தொழிலுக்கு சென்ற பொதுமக்களால் இனங்கண்டதை அடுத்து பட்டிபொல காவல்துறையினருக்கு தகவல் வழங்கபட்டமை தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த சிறுத்தை புலியின் உடலத்தை பட்டிபொல் காவல்துறையினர் மீட்டதாக மேலும் தெரிவித்தனர். போகம்பர பகுதியில் அதிகமானோர் மரக்கறி விவசாயத்தினை மேற்கொண்டு...
Read More

ராகலை குகையில் மரணித்தவர்கள் உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

இராகலை சென்லெனாட்ஸ் கணிக்கா தோட்டத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் முள்ளன் பன்றி வேட்டையாடச் சென்று கற்குகை ஒன்றில் சிக்குன்று பலியான இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரேத பரிசோதணைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. (17 .09.2018) திங்கட்கிழமை காலை பிரேத பரிசோதணையை சட்டவைத்தியர் ஆர். எம். சமண் மேற்கொண்டதன் பின் 01 மணியலவில் உறவினர்களிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டுள்ளது. இராகலை சென்லெனாட்ஸ் மத்திய பிரிவை சேர்ந்த...
Read More

ஹரோ தோட்டத்தில் இதொகாவின் அனுசரணையில் கிரிக்கட் சுற்றுப்போட்டி!

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடைய ஆலோசனைக்கமைய பூண்டுலோயா ஹெரோ விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி பூண்டுலோயா ஹெரோ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சாரஅமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றி கேடயங்கள், பரிசித் தொகைகள் வழங்கப்பட்டதை இங்கு...
Read More

கொட்டகலை பகுதியில் பிரபல பாடசாலையில் ஆசிரியைகள் குடுமிப்பிடி சண்டை; பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

நுவரெலிய கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரு ஆசிரியைகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை நேரத்தில் பாடசாலை வகுப்பரையில் இரு ஆசிரியைகள் மாணவர்களுக்கு மத்தியில் மோதலில் ஈடுட்டுள்ளனர் மோதல் சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுளதாக நுவரெலியா வலயக்கல்வி அதிகாரி தெரிவித்ததுடன் குறித்த ஆசிரியர்கள் இடையிளான தர்க்கத்தில் போது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்...
Read More

ஆறுமுகனின் நிதி ஒதுக்கீட்டில்: அக்கரபத்தனை பிரதேச சபை ஊடாக வீதி புனரமைப்பு!

அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட எல்பெத்த வட்டாரத்தின் எல்பியன் பிரஸ்டன் தோட்டங்களுக்கான குடியிருப்புகளுக்கு செல்லும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டதை வட்டார பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றதை தொடர்ந்து இவ்வீதியை புணரமைக்க இ.தொ.கா தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கிட்டின் கீழ்,மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் அவர்களினதும் அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் அவர்களினதும் ஆலோசனைக்கு அமைய அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால்...
Read More

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் லெட்சுமி தோட்டத்தில் அமைக்கப்பட்டு கைவிடப்பட்ட மேடையின்; இன்றைய நிலை !

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி ஒதுக்கிட்டில் நாட்டில் பலபாகங்களிலும் ஒவ்வொறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கபட்டு திறப்பு விழாகண்டு கையளிக்கபட்டுள்ள இந்நிலையில் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவு தோட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் ஊடாக புனரமைக்கபட்ட மேடைக்கு என்ன நடந்தது என தோட்டமக்களும் இளைஞர்களும் கேல்வி எழுப்பியுள்ளனர். அந்தவகையில் கடந்த இரணடு வருடங்களுக்கு முன்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக 75.000ருபா நிதி ஒதுக்கிட்டிலும் தோட்ட பொதுமக்கள் மற்றும் தோட்ட இளைஞர்களின் பணத்திலும் அமைக்கபட்ட...
Read More
1 2 3 500
error: Content is protected !!