முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

மீண்டும் கட்சி தாவிய பச்சை தமிழன் வடிவேல் சுரேஸ்…..

மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.

அட்டன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்…

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 8ம் திகதி ஆரம்பமாகியது.

சர்வதேசத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி- டிசம்பர் மாதம் 7ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களின்1000ரூபா சம்பள உயர்வுகோரி யாழ். பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்….

மலையகத் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபையில் நடைபெற்ற மாதாந்த பொதுக் கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு செய்தனர்!!

நுவரெலியா மாநகர சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில் இன்று 13.11.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

1000ரூபா அடிப்படை சம்பள உயர்வுகோரி யாழ்.பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் இன்று- வலிகள் சுமந்தவர்களுக்காய் ஓர் திரள்!!

சுதந்திர இலங்கையில் பொருளாதார சுமையை தாங்கும் ஓர் சமூகம் இன்றும் அன்றாட தேவைக்காக அங்கலாய்த்து கொண்டுள்ளது. அடிப்படையாய் அவர்கள் கோரும் 1000 ரூபா சம்பளத்தை, உரியவர்கள் உடனடியாய் பெற்று கொடுக்க வலியுறுத்தி பல்கலை சமூகமாய் திரள்கிறோம். இடம் : யாழ் பல்கலை பிரதான நுழைவாயில் காலம் : 13.11.2018, செவ்வாய்க்கிழமை நேரம் : பி.ப 12.45 மணி

பதுளை – வெலிமடை வீதியில் மண்சரிவு அபாயம் -சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பதுளை – வெலிமடை வீதியின் மொரேதொட்ட பகுதியில், மண்சரிவு அபாயம் நீடித்து வருவதால், மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு, வாகன சாரதிகளுக்கு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் பரவும் “லிஸ்மானியஸ்“ தோல் நோய்- மக்களே அவதானம்

மத்திய மாகாணத்தில் சிறிய வகை ஈக்களினால் தோல் நோயொன்று பரவுவதாகவும், இதனால் ஏற்படும் புண் நீண்ட நாள்களுக்கு குணமாகாமல் இருக்குமாயின், தகுந்த வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சைப் பெறுமாறும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!