முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

எதிர்வரும் தினங்களில் ஆயிரம் ரூபா அடிப்படை நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடரவுள்ளதாக ஒருமீ அமைப்பு தெரிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களை எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ள உள்ளதாக சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மும்மத மக்களும் இணைந்து அட்டனில் பொங்கல் கொண்டாட்டம்!!

அட்டன் சக்தி மண்டபம் முன்னால் மும்மத மக்களும் இணைந்து 15.01.2019.செவ்வாய்கிழமை பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்த நகிழ்வானது அட்டன் வர்த்தகர்ளால் ஏற்பாடு செய்யபட்டிருந்தமைகுறிப்பிடதக்கது. இதன் போது பொங்கல் விழாவிற்க்கு சமூகம் அளித்து இருந்த மும்மதத்தைச் சார்ந்த மக்களுக்கும் பால் கடலை பொங்கல் என்பன சமைத்து பகிர்த்தளிக்கபட்டது இதேவேலை பொங்கல் பொங்கி சூரியபகவானுக்கு மும்மதத்தை சார்ந்த மக்கள் நன்றியினை தெரிவித்தமையும் குறிப்பிடதக்கது.   (பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

10அடி நீளம் கொண்ட மலைபாம்பு பொகவந்தலாவையில் பிடிக்கபட்டது!!

பொகவந்தலாவ கிலானி தோட்டத்திற்க்கு செல்லும் பிரதான வீதியில் பத்து அடி நீளம் கொண்ட பாரிய மலை பாம்பு ஒன்று விஷேட அதிரடி படையினரால் 14.01.2019 திங்கள் கிழமை இரவு 11.30மணி அளவில் பிடிக்கபட்டுள்ளதாக விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்

அரசியலில் பொறுமையாக இருந்து முடிவெடுக்க வேண்டும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

பலரும் எனக்கு அமைச்சு பதவி கிடைக்காது எனவும் அதற்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டதாகவும் கூறிவந்தார்கள். ஆனால் நான் பொறுமையாக இருந்த காரணத்தால் இன்று எனக்கு நல்லதொரு அமைச்சு கிடைத்திருக்கின்றது. எனவே இது எனது பொறுமைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். என்றுமே அரசியலில் பொறுமையாக இருந்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

இரு குழுக்களுடையில் ஏற்பட்ட மோதலின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கி உயர்தர மாணவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி- கொட்டகலையில் சம்பவம்!!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை யூனிபீல்ட் பகுதியில் 13.01.2019 அன்று இரவு பத்து மணியளவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது மாணவனின் வீடும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

திலகரின் பொங்கல் வாழ்த்து செய்தி….

தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற தமிழர் பண்பாட்டு நம்பிக்கை வார்த்தைகளில் என்றும் போல் இன்றும் நம்பிக்கை வைத்து மலர்ந்திதிருக்கும் இந்த இனிய  தைப்பொங்கல் நாளில் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

நாவலபிட்டி மாவெளி கங்கையில் நீராட சென்ற பாடசாலை மாணவன் நீரில் முழ்கி பலி

நாவலபிட்டி மாவெளி கங்கையில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
error: Content is protected !!