முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

‘காதல் ரோஜாவே…” பாடினாலும் அமைச்சர் கனவு பலிக்காது ராஜாவே; திலகர் எம்.பி. சாடல்!

மே தினத்தன்று சில அமைச்சர்களை அழைத்து வந்து ‘காதல் ரோஜாவே…’ பாட்டு பாடியும் அடுத்த அமைச்சரவையில் தங்களுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கும் என்றும் அன்று கைதட்டு வாங்கிக் கொண்டவர்கள் இன்று தோட்டம் தோட்டமாகச் சென்று கைதட்டிக் கொண்டு நன்றி தெரிவிக்கிறார்கள் அது ஏன் தெரியுமா? தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைத்த மேடையின் ஓரத்தில் தங்களுக்கும் இடம் ஒதுக்கியமைக்காக என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் வீடுகளை இழந்த...
Read More

எச்சரிக்கை” பொல்கொட அணை உடையும் அபாயத்தில்!

பொல்கொட அணைக்கட்டானது பெய்துவரும் கனமழை காரணமாக, உடையும் நிலையில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிந்துள்ளது. இதனால்பொல்கொட அணையை அண்மித்துள்ள தெற்கு பாணந்துறை, பாணந்துறை வடக்கு, பன்னபிடிய, பண்டாரகம, மொரோந்துடுவா, குருவந்தோட மற்றும் வாட்டுவா பிரதேசங்களை சேர்ந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 102 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலி,...
Read More

குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க முயலும் மலையக அரசியற் கட்சி!

அட்டனில் ஒரு பிரபல்ய உல்லாசவிடுதி அதன் உரிமையாளர் அந்த விடுதியை மூன்று மாடிகளாக உயர்த்தினார் உடனே அதற்கு எதிராக மாநகரசபை வழக்கு தொடர்ந்தது, மாநகர சட்டவிதிகளை மீறி அந்த கட்டிடம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு. இந்த விடுதி உரிமையாளர் மலையகத்தை சேர்ந்த ஒரு அமைச்சரின் நெருங்கிய நண்பரும்கூட, மாநகரசபை தொடர்ந்த வழக்கை மீண்டும் “அப்பீல் செய்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை கட்டிடம் அப்படியே கிடக்கிறது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மலையகத்தின் பிரதான...
Read More

மீட்பு பணியில் ஈடுபட்ட “ஹெலியில் பிறந்த குழந்தை மரணம்; இரத்தினபுரியில் சம்பவம்!

அனர்த்தத்தில் மீட்கும் பணியில் ஈடுபட்ட ஹெலியில் தாய் ஒருவர் பிரசவித்த குழந்தை மரணித்த சம்பவமொன்று பற்றி இரத்தினபுரி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கலவானயில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டு இராத்திபுரி நோக்கி பயணித்த உலங்கு வானுர்தியிலேயே இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது. குழந்தையை பாதுகாக்க இரத்தினபுரி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கலவானை வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியது; நோயாளர்களை விமானப்படை மீட்டது!

இரத்தினபுரி மாவட்டம் கலவானை வைத்தியசாலை முழுவதுமாக வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வைத்தியசாலைக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கலவானை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களை சீரற்ற கால நிலை காரணமாக பாதுகாப்பாக மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் விமானப்படையினரின் கடுமையான பிரயத்தனங்களின் மத்தியில் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

நீரேந்து நிலைகளில் 27இல் இருந்து 33ஆக நீர்மட்டம் உயர்வு; மின்சார தடை தொடர்பாக அறிவிக்க புதிய இலக்கம்!

சீரற்ற காலநிலை காரணமாக மின்தடை ஏற்பட்டிருப்பின் அது தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மின் தடை தொடர்பில் 1987, 1910 மற்றும் 1901 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை கால நிலை காரணமாக 3 இலட்சத்து 36 ஆயிரம் பேருக்கு மின்சாரம் பெற்றுக்கொடுப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்...
Read More

இதுவரை 113பேர் பலி; ஐந்து லட்சம்பேர் பாதிப்பு 185 முகாம்களில் மக்கள் தஞ்சம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன் தெரிவித்தார். இதுவரை 91 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் அசாதாரண காலநிலை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு தற்போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம்பெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தகவலை வெளியிட்டார். இதேவேளை, 4 இலட்சத்து...
Read More

தொடர்ந்து 36 மணித்தியாலங்கள் கடும் காற்றும் மழையும் தொடரும்; வானிலை அவதான நிலையம் அறிவிப்பு!

வானிலை அவதான நிலையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கை நாட்டில் அடைமழை குறைவடையும் சாத்தியம் உள்ள போதிலும் தென்மேற்கு பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மணிக்கு...
Read More

களுத்துறை அதிவேக பாதை மூடப்பட்டது!

களுத்துறை அதிவேக பாதை வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளது அதிக வெள்ளம் இப்பாதையை முடியிருப்பதால் இதில் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
error: Content is protected !!