முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

தலைநகரில் மலையகத்தவர் உதிரிகளாக வாழ்வதா? கருடனுக்கு வந்த மடல்!

மலையக பகுதிகளில் இருந்து புறப்பட்டு கொழும்பில் தொழில் புரியும் மலையக உறவுகளே! நீங்கள் செய்யும் தொழிலை கேவலப்படுத்தி அண்மையில் இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டமை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பொங்கி எழுந்த உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. தொழிலை கேவலப்படுத்தும் ஒரு திட்டத்துடன் நாம் குறிவைக்கப்பட்டோம் என்பதை அறிவீர்கள்? இந்த தொழில்களை இலங்கையில் புரிபவர்கள் நாம் மட்டுமா? இல்லை அனைத்து சமூகங்களை சார்ந்தவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள், மலையகத்தை சார்ந்தவர்கள் மட்டும்தான் கூலிவேலைகளிலும், கடைகளில் சிப்பந்திகளாகவும்...
Read More

ஆறுமுகனின் புதல்வர் ஜீவன் தொண்டமானுக்கு இதொகாவில் முக்கிய பதவி!

இதொகாவின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் அவர்களின் வாரிசு ஜீவன் குமாரவேல் தொண்டமான் இதொகாவின் அங்கத்தவராகியுள்ளதுடன், இதொகாவின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக நியமனம் பெற்றுள்ளார் என தெரியவருகிறது. அண்மையில் பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அங்கத்தவராக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார் என உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிலையத்தில் தீப்பற்றிக்கொண்ட” பவுசர்!

கொழும்பு- கண்டி வீதியில் கலெக்டிஹேன பகுதியில் எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த “பவுசர் திடீரென தீப்பிடித்துக்கொண்டமையால் அப்பகுதியில் பாரிய தீ ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சிளிக்கிறது, இந்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை

உள்ளூராட்சி சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

வட்டாரம் பிரிப்பது மாத்திரம் மலையக மக்களை பொறுத்தவரை பயன் தரப்போவதில்லை; நாடாளுமன்றில் அமைச்சர் ராதா!

உள்ளுராட்சி தேர்தலில் வட்டார¸ விகிதாசார முறையை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையை நானும்¸ நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மலையக மக்கள் முன்னணியும் வரவேற்கின்றது ஒரு படி முன்னேற்றகரமானது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அடிப்படையில் உள்ளுராட்சி தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்ட பிரதான விடயங்களாவன. வட்டாரங்களுக்கான எல்லை நிர்ணயம்¸ அதில் கடைப்பிடிக்க வேண்டிய அளவு கோள்களில் இனச்செறிவு¸ இன தனித்துவம் பேணப்பட்டு¸ வட்டார முறை ஏற்படுத்தப்படாமை¸ மலையக தமிழ் மக்கள்¸ முஸ்லிம் மக்கள் போன்ற சிறுபான்மையினரை அவர்கள் சிறுபான்மையாக...
Read More

மலையக இளைஞர்கள் தலைமைத்துவத்தை ஏற்க தயாராக வேண்டும்; அமைச்சர் திகா அறைகூவல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எமது இளைஞர்கள் தயாராகி தலைமை ஏற்கத் தயாராக வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் வேண்டுகோள் விடுத்தார். அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமாகிய ஜீ. நகுலேஸ்வரன் தலைமையில் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இளைஞர் படையணி உருவாக்கம் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்...
Read More

நீதியமைச்சர் பதவியை பறிகொடுத்தார் விஜேதாச!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவரது பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அமைச்சர் விஜயதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக விஜயதாச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் அமைச்சரவைப் பொறுப்புக்களை வகிக்கத் தகுதியற்றவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய அவர் வகிக்கும் அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் அவரை நீக்குமாறு ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின்...
Read More

நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி சபைகளை அதிகரிக்க அரசு பச்சைக்கொடி; அமைச்சர் மனோ தெரிவிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டுவதற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. சற்று முன் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில் நாம் நடத்திய சந்திப்பின் போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டது. இன்று காலை நாடு திரும்பிய தன்னிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்று பிரதேச சபைகளின் எண்ணிக்கையை கூட்டும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்தார்....
Read More

தமிழை வாசிக்க தமிழர்களுக்கு, என்னால் கண்ணாடி கொடுக்க முடியாது; சபையில் அமைச்சர் மனோ கணேசன்!

நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக, எழுத்து பிழையியில்லாமல் இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதப்படுமானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். அப்படி வழங்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் கிடையாது நாடு முழுக்க சிங்களமும், தமிழும் சமமான ஆட்சி மொழிகள். ஆகவே அரசாங்க பெயர் பலகைகள் எழுதும் போது, வடக்கு, கிழக்கில் தமிழ், சிங்களம்,ஆங்கிலம் என்ற வரிசை...
Read More
error: Content is protected !!