முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

ஆசிரியர் உதவியாளர்களை பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பமறுப்பது மனித உரிமை மீறலாகும்: இ.தொ.கா கடும் சீற்றம்!

மலையக தமிழ் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை தமது விருப்பத்திற்கேற்ப ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு சென்று பயிற்சி பெறுவதை தடுப்பது மனித உரிமை மீறலாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். “ஆசிரியர்கள் தொலைக்கல்வி மூலம் பயிற்சி பெறுவதா அல்லது ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு சென்று பயிற்சி பெறுவதா என்பது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விருப்பத்திற்குரியது. அந்த விடயத்தில் தலையீடு செய்வதற்கோ, தடுத்து நிறுத்துவதற்கோ கல்வி அமைச்சிற்கு எவ்விதமான உரிமையும் கிடையாது. 6000ரூபா சம்பளத்தை...
Read More

ஆசிரியைமீதுமோதி மோதியது ஆளில்லா ஆட்டோ; ஹட்டனில் சம்பவம்

ஹட்டன், பண்டாரநாயக்கபுர வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று தானாக இயங்கி ,இஜிராபுர வீதியின் பக்கம் வேகமாக சென்று ஆசிரியை ஒருவர் மீது மோதியதால் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று காலை (30) 7.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆட்டோ சாரதி ஆட்டோவின் கைத்தடையினை இழுத்து, வீதியோரத்தில் ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது கைத்தடை தளர்ந்து ஆட்டோ வேகமாக பள்ளத்தை நோக்கி சென்றுள்ளது. அவ்வேளையில்,...
Read More

எஸ்.பியின் கைகளுக்குள் செல்கிறது மலையக அபிவிருத்தி அமைச்சு!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்திவருகின்றார். இதன்படி எந்தெந்த அமைச்சுப் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், எவ்வாறான விடயதானங்களை கைமாற்ற வேண்டும் என்பது பற்றி தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக அவர் விசேட குழுவொன்றை அமைத்துள்ளார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அந்தவகையில், சமூகநலன்புரி அமைச்சராக இருக்கும் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் மலையக அபிவிருத்தி அமைச்சு பொறுப்பும் ஒப்படைக்கப்படவுள்ளது. கலை, கலாசார...
Read More

6 வருடங்களுக்கு பிறகு ஐ.தே.கவில் அதிரடி மாற்றங்கள்; பிரதித் தலைவராகிறார் பொன்சேகா; மலையகத் தமிழர் எவருக்கும் இடமில்லை

தேசிய அரசின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஆறுவருடங்களுக்கு பிறகு எதிர்வரும் 5 ஆம் திகதி அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன என்று அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. கட்சியின் முக்கியப் பொறுப்புகளை இரண்டாம்நிலை தலைமைத்துவத்திடம் கையளிக்கும் நோக்கிலேயே இந்த மாற்றம் நிகழவுள்ளது என்றும், எதிர்வரும் 5 ஆம் திகதி கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இதற்கான ஒப்புதல் பெறப்படும் என்றும் தெரியவருகின்றது. இதன்படி தற்போது ஒன்றாக இருக்கும் பிரதித்...
Read More

நுவரெலிய மாவட்ட தமிழ்மொழிமூல தொண்டர் ஆசிரியர்களுக்கு மத்தியமாகாணசபை கதவடைப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் பணியாற்றும் தமிழ் மொழிமூல தொண்டர் ஆசிரியர்களையும் ஆசிரிய உதவியாளர்களையும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்சிப் பெறுவதற்கான அனுமதியை வழங்க மத்திய மாகாண கல்வித் திணைக்களம் மறுப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைவதற்கான நேர்முகத் தேர்வுக் கடிதங்களில் கையெழுத்திட கல்வித் திணைக்கள அதிகாரிகள் மறுத்துள்ளதாக ஆசிரிய உதவியாளராக பணியாற்றும் ஒருவர்தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் பணியாற்றும் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய உதவியாளர்களும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைவதற்கான நேர்முகத்...
Read More

அடாவடியில் இறங்காதே” தெல்தெனிய பொலிஸார்மீது வேலுகுமார் பாய்ச்சல்!

“ இந்த நாட்டில் எங்களுக்கும் சமவுரிமை இருக்கின்றது; ஆகவே, இரண்டாம்நிலைக்கு தள்ளுவதற்கு முற்படவேண்டாம்’’- என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேலுகுமார் எம்.பி. அத்துடன், தெல்தெனியப் பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும் அவர் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். தெல்தெனிய நகரில் இன்று நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் களமிறங்கி கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். “ 181 குடும்பங்களுக்கு காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த காணியில் குடியமர்வதற்குரிய உரிமை மக்களுக்கு இருக்கின்றது. இதற்கான துப்பரவு பணிகளை செய்வதற்கு அவர்கள்...
Read More

எயார்பெர்க் தோட்ட மக்களின் போராட்டமும்; கண்டு கொள்ளாத அரசும்!

தற்போது இலங்கை, கண்டி மாவட்டத்திலுள்ள ஹுன்னஸ்கிரிய எயாபார்க் தோட்ட மக்கள் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். தமது வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்யவேண்டாம், அடிப்படை வசதிகளை செய்து தாருங்கள் என்று கோரி கடந்த பெப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை போராட்டம் நடத்தியிருந்தனர். இலங்கை செங்கொடி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. போராட்டம் உக்கிரமானதையடுத்து இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவாத்தையில் ஈடுபட்டு தீர்வுகளை வழங்குவதாக தோட்ட மக்களுக்கு...
Read More

மலையக மக்கள் ஏமாளிகள் அல்லர்; இ.தொ.காவுடன் இணைந்து வீறுநடைபோடுவர்!

பெருந்தோட்டத்துறை சேவையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதிக அக்கறை கொண்டுள்ளது என அதன் பொதுச்செயலாளரான ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார். மலையகத்தின் படித்த சமூகமொன்றின் பிரதிநிதிகளான இவர்களின் வாழ்வாதாரம், வீடில்லாப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் பெருந்தோட்டத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார். பெருந்தோட்ட சேவையாளர்களின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். “பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கும் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். அத்துடன், கணக்கில் போன்ற...
Read More

1939 இல் கட்டப்பட்ட கட்டத்திலேயே பசறை நீதிமன்றம் இயங்குகிறது; பலவழிகளினும் அசெளகரியம்!

பிரித்தானியரின் ஆட்சி காலத்தில் 1939ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சிறிய கட்டிடமொன்றிலேயே, இதுவரை காலம் பசறை மஜிஸ்ரேட் நீதிமன்றம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. பசறை பொலிஸ் நிலையத்திற்கருகாமையில் அமைந்துள்ள இக்கட்டிடத்தில் போதிய இடவசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இன்மையினால், இந் நீதிமன்றத்தை நாடி வரும் மக்கள் பெரும் அசௌகரியங்ளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இந்நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடமொன்றினை நிருமாணிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதற்கான காணித்துண்டொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு, இழுபறி நிலை தொடர்ந்த வண்ணமுள்ளன. தற்போது, பசறைப்பகுதியின் பரகொல்லை என்ற இடத்தில்,இலங்கை போக்குவரத்து...
Read More
error: Content is protected !!