முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

திருமணம் நடந்து 21 நாட்களில் இளம் பெண் தற்கொலை ராகலையில் சம்பவம்!

திருமணம் முடித்து 21 நாட்களே ஆன நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவமொன்று ராகலை கோனபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. ராகலை கோனபிட்டியை சேர்ந்த செல்வராஜ் பிரியதர்ஷினி என்ற 28 வயதான இளம் பெண்ணொருவரே இவ்வாறு  தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது கணவன் வேலையில் இருந்து வீடு திரும்பியபோது அவரது புது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்த மர்ம மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை செய்து...
Read More

தெரசா மே பிரிட்டன் பிரதமர் தேர்வில் முன்னணி!

இலண்டன் – பதவி விலகிச் செல்லும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்குப் பதிலாக கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்புகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆகக் கடைசியான தகவல்களின்படி, தெரசா மே முன்னணி வகிக்கின்றார். இவர் பிரிட்டனின் நடப்பு உள்துறை அமைச்சராவார். முதலில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த தெரசா மே, தற்போது மக்கள் தீர்ப்பின்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் என...
Read More

தமிழ் இஸ்லாமிய உறவுகளுக்கு கருடனின் ஈகை வாழ்த்துக்கள்!

ஷவ்வல் பிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், முஸ்லிம்கள் நாளை ரமழான் பெருநாளை கொண்டாடுவர் என்றும் அறிவித்துள்ளனர்.

சவுதி அரேபியா: 24 மணி நேரத்தில் 3 தற்கொலைத் தாக்குதல்கள்!

ஜெட்டா – சவுதி அரேபியாவின் மூன்று வெவ்வேறு நகர்களில் கடந்த 24 மணி நேரத்தில் அடுக்கடுக்கான மூன்று பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முதல் இரண்டு தாக்குதல்களில் யாரும் பாதிப்படையவில்லை. ஆனால், சவுதி அரேபியாவின் இராணுவத்தையும், மேற்கத்திய நாடுகளின் நலன்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் முஸ்லீம்களின் புனிதப் பெருநாளான நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவிருக்கும் வேளையில் இந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. முதலாவது தாக்குதல், செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கு முன்னதாக ஜெட்டாவில்...
Read More

சிறுவர்களை வேலைக்கமர்த்தல், அவர்கள் மரணமடையும் போது அறிக்கை விடும் கலாச்சாரத்தை மாற்றியாக வேண்டும்!

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர்கள் கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்படுவதும் அவர்கள் மரணமடையும் போது அரசியல்வாதிகளும் சில வேளை அரச சார்பற்ற நிறுவனங்களும் அறிக்கை விடுவதும் ஒரு கலாச்சாரமாகியிருக்கிறது. சுமதி, ஜீவராணி உட்பட மரணடைந்த பல சிறுவர்கள் தொடர்பாக அரசியல்வாதிகள் ஆர்பாட்டங்களும் அறிக்கைகளும் வெளியிட்டதுடன் சில வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால் எவ்வித ஆக்கபூர்வ பிரதிபலனும் இதுவரை கிடைக்கவில்லை. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது அரசியல்வாதிகள் எவரும் உதவி செய்யவில்லை என்று மக்கள் குறை சொல்வதும் ஒரு கலாச்சாரமாயியுள்ளது. பெரும்பான்மை அல்லது...
Read More

நோர்ட்டன் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

நோர்ட்டன் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இந்த துப்பாக்கி நபர் தொடர்பான மேலதிக செய்தி, விபரங்கள் கிடைத்ததும் விரிவான செய்தி வெளியாகும்.   நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர்.

மஸ்கெலியாவில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட வியாபாரி கைது!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட வியாபாரி ஒருவரை மஸ்கெலியா பொலிசார் கைது செய்துள்ளனர். மேற்படி மாணவியை தனது வியாபார நிலையத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய மேற்படி வியாபாரி முற்பட்டார் என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து வியாபாரி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வியாபாரியை நீதிமன்றில் ஆஜார் செய்ய இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சி உறுப்புரிமையும் பதவியும்!

அமைச்சர் சரத் பொன்சேகா சற்று முன்னர் சிறிகொத்தவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட சரத் பொன்சேகாவிற்கு களனி தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

41 பேர் பலி – 239 பேர் காயம் : இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது!

இஸ்தான்புல் – புதன்கிழமை அதிகாலை மும்முனைகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்தான்புல் நகரின் அதாதுர்க் விமான நிலையத்தின் ஒரு பகுதி இன்று மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். 239 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 109 பேர் சிகிச்சைகளுக்குப் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து இல்லம் திரும்பினர். இறந்தவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்களாவர்.
error: Content is protected !!