முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

தேயிலை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி!

தேயிலை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான தேயிலை ஏற்றுமதி வருமானம் சுமார் பத்து வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இரண்டு மாத காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் 221.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டில் அந்தத் தொகை 200.4 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி மற்றும் கேள்விக்...
Read More

இன்று சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம்!

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். உலகளாவிய ரீதியில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தப்படுவதற்கு எதிராக 2002 ஆம் ஆண்டு உலக தொழிலாளர் சம்மேளனத்தால் இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. உலக தொழிலாளர் சம்மேளனத்தின் தகவலுக்கு அமைய உலகளாவிய ரீதியில் 168 மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் தொழிலாளர் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் வலையமைப்புக்கு எதிராக ஒன்றிணைவோம் என்பதே இந்த வருடத்திற்கான சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தின் தொனிப்பொருளாகும். இதேவேளை இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும்...
Read More

கேகாலை மாவட்டத்தில் மேலும் 636 இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

கேகாலை மாவட்டத்தில் மேலும் 636 இடங்கள் மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதிகளை சேர்ந்த 2800 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு அபாய எச்சரிக்கை மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதிகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் , மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து...
Read More

கச்சத்தீவு அந்தோணியார் கோவிலுக்கு வந்தபோது கைக்குழந்தையுடன் நடுக்கடலில் தத்தளித்த தம்பதி!

கச்சத்தீவு அந்தோணியார் கோவிலுக்கு வந்தபோது நடுக்கடலில் கைக்குழந்தையுடன் பரிதாபமாக தத்தளித்த இலங்கை தம்பதியை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமாருக்கு சொந்தமான விசை படகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 மீனவர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று இவர்கள் மீன்பிடித்துக்கொண்டு நாகை துறைமுகத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது நாகை கடற்கரையில் இருந்து 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் பைபர் படகு ஒன்று தத்தளித்த...
Read More

தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 2500/- தோட்டத் தொழிலாளருக்கு மறுக்கப்பட்டுவிட்டது!: கணபதி கனகராஜ்

வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் அறிவித்த தனியார்துறை ஊழியர்களுக்கான மாதாந்தம் 2500/-ரூபா சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளருக்கு மறுக்கப்பட்டுவிட்டது. அதே போல ஏப்ரல், மே மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட நாலொன்றுக்கு 100ரூபா இடைக்கால நிவாரண கொடுப்பனவும் காணல் நீரான கதையாகிவிட்டது என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வின் தற்போதய நிலைமை குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தோட்ட தலைவர்கள், மகளிர் காங்கிரஸ் தலைவிகள், மற்றும் இளைஞர்...
Read More

போலி இலக்க தகடுடன் அதிவேக பாதையில் பயணித்த நவீன வாகனத்துடன் ஒருவர் கைது!

போலி வாகன இலக்க தகடுடன் அதிவேக பாதையில் பயணித்த அதி நவீன வாகனத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொடகம பகுதியில் மேற்படி வாகனத்தை பின் தொடந்து சென்ற பொலிசார் நபரை கைது செய்ததுடன் வாகனத்தையும் கைப்பற்றினர். மேற்படி நபர் தான் பிரதமரின் அலுவலகத்தில் சேவையாற்றுபவர் என விசாரணைகளில் தெரிவித்துள்ளார். விசாரணைகளில் பதுளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 32 வயதுடைய அவரிடம் இருந்து மேலும் மூன்று போலி வாகன இலக்க தகடுகள் மீட்கபட்டுள்ளதாக் பொலிசார் அறிவித்துள்ளனர்.

சிறையில் 25 ஆண்டுகள் நிறைவு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி இன்று பேரணி!

ராஜீவ் காந்தி வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், கலையரசன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் கூட இதில் இணைந்து கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளும், அமைப்புகளும் இன்று கோட்டை நோக்கிப் பேரணி நடத்துகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக்...
Read More

நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்!

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தையார் நீலமேகன் இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 62. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். சந்தானத்தின் சொந்த ஊரான சென்னைக்கு அருகிலுள்ள பொழிச்சலூரில் சந்தானத்தின் தந்தையாரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

மாத்தறை, புனித தோமஸ் கல்லூரி மாணவர் ரயிலில் விழுந்து தற்கொலை!

மாத்தறை, புனித தோமஸ் கல்லூரியில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவனொருவர் மாத்தறை நுபே பிரதேசத்திற்கருகில் பயணித்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலிஞ்ஞவில, கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசித்து வந்த வீ.ஜீ.ஹரின் என்னும் பாடசாலை மாணவனே குறித்த தற்கொலைச் சம்பவத்தில் பலியாகியுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது, குறித்த மாணவன் நேற்று காலை பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். அத்துடன் தனது தாய்க்கு அழைப்பொன்றை மேற்கொண்டு தான் தற்கொலைச் செய்துக் கொள்ளப்...
Read More
error: Content is protected !!