முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 22, 2016

இன்றும் கன மழை பெய்யலாம்! : வளிமண்டலவியல் எதிர்வு கூறல்

மேல், வட மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்றும் (22) மழை பெய்யக் கூடும் என வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளி மண்டளவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை...
Read More

பொகவந்தலாவையில் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட மாணவியே தற்கொலை!

கடந்த மாதம் முச்சக்கரவண்டியில் கடத்தப்பட்ட மாணவியே தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் பொகவந்தலாவ ஆரியபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதியோடு ஏற்பட்ட காதலே இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. மேற்படி மாணவி தற்கொலை செய்து கொண்ட விடயம் தொடர்பில் கருடன் தனது கவலையை தெரிவித்துக் கொள்கிறது. சதீஸ்.

தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் கையளித்தார் ஜெயலலிதா!

தமிழக ஆளுநர் ரோசய்யாவை இன்று சனிக்கிழமை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா, புதிய அமைச்சரவையில் பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியலையும் அவரிடம் கையளித்தார். முதல்வர் ஜெயலலிதா நாளைமறுதினம் திங்கட்கிழமை12 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம் முதல்வர் ஜெயலலிதா. பொது, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை, காவல் மற்றும் உள்துறை...
Read More
error: Content is protected !!