முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 24, 2016

அமெரிக்கத் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா மன்சூர் பலி!

காபூல் – ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க படையின் ஆளில்லா விமானங்கள் தலீபான் தலைவர் முல்லா மன்சூர் மற்றும் அவரது கூட்டாளிகளை கண்காணித்து வந்தன. இந்நிலையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மன்சூர் மற்றும் அவனது கூட்டாளியுடன் ஒரு காரில் சென்று கொண்டிருந்தபோது ஆளில்லா விமான தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஆப்கானிஸ்தானின் உளவு...
Read More

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பலி!

ஜகர்தா – இந்தோனேசியா நாட்டுக்கு உட்பட்ட சுமத்ரா தீவில் உள்ள ஏரிமலை வெடித்து தீப்பிழம்பை கக்கிய சம்பவத்தில் ஏழுபேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடாக இருந்து வருகிறது. இங்குள்ள தீவிகளில் காணப்படும் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. பார்வைக்கு அமைதியாக காணப்படும் இந்த எரிமலைகள் சீறத் தொடங்கினால் நூற்றுக்கணக்கான உயிர்களை பதம்பார்க்காமல் அடங்குவதில்லை என்பதை சமீபகால நிகழ்வுகள் உணர்த்தியுள்ளன. இந்நிலயில்,...
Read More

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் குறைந்துள்ளது! பலத்த காற்றுடன் மழை

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் குறைவடைந்துள்ளபோதிலும் பல பகுதிகளில் பலத்தகாற்றுடன் மழை பெய்து வருவதை அவதானிக்க முடிகிறது. மேற்படி மாவட்டத்தில் காவத்தை, நிவித்திகலை, கிரியெல்ல, கொலன்ன, எஹலியகொடை,குருவிட்ட, பலாங்கொடை, நிவித்திகலை, எலபாத்த ஆகிய நகரை அண்மித்த பகுதிகளில்இன்று வானம் மப்பும் மந்தாரமான காலநிலையில் காணப்படுவதுடன் பல பிரதேசங்களில் காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 6698 பேர்அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் மத்திய நிலையங்களில் தொடர்ந்து தங்கிவருகின்றனர். இதைதவிர காவத்தை பொரோணுவ தோட்ட...
Read More

27 வருடங்களின் பின்னர் புலத்கொஹுபிட்டியவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம்!

புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் பாரிய இயற்கை அனர்த்தம் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் நாடு முழுவதும் 300 பேர்  வரையில் உயிரிழந்திருந்ததாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் டி.பி.அல்விஸ் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். குறிப்பாக கேகாலை மாவட்டம் புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளின் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 244 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில்...
Read More

பாடசாலைகள் நாளை திறக்கப்படும்: சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும்!

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஆயினும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் இதற்குள் உள்ளடங்க மாட்டாது. இயற்கை அனர்த்தம் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகள் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் மூடப்பட்டன. எவ்வாறாயினும், சப்ரகமுகவ மாகாண வயலக் கல்விப் பணிப்பாளர்களின் முடிவுக்கமைய அங்குள்ள பாடசாலைகளை மீளவும் திறக்க முடியும் என்று கல்வியமைச்சின் செயலாளர் டப்ளியு.எம். பந்துசேன தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் இன்னும் வெள்ளம் மற்றம் மண்...
Read More
error: Content is protected !!