முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 25, 2016

டெஸ்ட் தொடரில் துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக மாற்றுவீரராக சமிந்த!

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியிலிருந்து துஷ்மந்த சமீர பின்முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக தாயகம் திரும்பிய நிலையில், அவருக்கு பதிலாக சமிந்த பண்டார இணைக்கப்பட்டுள்ளார்.

உபாதை காரணாமாக துஷ்மந்தவும் நாடு திரும்பினார்!

24 வயதான வலக்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடும் டெஸ்ட் இல் முதல் இனிங்க்சில் 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்த நிலையில் பின்முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக மீண்டும் சிகிச்சைக்காக இலங்கை திரும்பியுள்ளார். சமீரவினது பின் முதுகில் ஏற்பட்ட உபாதைக்கு இன்று காலை MRI/CT ஆகிய ஸ்கேன் பரிசோதனைகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் குறைந்தது சிகிச்சையுடன் நான்கு மாதகாலம் ஓய்வில் இருக்குமாறும் வைத்தியர்களால் பணிக்கப்பட்டுள்ளார் . இன்னும், நடுநிலை வேகப்பந்து வீச்சாளரான தம்மிக பிரசாத் உம்...
Read More

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் சூர்யா!

’24’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து, மனைவி ஜோதிகா மற்றும் இரு  குழந்தைகளோடு, அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றிருந்த சூர்யா இன்று சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், தேர்தலில் தான் வாக்களிக்க முடியாமல் போனது குறித்து, அமெரிக்காவில் இருந்தபடி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த அவர், விரைவில் ஊடகங்களைச் சந்தித்து அது குறித்த மேல் விவரங்களைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூர்யாவின் ’24’ படம் 100 கோடி வசூலித்து சாதனை!

சூர்யாவின் நடிப்பில் வெளியான ’24’ திரைப்படம் 18 நாட்களில் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்திருகிறது. கடந்த மே 6-ஆம் தேதி சூர்யா-சமந்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ’24’. விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் இப்படம் வெளியானது. சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை 70 கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க, உலகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் மற்றும் ஈரோஸ் நிறுவனம்...
Read More

அனர்த்தம் தொடர்பான அமர்வில் மலையக தலைமைகள் பங்கேற்காதது ஏன்?

இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் சார்பாக உரையாற்ற மலையகத்தின் பிரதான கட்சிகளின் தலைவர்கள் எவரும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான அமர்வில் பங்கு கொள்ளாதது மலையக மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அனர்த்த நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றி உரையாற்றியிருந்தாலும் மலையகத்திலுள்ள அமைச்சர்களோ அல்லது இராஜாங்க அமைச்சரோ உரையாற்றவில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம்...
Read More

கண்டி நுவரெலியா உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஐந்து மாவட்டங்களுக்கு நாளை வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை நாளை பிற்பகல் வரை அமுலில் இருக்கும் எனவும் கட்டட ஆராய்ச்சி நிறுவனம்  அறிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த பிரதேச செயலகங்கள் காணப்படுவதாகவும் பின்வரும் அறிவித்தலில்  கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
error: Content is protected !!