முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 27, 2016

மன்னிப்புக்கோர தயாராகவே உள்ளேன்! : கிழக்கு மாகாண முதலமைச்சர்!

கிழக்கு மாகாண முதலமைச்சர், தன் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையின் போது மன்னிப்புக்கோரச் சொன்னால் தான் மன்னிப்புக் கோருவேன் எனத் தெரிவித்துள்ளார். கடற்படை அதிகாரி ஒருவரை அவதூறாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்அஹமட் பேசியதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, கிழக்கின் முதலமைச்சருக்கு எதிராக நேற்று (26) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மட்டக்களப்பு மங்களாராமய விஹாரையின் மதகுரு அம்பிட்டியே...
Read More

கொரிய மொழிப் போட்டிப் பரீட்சை ரத்து! : அரசு தீர்மானம்

கொரியாவில் தொழில்வாய்ப்புக்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்வதற்காக இலங்கையில் நடாத்தப்படும் கொரிய மொழிப் போட்டிப் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கணனியில் இணையத்தளம் மூலம் இதற்காக விண்ணப்பிக்கும் முறைமையொன்றை பிரதியீடாக அறிமுகம் செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், கொரிய மனித வள அபிவிருத்தி அமைப்பு விண்ணப்பிக்கும் முறைமையை மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தினால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரத்து செய்யும் தீர்மானத்தை எடுத்துள்ளது.

சிறுநீரக நோயாளிகளுக்கு சீன உதவியுடன் இலங்கையில் சிறப்பு வைத்தியசாலை!

இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்பு வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, 600 மில்லியன் யுவான்களை (சீன பணம்) சீனா வழங்கியுள்ளது. நேற்று குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இலங்கையின் சார்பாக கையெழுத்திட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்க் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதி பலனாகவே இந்த உதவி கிட்டியுள்ளது.

“குரங்குகளின் அட்டகாசத்தால் நிம்மதி போச்சு” தலவாக்கலை மிட்டில்டனில் மக்கள் புலம்பல்!

தலவாக்கலை பொலிஸ் பகுதிற்கு உட்பட்ட தலவாக்கலை தமிழ் வித்தியாலய பிரதேசத்தில் உள்ள மிட்டில்டன் கிராமபகுதியில் குரங்குகளின் அட்டகாசத்தால் இப்பகுதியில் வாழும் மக்கள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை சந்திப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குரங்குகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. அதிகாலை வேளையில் பாடசாலை மாணவர்கள் நடந்து செல்லும் போது குரங்குகள் இவர்களை பின் தொடர்ந்து மாணவர்களால் கொண்டுசெல்லப்படும் பாடசாலை புத்தகப்பைகளை கிழித்து நாசப்படுத்துவதாகவும் இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு...
Read More

ஆறுமுகன் எங்கே? கூட்டு ஒப்பந்தம் தொழிலாளரை காட்டிக் கொடுத்துவிட்டது; மனோ சாடல்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எங்கே? என கேள்வி எழுப்பிய அமைச்சர் மனோ, கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று ஏற்பாடு செயதிருந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மனோ, தொண்டாவை கடுமையாக தாக்கிப்பேசினார். தோட்டத் தொழலாளர்களுக்கு மாத்திரம் காலங்காலமாக ஏற்படும் அசாதாரணத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 1 1/2 வருடங்கள் கடந்துள்ளன. இன்னமும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. பொறுமையாக இருந்த காலம் கடந்துள்ளது. தனியார் துறையினருக்கு...
Read More

நியாயமான சம்பள உயர்வு கிட்டும்வரை எமது போராட்டம் ஓயாது! வேலுகுமார் சூளுரை!

தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமானதொரு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும்வரை தமிழ்முற்போக்கு கூட்டணியின் போராட்டம் ஓயாது என்று கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலு குமார் சூளுரைத்துள்ளார். தோட்டத்தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணக் கொடுப்பனவாக ரூ. 2 ஆயிரத்து 500 ரூபாவை உடன் வழங்குமாறு வலியுறுத்தி கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் இன்று நடைபெற்ற அஹிம்சை வழிப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- 2013 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம்...
Read More

அட்டன் கொழும்பு பாதையில் கனரக வாகனங்கள் செல்லத் தடை!

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கித்துக்கல – மடமோதர பகுதியில் பாதை தாழிறங்கியுள்ளதால் போக்குவரத்தில் தடையேற்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரிகள் பாதை புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும் சிறிய வாகனங்களுக்கும் பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளுக்கும் மாத்திரமே போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கனரக வாகனங்கள் கண்டி பேராதனை பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் பஸ் வண்டிகளில் செல்லும் பயணிகள் குறித்த இடத்தில் இறங்கி பாதையை கடந்த பின்னர் பஸ்ஸின் மீண்டும் பயணிக்கும் வகையில் போக்குவரத்து நடைபெறுவதாக...
Read More

நிர்வாகிகளின் அக்கறையின்மையால் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள தலவாக்கலை ஓக்ஸ்போட் மக்கள்!

மலையகத்தில் சுத்தமான குடிநீர் பெறக்கூடிய வசதிகள் இருக்கின்ற போதிலும்  இம்மக்கள் இன்னும் குடிநீர் பெறமுடியாத நிலையில் வாழ்ந்து வருவது வேதனை குறிய விடயமே. இன்று நாட்டில் உள்ள நகரங்களில் மற்றும் கிராமங்களில் வாழும் மக்களக்கு குடிநீர் தட்டுபாடாக இருந்தாலும் அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் சுத்தமான குடிநீரே கிடைக்கபடுகின்றது. ஆனால் மலையக பகுதிகளில் அதிகமான வளங்கள் இருக்கின்றபோதிலும் இம்மக்கள் தங்களின் தாகத்தினை தீர்ப்பதுக்காக ஒரு குடம் குடி நீர்க்காக பல மணி நேரம் காத்துகிடப்பதை யாரிடம் சொல்வது. மலையகம் என்றாளே...
Read More
error: Content is protected !!