முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 28, 2016

அரநாயக்க பகுதியில் நாளையுடன் மீட்பு நடவடிக்கை நிறைவு!

கேகாலை அரநாயக்க பகுதியில் மேற்கொளப்பட்டுள்ள மண் சரிவு மீட்டு நடவடிக்கை நாளையுடன் நிறைவுக்கு கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்ட செயலாளர் டபுள்யு.எம்.அபேவிக்ரம வனசூரிய இதனை தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள், மத தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, மண் சரிவில் சிக்குண்ட அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனினும், மீட்பு...
Read More

மீண்டும் மழை: வெள்ளம், மண்சரிவு குறித்து அவதானமாக இருக்கவும்!

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அடை மழையினால் களனி கங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. மையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இது தொடர்பில் குறிப்பிடுகையில், “தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் பாரிய மழை பெய்து வருகின்றது. தவலம பிரதேசத்தில் நேற்றைய தினமே நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. களனி கங்கையினதும் நீர் மட்டம் சில பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றது. நீர்ப்பாசன திணைக்களத்தின் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள்...
Read More

காசல்ரீ ஒயா கரையோர மக்கள் அவதானம்!

மலையகத்தில் தொடரும் மழை கால நிலை நீடிக்கின்றமையினால் மண்சரிவுகளும் நிழ தாழிறக்கமும் அதிகமாக காணப்படுகின்றது. நீரேந்தும் பகுதிகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைகின்றது. காசல்ரீ மவுசாகலை நீர்தேக்கங்களில் நீர்மட்டம் நேற்று பெய்த தொடர் மழையில் நிறம்பி வழியும் தருவாயில் இரண்டு அங்குளம் மாத்திரமே உள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்ததுடன், காசல்ரி நிர்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் வசிக்கும் காசல்ரீ ஓயா கரையோர பகுதிமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நுவரெலியா ஹோம்மூட் தமிழ் வித்தியாலய கட்டிடம் சரிந்து விழும் அபாயம்! (படங்கள்)

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 ஹோல்புறூக் நு.ஹோம்மூட் தமிழ் வித்தியால கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் வெளிபுர பகுதிகள் பாரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. இப்பாடசாலையில் 100 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். தரம் 01 முதல் 05 வரையிலான வகுப்புகள் நடைபெறுகின்றது. கட்டிடம் தற்போது ஆபத்தான நிலைக்காணப்படுவதால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது இப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் கட்டிடம் சரிந்து விழ கூடிய ஆபாத்தான...
Read More
error: Content is protected !!