முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 8, 2016

வாகன கொள்வனவுக்கு அரசினால் சலுகைகள் ஊடகவியலாளர்களின் கேள்விகளால் தடுமாற்றமடைந்த அமைச்சர்கள்!

கொழும்பில் அமைச்சரவை முடிவினை அறிவிக்கும் மாநாட்டின் போது, அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கு அரசினால் சலுகைகள் வழங்கப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்டபோது தடுமாற்றமான பதில்களை அமைச்சர்கள் வழங்கியதை காணமுடிந்தது. மக்கள் மீது வரிச்சுமையினை அதிகரிக்கின்றது அரசு, ஆனால் அமைச்சர்களின் வாகன கொள்வனவிற்கு சலுகைகளை வழங்குவது முறையா? என ஊடகவியலாளர்கள் கேள்விகளை அமைச்சர்களிடம் தொடுத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர்கள் 20 வருடங்களிற்கு ஒருமுறை அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே வாகன கொள்வனவிற்கு சலுகைகள்...
Read More

30 அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவிற்காக 117 கோடி ரூபாய் நிதி கோரல்!

அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 30 பேரின் வாகன கொள்வனவிற்காக 117 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது. குறித்த நிதியினைக் கோரி துணை மதிப்பீடு பத்திரமொன்று நிதி அமைச்சரின் சார்பாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்றையதினம்(07) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அதிக நிதி கோரப்பட்டுள்ளதாகவும், குறித்த துணை மதிப்பீடு மூலம் அமைச்சர் சரத் பொன்சேகா 7 கோடி ரூபாய் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read More

கொஸ்கம பாதையை மறித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்!

அவிஸ்ஸாவெல – கொழும்பு பிரதான வீதியானது நேற்றைய தினம் திறந்து விடப்பட்டநிலையில் இன்று பிரதேசவாசிகள் குறித்த வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதையை போக்குவரத்திற்காக திறந்து விடுவதற்கு முன் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரக் கோரியே குறித்த பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் சாலாவ இராணுவ முகாம் வெடிப்பினை பார்வையிட வருபவர்களால் தாம் பெரும்பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிடிவதையினை முறையிட புதிய ஒன்லைன் முறை!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். கல்வி துறையில் தற்போதைய நிலை மற்றும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை நேற்று விவாதிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். இதில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன ஆகியோர்இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது, பகிடி வதைகளை...
Read More

பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை!

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. காணியொன்றை முறைகேடாக விற்பனை செய்து 64 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மாவன் அத்தபத்துவின் பெரிய தாயார் சடலமாக மீட்பு!

மாத்தறை -வெலிகம் பிரதேசத்தில் உள்ள இலங்கை கிரிகட் அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தப்பத்துவின் பெரியம்மா கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொலை சம்பவம் கடந்த 6ம் திகதி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது சடலம் வெலிகமவில் உள்ள அவரது வீட்டிலேயே இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்தவரின் சடலத்தை அவதானிக்கும் போது, கையடக்கத்தொலைபேசி மின்னூற்றி வலையினால் (phone charger) இவரது கழுத்து சுருக்கிடப்பட்டிருந்ததாகவும், பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்...
Read More

இன்றும் காற்றுடன் கூடிய மழை! : மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

மத்திய மலைநாட்டு மேற்கு பகுதிகள் மற்றும் வட ,வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூரியுள்ளது. காங்கேசன்துறை திருகோணமலை மட்டக்களப்பு , பொத்துவில் மற்றும், ஹம்பாந்தோட்டை வரையுள்ள கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாளத்திற்கு 70 கிலோ மீட்டருக்கு அதிகமாக வீசும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற் பிரதேசங்களுக்கு அருகாமையில் வாழும் மக்களுக்கு அவதானம் விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்!

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ‘பிரதீப் மாஸ்டர்’ என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, ‘கஜன் மாமா’ எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில்...
Read More

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கடந்த ஒரு வருடகால செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது! : சோ. ஸ்ரீதரன்

தமிழ் முற்போக்கு கூட்டணி உதித்து இப்போது ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் மலையகத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றமானது மலையகத்தின் எழுச்சிக்கு பாரிய பங்காற்றுகின்றது. இத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்படுத்திய அரசியல் மாற்றமே தற்போது கூட்டொப்பந்த சம்பளத்துக்கு அப்பால் அரசின் கொடுப்பனவுகள் எம் மக்களுக்கு கிடைக்கின்றது என மத்திய மாகாண சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பளருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார். மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர். திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டின்...
Read More
error: Content is protected !!