முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 10, 2016

மனதை உருக்கும் மலையகத்தில் இருந்து வந்த சிறுகதை “ஏக்கம்”

ஏக்கம் இயற்கை சீற்றத்திற்குட்பட்டு பிறம்பொடிந்த கூடை போல் ஆங்காங்கே சதுரப் பிளவுகளை கண்டிருந்தது அந்த மண் பாதை. அப்பாதையில் செல்வோர் பத்தடிக்கு ஒரு சருக்குகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும். மலையகத்தில் பிறந்து மண் பாதைகளையும் மலைமேடுகளையும் பற்றிய விளக்கமளிப்பது சற்று விந்தையான விடயம் தான். இருப்பினும் ஆங்கிலேயன் வகிந்தெடுத்த மலைக் கொழுந்தின் தலை மேடுகள் வாரப்படாத வடுக்களாய் காயப்பட்டு நிற்பதை கம்பனிகள் கண்டகொள்ளாதது வேதனை தினமும் விதைத்துத்தான் செல்கிறது. காலங்காலமாய் இப்பாதையில் பயணித்திருப்பினும் இன்று தான் ஒரு...
Read More

மாத்தறை, புனித தோமஸ் கல்லூரி மாணவர் ரயிலில் விழுந்து தற்கொலை!

மாத்தறை, புனித தோமஸ் கல்லூரியில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவனொருவர் மாத்தறை நுபே பிரதேசத்திற்கருகில் பயணித்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலிஞ்ஞவில, கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசித்து வந்த வீ.ஜீ.ஹரின் என்னும் பாடசாலை மாணவனே குறித்த தற்கொலைச் சம்பவத்தில் பலியாகியுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது, குறித்த மாணவன் நேற்று காலை பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். அத்துடன் தனது தாய்க்கு அழைப்பொன்றை மேற்கொண்டு தான் தற்கொலைச் செய்துக் கொள்ளப்...
Read More

கணபதி கணகராஜ் தொடுத்த கேள்விக்குள்ளேயே பதிலும் உண்டு; அமைச்சர் ராதா பதிலடி!

கணபதி கனகராஜ் அவர்கள் “கருடனில் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அவர் கேட்ட கேள்விக்குள்ளேயே அடங்கியுள்ளது என அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தனது பதிலில் தெரிவித்திருக்கிறார். மத்திய மாகாண சபையில் அவர் கொண்டு வந்த பிரேரணைக்கும் இவ்வளவு விடயங்களை தெரிந்து வைத்திருக்கின்றமைக்கும் எனது பாராட்டுக்கள். மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட எந்த பிரேரணையும் மத்திய அரசாங்கம் நிறைவேற்றியதாக வரலாற்றில் எந்த விதமான பதிவுகளும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை ,என கணபதி கணகராஜின் கேள்விகளுக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் வே....
Read More

இன்று முதல் அங்கவீனமுற்ற படையினர் சலுகை அடிப்படையில் புகையிரதத்தில் பயணிக்க அனுமதி!

அங்கவீனமுற்ற படையினர்கள் சலுகை அடிப்படையில் புகையிரதத்தில் இன்று முதல் பயணிக்கலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் அண்மையில் அரசாங்கத்தினால் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட சலுகை அட்டைகளை பயன்படுத்தி அங்கவீனமடைந்த படையினர்களுக்கு, புகையிரதப் பற்றுச்சீட்டுக்காக 100ற்கு 50 வீதம் என்ற சலுகை வழங்கப்படவுள்ளதாக புகையிரதப் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் உள்ள அனைத்து புகையிரத நிலையங்களிலும் அங்கவீனமுற்ற படையினர்களுக்காக குறித்த இந்த சலுகையினைப் பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சாலாவ மக்களின் நிவாரணங்களுக்கு பின்பே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம்! : பிரதமர்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, சாலாவ புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் வரையிலும் வழங்கவேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திறைசேரிக்கு கட்டளையிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளார். உள்ளுர் விமானப் போக்குவரத்தில் துஸ்பிரயோகம், இராணுவ வீரர்களை தமது அமெரிக்கா இல்லத்தில் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியமை மற்றும் போக்குவரத்தில் முறைகேடு உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவர் இன்று இவ்வாறு வாக்குமூலம் வழங்கவுள்ளார். ஏற்கனவே அவர் மீது காணிக் கொள்வனவில் மோசடி என்ற அடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அதற்காக இரண்டு நீதிமன்றங்கள் பிணை...
Read More

நம்பிக்கையில்லா பிரேரணையில் முக்கிய புள்ளிகள் மூவரின் கையொப்பம் இல்லை!

தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கையொப்பம் இட்டிருக்கவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் நிதியமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது தனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். நிதியமைச்சருக்கு எதிரான குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை 94வாக்குகளால் தோல்வியடைந்ததும்...
Read More
error: Content is protected !!