முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 12, 2016

இ.தொ.கா மட்டுமே மலையக சமூகத்தை ஏற்று நடத்தக் கூடிய சக்தி இருக்கின்றது! : வெள்ளையன் தினேஸ்

பல சக்திகள் தன்னுடைய சுயலாபத்திற்காக வந்தாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மட்டுமே இந்த மலையக சமூகத்தை ஏற்று நடத்தக் கூடிய சக்தி இருக்கின்றது என்பதனை முழு மலையகமும் இலங்கையும் அறிந்திருக்க ஒரு காலகட்டமாக மாறியிருக்கின்றது என்று முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக மக்களுக்காக சேவை செய்து இந்த மக்களின் நலன்களில் தங்களுடைய...
Read More

ஆசிரியர் உதவியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரச வர்த்தமானியில் திருத்தம் கொண்டு வரவேண்டும்! : ஸ்ரீதரன்

மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பிலான அரச வர்த்தமானி உரிய மாற்றங்களைக் கொண்டு வரும் பட்சத்திலேயே ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவில் அதிகரிப்பை ஏற்படுத்தலாமென்று மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். ஆசிரியர் உதவியாளர்களுக்குக் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பாக மத்திய மாகாணத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஒன்று விவாதத்துக்கு வந்த போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, ஆசிரியர் உதவியாளர் தொடர்பான அரச வர்த்தமானி வெளியாகிய போது அதில் உள்ள குறைபாடுகளை இந்தச்சபையில்...
Read More

மவுசாகலை ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லையாம்? ஆசிரியர்கள் விசனம்

அட்டன் கல்வி வலயம் 03க்கு உட்பட்ட மஸ்கெலியா மவுசாகலை இல 01 தமிழ் வித்தியாலயத்தில் பணிப்புரியும் 09 ஆசிரியர்களுக்கு மாதாந்த வேதனம் உரிய திகதியில் வழங்கப்படுவதில்லையென மவுசகாலை இல 01 த.வி ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றன. இந்த ஆசிரியர்களுக்கான மாதாந்த வேதனம் மாதத்தின் 20ம் திகதி வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்திட்டங்களுக்கமைய ஆசிரியர்களுக்கான வேதனம் வழங்கப்பட வேண்டும். ஆனால் குறித்த ஆசிரியர்களுக்கு மாதத்தின் 25ம் திகதிகளிலே உரிய ஆசிரியர்களுக்கான வேதனம் வழங்கப்படுவதாகவும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்களுக்கான நிலுவை...
Read More

லசந்த கொலை : விசாரணைகளுக்கு இராணுவத்தினரால் தடை!

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் பலவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளதாகவும் இதனால், விசாரணையை முன்னெடுக்க முடியாமல் காணப்படுவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. லசந்த கொலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கான தகவல்களைப் பெற்றுத் தருமாறு இராணுவத்திடம் பல தடவைகள் கூறப்பட்டும், அதனைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்காதுள்ளதாகவும் திணைக்களம் குற்றம்சாட்டியுள்ளது.

இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரல் பதவி!

இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பரிந்துரைக்கு அமைய குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரிகேடியாகளாக கடயைமாற்றிய நிசாங்க ரணவக்க (கஜபா படைபிரிவு), அனுர பெரேரா (சிங்கப் படைபிரிவு), அருன ஜயசேகர ( கெமுனு படைப்பிரிவு), தம்மிக்க பனன்கொல்ல (பொறியியல் படைப்பிரிவு) மற்றும் அஜித் விஜேசிங்க (சமிக்ஞை படைப் பிரிவு) ஆகியோரே இவ்வாறு மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 9ம் திகதி முதல்...
Read More

இலங்கையின் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்கிறது கொரியா!

இலங்கையின் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் கொரியா 5 மில்லியனை முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீடுடன் மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் சேவைக்கு அதிகமாக தன்னார்வ பணியாளர்களை அழைத்துக் கொள்வதற்காக (A.V.S) என்ற திட்டத்தினை தொடர வெளிநாட்டு கூட்டு முயற்சியில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தை நடாத்தி செல்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மைக்காலமாக இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனமானது நட்டத்தில்இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நட்டத்தினால் அங்குள்ள பணியாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க திறைசேரியின் நிதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நாட்டைச்...
Read More

மஹிந்த, கூட்டு எதிக் கட்சியுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை! : ஸ்ரீ ல.சு.க.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும், கட்சியின் மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளும்வரையில் அவர்களுடன் எந்தவொரு நல்லிணக்க பேச்சுவார்த்தைகளும் இடம்பெற மாட்டாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு கடந்த காலங்களில் எடுத்த எந்தவொரு தீர்மானத்துக்கும் கட்டுப்படாது, கட்சி உறுப்பினர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் செயற்பட்டதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும்...
Read More

மத்திய வங்கியின் ஆளுனருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த வாரத்தில் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலம் இந்த மாத இறுதியுடன் பூர்த்தியாகவுள்ளது. பதவிக் காலத்தை நீடிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றதாகவும் உட்சந்தை தகவல்கள் கசிய விடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன....
Read More

இன்று சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம்!

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். உலகளாவிய ரீதியில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தப்படுவதற்கு எதிராக 2002 ஆம் ஆண்டு உலக தொழிலாளர் சம்மேளனத்தால் இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. உலக தொழிலாளர் சம்மேளனத்தின் தகவலுக்கு அமைய உலகளாவிய ரீதியில் 168 மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் தொழிலாளர் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் வலையமைப்புக்கு எதிராக ஒன்றிணைவோம் என்பதே இந்த வருடத்திற்கான சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தின் தொனிப்பொருளாகும். இதேவேளை இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும்...
Read More

கேகாலை மாவட்டத்தில் மேலும் 636 இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

கேகாலை மாவட்டத்தில் மேலும் 636 இடங்கள் மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதிகளை சேர்ந்த 2800 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு அபாய எச்சரிக்கை மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதிகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் , மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து...
Read More
error: Content is protected !!