முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 13, 2016

இலங்கையில் நிலநடுக்க அபாய எச்சரிக்கை!

இலங்கையில் இருந்து ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு கீழ், புதிய நிலத்தகடு ஒன்று உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அதுல சேனாரத்ன கூறியுள்ளார். குறித்த இந்த பூமியின் அதிர்வு காரணமாக இலங்கைக்கும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் விளைவாக எதிர்காலத்தில் இலங்கையில் அதிக நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊனமுற்றவரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள் : 3 பேர் படுகாயம்! ஆவரங்காலில் சம்பவம்

ஆவரங்கால் சிவன்கோவிலுக்கு அருகில் பருத்தித்துறை வீதியின் இன்று காலை பத்து மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 3பேர் படுகாயமடைந்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவர்களின் கால்கள் முறிவடைந்ததாக தெரியவருகின்றது. ஊனமுற்ற வயோதிபர் ஒருவர் மூன்று சில்லு சைக்கிளில் தெருவால் சென்று கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவரும் கால்களில் படுகாயமடைந்ததால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் மூன்று சில்லு சைக்கிளில் வந்த ஊனமுற்ற முதியவர் தெருவில் காயங்களுடன்...
Read More

அரசுக்கு எதிராக ஒன்றிணைகிறது பல தொழிற்சங்கங்கள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்த உள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் சமீர கொஸ்வத்த தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சமீர கொஸ்வத்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட சமீர, சிறையில் உள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், குமார் குணரட்னத்தின் குடியுரிமையினை உடனடியாக வழங்கக் கோரியும், அடக்கு முறையான சட்டதிட்டங்களை உடன் நீக்கக் கோரியுமே இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், இவ்வாறான போராட்டங்களுக்காக பலதொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும்,...
Read More

3வது டெஸ்ட் – இங்கிலாந்து முன்னிலையில் இலங்கை அணி விரக்தியில்!

இங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 288 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், நாணயசுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. கிறிஸ் வோக்ஸ் 66 ஓட்டங்கள், ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 167 ஓட்டங்கள் விளாசினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மூன்றாம்...
Read More

நுவரெலியாவில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேர்க்கு நேர் மோதி விபத்து; வயோதிப பெண் பலி!

நுவரெலியாவில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து, முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் கொல்லப்பட்டார் சாரதி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நுவரெலியா சீதாவனராமய பகுதியில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியாவில் இருந்து லக்கிலேன்ட் பகுதிக்கு பயணித்த பஸ்ஸும் பண்டாரவலையில் இருந்து நுவரெலியா நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று மாலை ஏற்பட்ட இந்த விபத்தில் 62 வயதுடைய சிவனு வேலுசாமி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...
Read More

ஒரலாண்டோ தாக்குதல் ஐஎஸ் உரிமை கோரியது; பயங்கரவாதி ஒமர் ஆப்கானிஸ்தான் பின்புலம்!

அமெரிக்கா ஒரலாண்டோ இரவு விடுதி தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானை பின்புலமாக கொண்ட அமெரிக்காவில் பிறந்த ஒமர் மாட்டீன் 29 வயதுடைய ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது. ஒரலாண்டோ இரவு விடுதிக்குள் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 53 பேர் பலியாகினர், பொலிசாரின் சுற்றி வளைப்பில் பயங்கரவாதி ஒமர் சுட்டுக் கொல்லப்பட்டான்.

லக்ஷமன் கிரியல்ல மற்றும் ராஜித ஆகியோருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட போவதாக தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முறைப்பாட்டு மனுவை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை(13) கையளிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹப்புத்தளையில் அதிசக்திவாய்ந்த இரண்டு கைக்குண்டுகள் மீட்பு!

ஹப்புத்தளை, கஹகொல்லை தோட்டப்பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இரண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதென ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்த பொதியொன்று தொடர்பில், பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொலிஸார், பொதியை சோதனைக்குட்படுத்திய போது, அதில் அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அது குறித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அறிவித்து, அவரின் உத்தரவுக்கமைய குண்டுகள்...
Read More

ஜூலை மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளது! : பரணகம

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி கலைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இதேவேளை, காணாமல் போனோர் குறித்து அலுலகம் ஒன்றையும் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை குறித்த அலுவலகத்திடம் முன்வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. காணாமல் போனோர் விசாரணைகளை நிறைவு செய்ய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில் காலத்தை நீடிக்குமாறு ஆணைக்குழு கோரியிருந்தது. எனினும், அதனை எதிர்வரும் மாதத்துடன், கலைக்குமாறு...
Read More

இரண்டு வயது குழந்தையை தும்புத்தடியால் அடித்துக் கொன்ற தாய்!

தும்புத்தடியால் தனது குழுந்தையை அடித்து கொன்ற தாய் ஒருவரையும், அவருடன் இருந்த மற்றுமொரு ஆணையும், பொலிஸார் கைது செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு அத்துருகிரிய பிரதேசத்தில் தன்னுடைய குழுந்தையை தும்புத்தடியால் அடித்து கொன்று சடலத்தை பாழடைந்த இடமொன்றில் புதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய தாயையும், அவரது கள்ளக்காதலனுமே இவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்களை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண்ணும், அவரது கள்ளக் காதலனான கொழும்பைச் சேர்ந்த நபருமே அத்துருகிரிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த...
Read More
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti