முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 13, 2016

வருடாந்தம் 5,000 புதிய நீரிழிவு நோயாளிகள் அதிகரிக்கின்றனர்!

நாட்டில் உள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை, வருடாந்தம் சுமார் 5,000 புதிய நோயாளிகளால் அதிகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குடிநீர் காரணமாக நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாகவும் நாட்டில் உள்ள குடி நீர் பிரச்சினைக்கு இவ்வருட இறுதிக்குள் பூரணமாகத் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இதற்காக சர்வதேசத்தின் உதவி பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புளோரிடா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஓமார் மனநலம் பாதிக்கப்பட்டவன்: முன்னாள் மனைவி தகவல்!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில், கேளிக்கை விடுதி ஒன்றில் தனியாளாக துப்பாகிச் சூடு நடத்தி 50 பேர் இறப்பிற்குக் காரணமான நபர், மனநலம் பாதிக்கப்பட்டு, நிதானத்தை இழந்திருப்பதாக அவரது முன்னாள் மனைவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஓமார் மாட்டின் என்ற அந்த 29 வயது நபரின் முன்னாள் மனைவி சிடோரா யூசிபி நேற்று காவல்துறை மற்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமணம் செய்து நான்கு மாதங்கள் அந்நபரோடு தான் வாழ்ந்ததாகவும், பல போராட்டங்களுக்குப் பிறகு தனது குடும்பத்தினர்...
Read More

கூகுள் ‘ஸ்ட்ரீட் வியூ’ சேவைத் திட்டத்தை நிராகரித்தது இந்திய அரசு!

புதுடெல்லி – கூகுள் நிறுவனம் தனது “ஸ்ட்ரீட் வியூ” சேவையை இந்தியாவில் நிறுவ செய்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. காரணம் இந்திய உள்துறை அமைச்சகம் கூகுளின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக அறிவித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட 360 பாகையில் வீதிகள், நினைவுச் சின்னங்கள், மலைகள் மற்றும் ஆறுகளைக் காட்டும் இந்த வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூகுள் விண்ணப்பித்தது. ஆனால் நாட்டின் பாதுகாப்பு குறித்து தற்காப்பு அமைச்சு சில...
Read More

ஒர்லாண்டோ துப்பாக்கிச் சூடு: 50 பேர் பலி! 53 பேர் காயம்! அமெரிக்க வரலாற்றில் ஒரே சம்பவத்தில் அதிக உயிர்கள் பலியான சம்பவம்!

ஒர்லாண்டோ – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் தனிநபர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். இது போன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அமெரிக்காவில் நிறைய நடந்தாலும், ஒரே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அதிகமானோர் உயிர்ப்பலியானது இந்த சம்பவத்தினால்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கின் இரட்டை கோபுரத் தாக்குதலான செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பின்னர் மிகப் பெரிய மரண எண்ணிக்கையைக் கொண்ட பயங்கரவாத சம்பவமாக நேற்றைய...
Read More

தேயிலை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி!

தேயிலை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான தேயிலை ஏற்றுமதி வருமானம் சுமார் பத்து வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இரண்டு மாத காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் 221.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டில் அந்தத் தொகை 200.4 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி மற்றும் கேள்விக்...
Read More
error: Content is protected !!