முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 14, 2016

தபால் திணைக்கள ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு : 6 லட்சம் தபால்கள் முடக்கம்!

தபால் திணைக்கள ஊழியர்களின் மேலதிக நேர வேலைப் பகிஷ்கரிப்பு காரணமாக ஆறு லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளது. 14 கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக மேலதிக நேர வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 12ம் திகதி ஆரம்பமான இந்த வேலைப் பகிஷ்கரிப்பு காரணமாக தற்போதைக்கு ஆறு லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் கொழும்பு பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தபால் திணைக்களத்தின் அன்றாட அலுவல்களில் பாதிப்பு...
Read More

சாலாவ வெடிப்பு : வீடுகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் திட்டம் இன்று முதல்!

கொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பின் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 192 குடும்பங்கள் குறித்த கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள தகுதியுடைய குடும்பங்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தங்கள் வீடுகளை மீள நிர்மாணித்துக் கொள்ளும் வரையில் மாதாந்தம் ஐம்பதினாயிரம் ரூபா இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக சீதாவக பிரதேச செயலாளர் பண்டார யாப்பா தெரிவித்துள்ளார்.

ICC இடம் முறையிடுகிறது இலங்கை கிரிக்கெட்! : திலங்க சுமதிபால

நுவான் பிரதீப் வீசிய பந்து, தவறான முறையில் முறையற்ற பந்தாக அழைக்கப்பட்டமை குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிடவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றுலாவில் இடம்பெற்ற அணி முகாமைத்துவம், இந்த முடிவு குறித்து மிகவும் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்த சுமதிபால, அது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிடவுள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு, இந்த முடிவை, ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டதும், இலங்கையின் தேசியக் கொடியை, இலங்கையின் அணி முகாமைத்துவத்தினர்,...
Read More

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை! : கடற்படையினருக்கு அவதான எச்சரிக்கை விடுப்பு!

நாட்டில் இன்றும் மேல் மாகாணம் உட்பட பல மாகாணங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில், தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதி மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா-மோடி சந்திப்பு: சில பின்னணித் தகவல்கள்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஜெயலலிதா. அதன் தொடர்பில் சில பின்னணித் தகவல்கள்: தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். இன்று காலை விமானம் மூலம் புதுடில்லி செல்லும் ஜெயலலிதா இன்று இரவே சென்னை திரும்புகின்றார். அண்மைய சட்டமன்றப் பிரச்சாரங்களில் கூட எங்கும் அவர் இரவு தங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, புதுடில்லியிலிருந்தும் இன்றிரவே அவர் சென்னை திரும்புகின்றார்....
Read More

பாடசாலையின் அபிவிருத்தி நடைபெறுமா?

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதியில் பல பாடசாலைகள் இன்று தரம் உயர்த்தப்பட்டுள்ள இதேவேளை நவீன கட்டிடங்களையும் கொண்டுள்ளதாக காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இன்னும் சில பாடசாலைகள் அபிவிருத்தி அடையாத நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கல்வி கற்க வேண்டிய துர்பார்க்கிய நிலையில் பாடசாலை கட்டிடங்கள் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். கந்தபளை எஸ்கடேல் தமிழ் வித்தியாலய கட்டிடம் அதற்கு இன்று சான்று பகிர்கின்றது. இப்பாடசாலையில் 1 தொடக்கம் 5 வரையிலான வகுப்புகள் நடைபெறுகின்றது. சுமார் 60 மாணவர்கள்...
Read More
error: Content is protected !!