முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 24, 2016

JVP முன்னாள் தலைவர் சோமவன்சவின் இடத்திற்கு ஜயந்த விஜேசிங்க நியமிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் இடத்திற்கு மக்கள் தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஜயந்த விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விரிவான வேலைத்திட்டங்கள் மூலம் கட்சியை அபிவிருத்தி செய்யவுள்ளதாக புதிய தலைவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கட்சி ஆரம்பிக்கப்பட்டதற்கான கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை என்றும்,கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சில நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் மக்கள் தொழிலாளர்கட்சியின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பூந்தோட்டம் செல்லும் வழியில் ஆணின் சடலம் மீட்பு!

வவுனியா மாவட்டத்தின் குடியிருப்பு பகுதியில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் அமைந்துள்ள பெரும் மதகொன்றின் கீழிருந்து ஆணின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த 48 வயதான பாக்கியம் ஜஸ்டின் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவராவார்.இவரை புதன்கிழமை மாலையில் இருந்து காணவில்லை என உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இது ஒரு கொலையா? மதுபோதையில் தவறி வீழ்ந்தாரா? என வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவன்ட் கார்ட் ஆயுதக்கப்பலின் உக்ரைன் தலைவர் கைது!

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எவன் கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் கப்பலின் தலைவரான உக்ரைன் நாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினார் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. சட்டவிரோத ஆயுத விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு, சந்தேகநபர் தற்சமயம் காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இறக்குவானை பரியோவான் தமிழ் மகா வித்தியாலயத்தின் 129 ஆவது ஆண்டு விழா!

இன்றைய தினம் 129 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் இறக்குவானை பரியோவான் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆண்டு விழா சிறப்படைய மணதார வாழ்த்துவதோடு, அன்று முதல் இன்று வரை சிறப்பாக செயற்பட்ட அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் சிறந்த செயற்பாடுகளையும், பங்களிப்பையும் மறவாது அவர்களை கௌரவிப்பதட்காகவும் வர்த்தகர்கள், இளைஞர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட இறக்குவானை தமிழ் சமூகத்தின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் உலகிற்கு எடுத்துரைக்க துடிக்கும், இக்கல்லூரி இந்த அளவுக்கு வளர்ச்சியடைய தொடர்ந்து அயராது உழைத்த கல்லூரியின் ‘பழைய...
Read More

யாழ். ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

இலங்கையில் தமிழர்கள் நிறைந்த வடக்கு மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு, இளம் கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அளித்த பதில்: யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் விரைவில் அமைக்கப்படும். வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களுக்கு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. இதன்மூலம்,...
Read More

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று!

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்களின் இரண்டாவது நாள் இன்று. வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்ததன் பின்பு அதன் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த இந்த  சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

20ம் திருத்தச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும்! : துமிந்த திஸாநாயக்க

20ம் திருத்தச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 1978ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட விருப்பு வாக்கு முறைமை மற்றும் தொகுதிவாரி முறை ஆகியவற்றை இன்றைக்கு பொருத்தமான வகையில் 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக திருத்தம் செய்யப்படும். விருப்பு வாக்கு முறைமை மற்றும் விகிதாசார முறையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.  எனவே தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக...
Read More

கம்மன்பிலவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால்  தாக்கல் செய்யப்பட்ட  அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. குறித்த மனுக்கள்  நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில் மூன்று நீதிபதிகளில் ஒருவரான ஈவா வணசுந்தர, மன்றிற்கு வராமையால் இந்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தம்மை கைது செய்வதில் இருந்து தவிர்த்துக்கொள்வதற்கான வேண்டுகோளை முன்வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து. தொடர்ந்து, தம்மை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளமை சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு மற்றுமொரு மனு தாக்கல்...
Read More

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு: குறுகிய பெரும்பான்மையில் பிரிட்டன் நீடிக்கக்கூடும்!

இலண்டன்: நேற்று நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்ற பிரதமர் டேவிட் கெமரூனின் பிரச்சாரத்திற்கு ஏற்ப, மிகக் குறுகிய பெரும்பான்மையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கும் என ஆரம்ப கட்ட முடிவுகள் – கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பல இடங்களில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளதால், முடிவுகள் மாறி மாறி வரலாம் என்றும் இறுதி முடிவு மிகக் குறுகிய...
Read More

ஜெர்மனியில் திரையரங்கில் பொதுமக்களை சிறைப் பிடிக்க முயன்றவன் சுட்டுக் கொலை!

பெர்லின் – ஜெர்மனில் பிராங்பர்ட் அருகே உள்ள வியர்ன்ஹெய்ம் என்ற பகுதியில் இருந்த திரையரங்கு வளாகத்தில், நேற்று வியாழக்கிழமை மதியம் முகமூடி அணிந்த ஆயுதமேந்திர ஒருவன்,  துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் சுமார் 20 முதல் 50 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் ஜெர்மன் ஊடகங்கள் கூறுகின்றன. எனினும், அவர்கள் அவனது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்களா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், திரையரங்கு வளாகத்தில் அங்கிருந்த பார்வையாளர்களை சிறைப் பிடிக்க நினைத்த அவனது...
Read More
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle