முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 27, 2016

சிலாபம் – கொழும்பு தனியார் பஸ்கள் பணிபகிஷ்கரிப்பில்!

சிலாபத்திலிருந்து கொழும்பு வரை பயணிக்கும் தனியார் பஸ் சேவையானது இன்றுஅதிகாலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து கொழும்பு வரும் பஸ் வணடியின் சாரதி ஒருவர் சிலாபம் – காக்காப்பள்ளி என்ற இடத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளார் இச்சம்பவம் தொடர்பில் சிலாபத்திலிருந்து கொழும்புக்கான சேவையில் ஈடுபட்டிருக்கும் பஸ்வண்டியின்சாரதி ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான நபர் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கமைய குறித்த சாரதி சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த சாரதியை விடுவிக்க கோரியே இந்த வேலைநிறுத்தப் போராட்டம்...
Read More

3வது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவு பெற்றது. பிரிஸ்டலில் (Bristol) நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியது. இதன்படி துடுப்பாடிய  இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்த இங்கிலாந்து அணி 4 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றிருந்த...
Read More

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு – பெரும் விபத்து தவிர்ப்பு!

சிங்கப்பூர் – எண்ணெய் கசிவு காரணமாக, இன்று காலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாங்கி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது ஓடுபாதையில் விமானத்தில் தீப்பற்றியுள்ளது. எனினும், அதிருஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.05 மணியளவில், சாங்கி விமான நிலையத்தில் இருந்து, எஸ்க்யூ368 என்ற விமானம் இத்தாலியின் மிலன் நகரை நோக்கிச் சென்றுள்ளது. அப்போது பயணிகளில் ஒருவரான லீ பீ யீ (வயது 43) என்பவர், வாயுக் கசிவு போன்ற நெடியை...
Read More
error: Content is protected !!