முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 28, 2016

கருணாநிதி குடும்பத்து மருமகளாகிறார் நடிகர் விக்ரமின் மகள்!

நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும், வரும் ஜூலை 10-ம் தேதி, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாப்பிள்ளை மனு ரஞ்சித், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப வாரிசும் ஆவார். அவர் கருணாநிதிக்குக் கொள்ளுப் பேரன் முறையாகிறார். அதாவது கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியின் மகன் தான் மனு ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் தனது உருவமாற்ற படம்: அவமானத்தால் இளம் பெண் தற்கொலை!

சென்னை – பேஸ்புக்கில் தனது மார்பிங் செய்யப்பட்ட படத்தைப் பார்த்த வினுபிரியா (வயது 22) என்ற பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி என்ற பொறியியலாளர் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கொலை செய்யப்பட்ட செய்தியும் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வேளையில், வினுபிரியாவின் தற்கொலை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...
Read More

இலங்கையிடமிருந்து விமானங்களை குத்தகைக்கு எடுக்க தீர்மானிக்கவில்லை! : ஈரான்

இலங்கையிடமிருந்து விமானங்களை குத்தகைக்கு எடுக்க தீர்மானிக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இலங்கையிடமிருந்து விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஈரான் எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என ஈரான் பிரதி அமைச்சர் Asghar Fakhrieh Kashan தெரித்துள்ளார். இலங்கையிடமிருந்து மூன்று விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ள ஈரான் முயற்சித்ததாக வெளியான தகவல்கள் குறித்து அவர் இந்த பதிலை அளித்துள்ளார். ஈரானிய ஊடகங்கள் சிலவும் இது பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சியின் ஒருவருட நிறைவு கண்டியிலிருந்து எதிர்ப்பு நடைபவனி!

அரசாங்க எதிர்ப்புக்கான ஒன்றிணைந்த தேசிய முன்னணினை உருவாக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் முக்கிய கூட்டமொன்று இன்று (28) நடைபெறவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன. இதில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பான விசேட கூட்டமொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்துக்கு ஒருவருட நிறைவையிட்டு கண்டியிலிருந்து கொழும்புக்கு நடைபவனியொன்றை நடாத்த...
Read More

பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி பாவனைக்கு!

பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டியை தயாரித்தள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அதன் விளைவுகளை கருத்திற்கொள்ளும்போது விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியினுள் உள்ள நபர் தூக்கி வீசப்படுவதுடன் இது இவர்களின் உயிருக்கு பாரதுரமான அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது. இதனால், முச்சக்கர வண்டியில் பயணிப்போரின் வசதி மற்றும் பாதுகாப்பின் நிமித்தம் அதற்கான கட்டமைப்புக்களை பொருத்துமாறு இலங்கைக்கு அதிகளவில் முச்சக்கரவண்டியினை இறக்குமதிசெய்யும் நிறுவனத்திற்கு நாம் ஆலோசனை வழங்கியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய...
Read More

அக்கரபத்தனை அரச வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் கர்ப்பினித் தாய்மார்கள் அசௌகரிகம்!

அரச பொறுப்பின் கீழ் இயங்கும் மலையக பகுதியில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர் குறிப்பாக அக்கரபத்தனை டயகம லிந்துலை ஆகிய வைத்தியசாலைகளில் இக்குறைப்பாடு காணப்படுகின்றது. இவ்வைத்தியசாலைகளை அதிகமான தோட்ட தொழிலாளர்கள் பயன் படுத்திவருகின்றனர். அரச வைத்தியசாலைகளில் இவ்வாறான குறைப்பாடுகள் காரணமாக வைத்திய அதிகாரிகளால் சம்பந்தபட்ட நோயாளர்களை தனியார்...
Read More

டிக்கோயா இன்வெறி தோட்ட சிறுவனின் மரணம் தலைநகரில் மலையக இளைஞர்களுக்கு தொழில் பாதுகாப்பும் உயிர் உத்தரவாதமும் இல்லை! : கணபதி கனகராஜ்

கொழும்பில் தொழில் செய்த இடத்தில் மரணமடைந்த டிக்கோயா மணிக்கவத்தை தோட்டத்தை சேர்ந்த பத்மநாதன் அஜித்குமார் என்ற சிறுவனின் மரணம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறிய வேண்டும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கோரிக்கைவிடுத்துள்ளார். பல்வேறு ஆசைவார்த்தைகளை காட்டி வேலைக்கு ஆள்பிடிக்கும் தரகர்களால் மலையக இனைஞர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஏமாற்றப்பட்டு தொழில் பாதுகாப்பில்லாத இடங்களில் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு கொழும்புக்கு அழைத்து செல்லப்படும் இளைஞர்கள்அதிக வேலைப்பழுவுடன், பெரும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இவர்கள் விடயத்தில்...
Read More

லயன் குடியிருப்பு வாழ்க்கையை இல்லாதொழித்தால் மாத்திரமே மலையக மக்கள் சுபீட்சத்தை காணமுடியும்! : சோ.ஸ்ரீதரன்

மலையக மக்கள் 200 வருடங்களைத்தாண்டியும் இன்றும் அதே லயன் அறைகளிலும்இ தற்காலிக குடில்களிலுமே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலை மாற்றமடைந்து லயன் முறை முற்றாக இல்லாதொழித்தால் மாத்திரமே மலையக மக்கள் தங்கள் சுபீட்சத்தை அடைந்து கொள்ள முடியுமென மத்திய மாகாண சபை உறுப்பினரும்இ தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். டிக்கோயா டிலரி தோட்டத்திற்கு விஜயம் செய்து அங்கு தற்காலிக குடில்களில் வாழ்ந்த மக்களை அமைச்சர் திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பார்வையிட சென்று அங்கு உரையாற்றும் போதே...
Read More

மஹிந்தானந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாரிய மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முற்பகல் 10.00 மணியளவில் ஆஜராகியுள்ளார். நாவலபிட்டி ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமாக இடமொன்றில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டம் ஒன்று குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை பார்க்க சென்ற மஹிந்த பேரனை மடியில் இருத்தி செல்பியும் எடுத்து மகிழ்வு!

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சிகிச்சைக்காக வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்வையிட நேற்றைய தினம் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ சென்றுள்ளார். அமைச்சரை பார்வையிட சென்ற மஹிந்த செல்பி எடுப்பதையும் மறக்கவில்லை. அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் வைத்தியசாலையில் இருந்த அவரது பேரனை மஹிந்த மடியில் இருத்தி கொஞ்சியதுடன், குறித்த குழந்தையுடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்துள்ளார். தனது கூட்டணியில் இருந்து விலகினாலும் அமைச்சரை பார்வையிட மஹிந்த சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!