முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 28, 2016

முக்கிய இரு நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்த தீர்மானம்! : ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்

பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான தனது சேவையை, இவ்வருடத்தின் குளிர்காலத்துடன் (winter) இடைநிறுத்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிராங்பேர்ட் மற்றும் கொழும்புக்கு இடையிலான இறுதி விமான சேவை (UL553/554) ஒக்டோபர் 30ம் திகதியும், பாரிஸில் இருந்து கொழும்புக்கான இறுதி விமான சேவை (UL 563/564) நவம்பர் 6ம் திகதியும் இடம்பெறவுள்ளது. அத்துடன் நாளாந்தம் ஏற்படும் நிதி இழப்புக் காரணமாக குறித்த விமான சேவைக்கு நிதி வழங்குவதை...
Read More

ஜெனீவாவில் இலங்கைக் குழுவினர் சந்திப்புக்களுக்கு தயார் நிலையில்!

ஜெனீவா சென்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினம் அரச சார்பற்ற நிறுவனங்களையும், மனித உரிமைகள் ஆணையகத்தின் உறுப்பு நாடுகளையும் சந்திக்கவுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் ஆணையக கட்டிடத்தில் இந்த சந்திப்புகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மறுசீரமைப்பு செயற்பாடுகள் மற்றும் மனித உரிமை மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் நாளையதினம், இலங்கை தொடர்பான தமது வாய்மொழி...
Read More

ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு!

அமைச்சர் ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளார். நாளை மறுதினம் இதற்கான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சியின் தலைவரான அவர், எதிர்வரும் வியாழக்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!