முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 14, 2016

நான்குபேரின் கொலைக்கு காரணமான பாதாள உலக நபர் பல்லேகலயில் கைது!

நான்கு பேரை கொலை செய்துவிட்டு கடந்த இரண்டு வருடமாக மறைந்திருந்த பாதாள உலக நபரொருவர் பல்லேகலயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொம்பு ரொசான் என்று அழைக்கப்படும் பாதாள உலக நபர் உட்பட நான்குபேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு மேற்படி நபர் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.

மீனவர்களுக்கான காப்புறுதி கிடைக்காதோரினை உடன் பதியக் கோரிக்கை!

மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சின் ஊடாக, மீனவர்களுக்கு 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான காப்புறுதி திட்டத்தை பெற்றுகொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, யாழ் மாவட்டத்தில் உள்ள 14 மீன்பிடி பரிசோதகர் பிரிவில் உள்ள 21ஆயிரம் மீனவ குடும்பங்கள், தமது பதிவுகளை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். பதிவுகள் அனைத்தும் இம் மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான...
Read More

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்றார்!

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தனது அமைச்சு பணிகளைப் பொறுப்பேற்றார். ராஜகிரியவில் அமைந்துள்ள அமைச்சில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க ஆகிய அமைச்சர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தயா மாஸ்டர் கைதாகி பிணையில் விடுதலை!

இலங்கை அரசின் செல்லப்பிள்ளையான தயா மாஸ்டர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவர் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. எனினும் விசாரணை எதற்கென தெரியாத போதும் அவர் தற்போது பணியாற்றும் தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் என கூறப்படுகின்றது. முன்னதாக இறுதி யுத்த காலப்பகுதியில் ஜோர்ஜ் மாஸ்டர் சகிதம் சரணடைந்த அவர் தொடர்பிலான விசாரணை தொடர்கின்ற போதும் குற்றச்சாட்டுக்களினிலிருந்து ஜோர்ஜ் மாஸ்டர் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள்...
Read More

வட் வரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்படமாட்டது!

எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த வட் வரி தொடர்பான அறிக்கை அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார். கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வட் வரி தொடர்பான வழக்கொன்று உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தீர்ப்பின் அடிப்படையிலேயே வட் வரி தொடர்பில் அறிக்கையினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்....
Read More

சரணடைந்த போராளிகள் குறித்த வழக்கு : இராணுவ கட்டளைத் தளபதி மன்றில் ஆஜர்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக இராணுவ தரப்பு தெரிவித்திருந்தது. எனினும், கடந்த வழக்கு விசாரணைகளில் இராணுவத்தின் சார்பில் மன்றில் ஆஜராக தவறியிருந்த முல்லைத்தீவு 58ஆம் படைத்தளத்தின் கட்டளைத்...
Read More

தெல்தோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! ; ஒருவர் பலி

தெல்தோட்டை லூல்கந்துரபகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அறுவர் வைத்தியசாலையில். நால்வர் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த பொலிசார் தெரிவித்தனர். ஜெகதீஸ்

நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் இன்று காலை மாடிப்படியிலிருந்து தவறி விழுந்துள்ளார் கமல்ஹாசன். இதனால் அடிபட்டு, முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவுகளுடன் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் தற்போது நலமுடன் உள்ளாராம்!

சிங்கராசா தீர்ப்புக்கு அடிப்படை உரிமை மனுத்தாக்கல்!

உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டள்ள சிங்கராசா வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் ஊடாக இரத்து செய்யப்படுமாயின் அது சட்டமுறைமையில் சிக்கல்களை தோற்றுவிக்கும். அவ்வாறான நிலைமையொன்று உருவாகுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமையானது, தன்னுடைய மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி தர்ஷன வேரவகே என்பவரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளார்.

வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைக்கான வர்த்தமானி அறிக்கை இன்று! (விலைப்பட்டியலுடன் முழு விவரம்)

வற் வரி விலக்களிக்கப்பட்ட 15 அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரண விலைகள் இன்று (14) அறிவிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதன்படி நிர்ணய விலைகளாக; சீனி 1Kg – ரூ.95 கோதுமை மா 1Kg – ரூ.87 சிவப்பு பருப்பு 1Kg – ரூ.169 நெத்தலி (தாய்லாந்து) – ரூ.495 நெத்தலி (டுபாய்) – ரூ.410 உள்நாட்டு நெத்தலி – ரூ.260 பயறு – ரூ.220 தோலுடனான கோழி இறைச்சி –...
Read More
error: Content is protected !!