முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 14, 2016

மதுபாவனை தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாத சிக்கலில் மாட்டியுள்ள மலையக அரசியல் தலைமைகள்!

இருவாரங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் நடைபெற்ற மது ஒழிப்பு பிரச்சாரத்தின் போது நுவரெலியா மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 1600 கோடி ரூபாவிற்கு மது அருந்தப்படுவதாகவும், மதுபாவனையில் இந்த மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், இந்த மாவட்டத்திலேயே அதிகமாக பெண்கள் மது அருந்துவதாவும் குறிப்பிட்டிருந்தார். எப்போதும் எதற்கும் அறிக்கை விட காத்துக்கொண்டிருக்கும் எந்தவொரு மலையக அரசியல்வாதியும் இது வரை இது தொடர்பாக வாய் திறக்கவில்லை என்பது வேதனை குறிய விடயமாகும். இக் கருத்தை வேறு யாராவது சொல்லியிருந்தால் அன்று ஜனாதிபதியின்...
Read More

அனுமதிப் பத்திரம் இன்றிய கைத் தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு முற்றுகை!

அனுமதிப் பத்திரம் இன்றி கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிட, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு பூராகவும் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை பதிவு செய்து கொள்வதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி குறித்த விற்பனை நிலையங்கள் பல தற்போது பதிவு செய்யப்பட்டிருப்பதாக...
Read More

எட்கா உடன்படிக்கை குறித்து சர்வஜன வாக்கெடுப்பு தேவை!

இந்திய இலங்கை பொருளாதார உடன்டிக்கை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன விடுத்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் அரசாங்கம் எட்கா உடன்படிக்கையை செய்து கொள்ளவுள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் பட்சத்தில், இலங்கையின் அனைத்து துறைகளிலும் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்துவர். இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காது போகும். இது வற் வரி அதிகரிப்பை விட மோசமானது என்றும் மகிந்த யாப்பா...
Read More

நாளை முதல் காலநிலையில் பாரிய மாற்றம்! : வளிமண்டலவியல் திணைக்களம்

நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனதெரிவித்துள்ளது....
Read More

5 வருடத்திற்குள் எல்லோருக்கும் தனிவீடுகள்! : சிங்பொன்னையா

நான் எனது வாழ்க்கையை ஆரம்பித்ததே தொழிற்ச்சங்கத்தில்தான் இன்று 48 வருடங்கள் தொழிற்ச்சங்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக உழைத்தவன் நான் அவர்களின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்தவன். அவர்களின் பிரச்சினைகளுக்கான பரிகாரமும் தெரிந்தவன் நான் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங்பொன்னையா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 20 வருடங்களுக்கு முன்பு சிங்பொன்னையா என்றால் தோட்ட துரை மார்களுக்கு...
Read More
error: Content is protected !!