முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 15, 2016

இணையத்தைக் கலக்கிய ‘தங்கமனிதர்’ கல்லால் அடித்துக் கொலை!

புனே – சுமார் ஒன்றரை கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து இணையத்தைக் கலக்கிய புனேவைச் சேர்ந்த ‘தங்கமனிதர்’ தத்தாத்ரே புஜே, கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 3.5 கிலோ எடையுடன், 22 காரட் தங்கத்தினால், 15 கலைஞர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட தங்க சட்டையை அணிந்து வலம் வந்தார் தத்தாத்ரே. உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த சட்டையாக அது கருதப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நிகழ்ச்சி ஒன்றில்...
Read More

பிரதமருடன் நேரடி பேச்சுவார்தைக்கு ஏற்பாடு செய்துவிட்டே புறக்கோட்டை கடைவீதிக்கு வந்தோம்! : அமைச்சர் மனோ

பெறுமதி சேர்க்கை வரி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடி பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து தாருங்கள். நாங்கள் கடையடைப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என்று நேற்று இரவு எம்மை சந்தித்த புறக்கோட்டை வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தார்கள். அந்த கோரிக்கையை ஏற்று பிரதமருடன் கலந்துபேசி நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துவிட்டு, அந்த செய்தியை எடுத்துக்கொண்டே நானும் என்னுடன், அமைச்சர் பழனி திகாம்பரம், முஜிபுர் ரஹ்மான் எம்பி, மாகாணசபை உறுப்பினர் கே.டி. குருசாமி, எஸ். ராஜேந்திரன் ஆகியோரும் இன்று...
Read More

கலாசாரம் என்பது மண்டபத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்துவிட முடியாது! : திலகர் எம்பி

மலையக மக்கள் கலாசார மண்டபங்களைக் கோருவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கொடை வள்ளல்களும் கூட அதனை அமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதேநேரம் அத்தகைய கலாசார மண்டபங்களுக்குள் மாத்திரம் நாம் பண்பாட்டைப் பேண முடியாது. அது உணர்வோடு கலக்க வேண்டும்.அரசியல் பணிகளில் பங்கேற்பது கூட ஒரு கலாசாரமாக்க் கொள்ளப்படல் வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் எம்பி தெரிவித்துள்ளார். மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு...
Read More

முன்னாள் போராளிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளில் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று வந்தவர்களின் உடல் பரிசோதனையை மேற்கொள்வதற்காக பதிவு செய்யுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சியினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் மரணத்தை தழுவி வருவதாகவும் இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற...
Read More

கட்டுப்பாட்டு விலைக்கு புறம்பாக விற்பனை செய்தால் 1977 அழைக்கவும்!

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையின்படி பொருட்களை விநியோகம் செய்ய வேண்டுமாக இருந்தால், சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது சந்தையில் விற்பனையிலுள்ள அத்தியாவசிப் பொருளான சீனி ஒரு கிலோவுக்கு 115 ரூபா செலவாகின்றது. இதில் 30 ரூபா அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான வரியை நீக்கினால், சீனியை 85 ரூபா செலவு செய்து கொண்டுவந்து 95 ரூபாவுக்கு சில்லறை விலைக்கு விற்னை செய்ய...
Read More

சுவாதியைக் கொன்றது ஏன்? – காவல்துறையின் கேள்விகளுக்கு ராம்குமார் பதில்!

இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ராம்குமாரை சிறையில் சென்று பார்த்த வழக்கறிஞர் தரப்பு, கொலை நடந்த சமயம் தான் மேன்சனில் இருந்ததாக ராம்குமார் தங்களிடம் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக ராம்குமாரை காவல்துறை விசாரணை செய்து வருகின்றது. அவ்விசாரணையில் ராம்குமார் கூறியதாக தற்போது வெளிவரும் தகவல் என்னவென்றால், தான் காதலை வெளிப்படுத்தியபோது, தன்னை தேவாங்கு...
Read More

டிசம்பர் 31 உடன் “Whatsapp” செயலிழக்கும் ஸ்மார்ட் கைப்பேசிகளது பட்டியல்!

ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளில் அதிகளவு மக்கள் பாவிப்பது “WhatsApp” எனும் குறுந்தகவல் app என்றால் அது பிழையாகாது. ஆனால் குறித்த “WhatsApp” app ஆனது இவ்வருடம் டிசம்பர் 31ம் திகதியுடன் செயலிழக்கச் செய்யப்படுவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்கு, குறித்த “App” ஆனது சில ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளுக்கு மட்டுமே விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது. ” WhatsApp” செயலிழக்கும் சில ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள்.. BlackBerry, including BlackBerry 10rn Nokia S40 rn Nokia...
Read More

பலத்த காற்றினால் 11 வீடுகள் சேதம்!

மொரட்டுவ, கொரல்லவெல்ல பிரதேசத்தில் இன்று காலை பலத்த காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக 11 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தற்போது தமது அதிகாரிகள் அப்பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இது தவிர எதிர்வரும் நாட்களில் மத்திய மலைநாட்டுப் பகுதிகள் மற்றும் கிழக்கிலும் அதிக மழை பெய்யக் கூடும் எனவும் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் மாலிங்க!

முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இலங்கை டி20 அணியின் முன்னாள் தலைவர் மலிங்க பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் ஆடவுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்க காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் தொடர் வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனாலே டி20 உலகக்கிண்ண தொடரின் போது தலைவர் பதவியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல், டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்தும் விலகினார். அவர் தொடர்ந்து போட்டிகளில் இருந்து விலகி ஓய்வு பெற்று வரும்...
Read More

வாசு தேவவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்த பாட்டலி ஆயத்தம்!

2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு கேள்வி பத்திர விடயத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முழுமையாக மறுத்துள்ளார். நுரைச்சோலை அனல் மின்சார மையத்துக்கான கேள்விப்பத்திரக் கோரலுக்கு தாம் பொறுப்பான அமைச்சர் அல்ல என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இன்னும், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் பாட்டலி மீது நேற்று சுமத்திய குற்றச்சாட்டுக்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. நாணயக்காரவின் குற்றச்சாட்டின்படி நிலக்கரி கொள்வனவு கேள்விப்பத்திர விடயத்தில்...
Read More
error: Content is protected !!