முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 25, 2016

கேபி’க்கு எதிரான மனு விசாரணைக்கு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தலைவர்களுல் ஒருவராக கருதப்பட்ட கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேபியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்படி, இந்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆவணங்களை தொலைத்துவிட்டதால் உறவுகளையே தொலைத்து விட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற குடும்பங்கள்!

கணவன் மனைவி உறவு, பெற்றார் பிள்ளைகள் உறவு, குடும்ப உறவு உட்பட எந்த உறவுகளும் தொடர்ந்து பேணப்பட்டால் மட்டுமே அவை தொடர்ந்து இருக்கும். தொழிலுக்கு சென்று அல்லது வேறு தேவைகள் காரணமாக உறவுகள் நீண்டகாலம் பிரிந்திருந்திருக்கும் போது அந்த உறவுகள் மறக்கப்பட்டு போய்விடுகின்றன. இவ்வாறான ஒரு நிலைமையை பாதுகாப்பான வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் பெற்றுக்கொள்ளாமல் வெளிநாட்டு சென்ற பலரின் குடும்பங்களில் காணக்கூடியதாக உள்ளது. வெளிநாடு சென்றவரின் கடவூச்சீட்டு, விசா, வேலை ஒப்பந்தம், வேலைவாய்ப்புக்கு அனுப்பிய...
Read More

நீதிபதிகளுக்கு இந்தியாவில் ஐந்து நாள் பயற்சி!

இந்தியா மற்றும் இலங்கை நீதிபதிகளுக்கிடையிலான அனுபவங்களை பரிமாற்றும் நிகழ்வொன்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மத்திய இந்தியாவிலுள்ள போபால் நகரில் நடைபெறவுள்ளது. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் முகமாக, தேசிய நீதித்துறை அகடமியால் இந்த அனுபவங்களைப் பரிமாற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐந்து நாள் பயிற்சி நிகழ்வாக இது முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இந்த வருடத்தில் முன்னெடுக்கப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடுகளில் இதுவே முதலாவது நிகழ்ச்சியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் பிரதம நீதியரசரும்...
Read More

மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்க அபிவிருத்தி திட்டத்தின் புதையல் பொருட்கள் பதிக்கும் நிகழ்வு!

மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்க அபிவிருத்தி திட்டத்தில் புதையல் பொருட்கள் பதிக்கும் நிகழ்வு இன்று காலை 10.59 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில் குறித்த இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கொழும்பு – லோட்டஸ்ட் வீதிப் பகுதியில் கடும் வாகன நெரிசல்!

ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக கொழும்பு – லோட்டஸ்ட் வீதிப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

சகவாழ்வா? இனவாதமா? என்று சிங்கள மக்கள் முடிவு செய்ய வேண்டும்! ; அமைச்சர் மனோ கணேசன்

கூட்டு எதிரணியின் உத்தேச பாதயாத்திரை ஒரு இனவாத யாத்திரை. மேலோட்டமாக அவர்களது கோஷங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றின் உண்மை அர்த்தங்கள் வேறானவை. இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவையே அவர்களது உண்மை கோஷங்கள். இவற்றை சுமந்துக்கொண்டே அவர்கள் கண்டியில் இருந்து பாதயாத்திரை வர முயல்கிறார்கள். சிங்கள மக்களை உசுப்பிவிடவே இந்த இனவாத பாதயாத்திரையின் போது புதிய அரசியலமைப்பு முயற்சிகள், போர்குற்றங்கள் ஆகியவை தொடர்பில் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு கொழும்பை நோக்கி இவர்கள் வர முயல்கிறார்கள். இதை சிங்கள...
Read More

பிரபாகரனின் படத்துடன் அவுஸ்ரேலியாவில் நிதி திரட்டப்படுகிறதாம்! – பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் பணம் திரட்டி வருகின்றனர் என நாடாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ‘பிரபாகரனின் புகைப்படங்களை காண்பித்து அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் இவ்வாறு பணம் திரட்டப்பட்டு வருகின்றது. நான் ஒரு மாத காலம் வெளிநாட்டு தங்கியிருந்தேன். சிட்னி மற்றும் மெல்பர்ன் ஆகிய நகரங்களில் சில நாட்கள் நான் தங்கியிருந்தேன். இதன் போது இலங்கை நண்பர்கள் என்னை கறுப்பு கோர்ட் அணிவித்து...
Read More

வெலிக்கடை படுகொலை தினம் இன்று அனுட்டிப்பு!

இலங்கை அரசின் முழுமையான அணுசரனையுடன் 33 வருடங்களுக்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையின் அதி உச்சகொடூரங்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் போது இடம்பெற்ற வெலிகடை சிறைச்சாலை படுகொலை நாள் இன்று தமிழர்களால் மிக உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த இலங்கை அரச படையினரில் 13 பேரின் உயிரைப் பறித்ததற்காக பழிதீர்க்கும் வகையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக்...
Read More

தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமருடன் பேச்சுவார்த்தை!

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அலரி மாளிகையில் இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. பெருந்தோட்டத்துறை அமைச்சு, திறைசேரி, முதலாளிமார் சம்மேளனம் ஆகிய நிறுவனங்களின் பிரதானிகளுடன் பிரதமர் இந்த விசேட சந்திப்பினை நடத்தவுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிககைகள் குறித்து ஆராயப்பட உள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களை உயர்த்துவதற்கு பிராந்திய பெருந்தோட்ட...
Read More

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் ; இன்டர்போலின் உதவி நாடப்படுகின்றது

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் உதவியை பெற எண்ணியுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதுமாத்திரமின்றி கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமெரிக்கா போன்ற நாடுகளின் புலனாய்வு தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
error: Content is protected !!