முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 28, 2016

பொகவந்தலாவையில் 14 வயது மாணவி தாய்மையானார்; காரணமானவரை கைது செய்ய முடிவு!

பொகவந்தலா குயினா பகுதியில் 14 வயது மாணவியொருவர் கர்ப்பமடைந்திருப்பதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைபாடு ஒன்றையடுத்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். மேற்படி மாணவியின் உடல்நிலை மாற்றத்தை கண்ட ஒருவர் 119 அவசர  சேவைக்கு அழைத்து செய்த முறைப்பாட்டையடுத்து மேற்படி சிறுமியை அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர். சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமானவர் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியை சேர்ந்தவர் எனவும் சகோதர உறவுமுறையை கொண்டவர் எனவும் மேற்படி சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். மேற்படி சிறுமியை வைத்தியசாலையில் சேர்க்க...
Read More

பிலிமதலாவையில் கூட்டு எதிரணியினர் அம்புலன்ஸ் மீது தாக்குதல்!

பிலிமதலாவ பகுதியில் கூட்டு எதிரணியினர் வீதியில் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதயாத்திரை சென்ற பாதையில் பயணித்த அம்புலன்ஸ் வண்டி தமக்கு இடையூறு செய்வதாக கருதி அந்த வண்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை பொலிசார் தலையிட்டு தடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிமத்தலாவை பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்!

அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை சற்றுமுன்னர் பேராதெனியவில் இருந்து ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுவருவதால் பிலிமத்தலாவை பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மதுபானசாலைகளுக்கு 10 நாட்கள் பூட்டு!

கண்டி மற்றும் கண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை 10 நாட்களுக்கு மூடவுள்ளதாக கலால் தீர்வை திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவிருக்கும் பெரஹராவை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் திகதி வரையிலேயே மதுபானசாலைகள் மூடப்பட உள்ளன. இந்த காலக்கட்டத்தின் போது சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொள்வனவு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால் தீர்வை திணைக்களம் அறிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை!

கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கண்டியில் ஆரம்பமாகவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரைப் போராட்டத்தின் பின்னர் கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும். சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கட்சியை...
Read More

ஐஎஸ் கோஷமிட்ட பயணி: இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!

மும்பை – துபாயிலிருந்து கேரளா செல்லும் இண்டிகோ விமானத்தில், பயணிகளில் ஒருவர் திடீரென ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கோ‌‌ஷங்களை உரக்க கத்தியதால், அவ்விமானம் மும்பையில் அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அப்பயணியை மும்பைக் காவல்துறை கைது செய்துள்ளதாகத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.
error: Content is protected !!