முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 30, 2016

சூழ்ச்சியினால் நல்லாட்சியினை கவிழ்க்க முடியாது! ; ஜனாதிபதி

அரசியல் ரீதியான சதி முயற்சிகளினால் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பொலன்னறுவையில் தெரிவித்துள்ளார். தேசிய நடமாடும் சேவையின் இறுதி நாள் நிகழ்வு இன்று பொலன்னறுவையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த அரசாங்கம் ஐந்து வருட காலத்துக்கு நிலைக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள்...
Read More

தமிழ் முற்போக்கு கூட்டனியை உடைக்க முயற்சி! : அமைச்சர் திகாம்பரம்

தமிழ் முற்போக்கு கூட்டனிக்கு கிடைத்த வெற்றியே தோட்டதொழிலாளர்களுக்கான 2500 ரூபாய் இடைக்கால கெடுப்பனவு. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது மக்களின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்து பெற்றுக்கொடுத்த 2500 ரூபாயை வாங்க வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உருப்பினர்கள் தோட்டம் தோட்டமாக சென்று கூறிவந்தனர். ஆனால், மக்கள் அவர்களின் கூற்றை நிராகரித்து 2500 ரூபாயை பெற்றுக்கொண்டனர் என மலையகபுதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்தார். நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்கில் பயனாளிகளுக்கான கூரைத்தகடுகள்...
Read More

புகையிலை நிறுவனங்கள் மீதான வரியை 90 வீதம் வரை அதிகரிக்கப்படும்! ; ராஜித

புகையிலை நிறுவனங்கள் மீதான வரியை 90 வீதம் வரை அதிகரிப்பதற்கு ஆலோசனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த ஆலோசனையை முன்வைப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்போது புகையிலை நிறுவனங்கள் மீது 72 வீதம் வரை வரி அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி ஆகியோருக்கிடையிலான உடன்படிக்கைக்கு பச்சைக்கொடி!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையிலான உடன்படிக்கைக்கு அனுமதி கோரப்பட உள்ளது. தேசிய அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரண்டாண்டுகால உடன்படிக்கையை ஐந்து ஆண்டுகள் வரையில் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தத் தீர்மானம் தொடர்பில் அந்தந்த கட்சிகளின் செயற்குழு மற்றும் மத்திய செயற்குழுகளின் அனுமதியானது எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது. மேலும், நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தை ஐந்து...
Read More

யால தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது!

யால தேசிய பூங்கா, செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையிலும் 45 நாட்களுக்கு மூடப்படும் என்றும் வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது. யால தேசிய பூங்காவில் வசிக்கின்ற மிருகங்களின் இயற்கை நடத்தையில் எவ்விதமான இடையூறுகள் ஏற்படாத வகையிலும், பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலுமே குறித்த இந்தப் பூங்கா மூடப்படவிருக்கின்றது. ஒவ்வொரு வருடங்களிலும் இந்தக்காலப்பகுதியில், யால தேசியப் பூங்காவை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தோனிசியா மரணதண்டனை: 10 பேருக்கு தற்காலிக தண்டனை நிறுத்தம்!

சிலாகாப் – நேற்று வெள்ளிக்கிழமை 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்த இந்தோனிசிய அரசு, அதில் 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டு, எஞ்சியுள்ள 10 பேரை நூசாகம்பாங்கன் சிறையிலேயே வைத்திருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்பதையும் இந்தோனிசியா அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தத் தற்காலிக தண்டனை நிறுத்தம் நிரந்தரமாக்கப்படுமா? என்று கைதிகளின் குடும்பத்தினர் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடும், பிரார்த்தனைகளோடும் காத்திருக்கின்றனர்.
error: Content is protected !!