முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 5, 2017

தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம்! – ஸ்ரீ லங்‌கா முஸ்லிம் காங்கிரஸ் அதிரடி

ஸ்ரீ லங்‌கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நேற்று இரவு நடைபெற்‌ற உயர்பீடக் கூட்டத்தின்போது ஏகமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, அக்கட்சி அறிவித்துள்ளது. தவிசாளர் பதவியில் இருந்துகொண்டு கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் பஷீர் சேகுதாவூதை, அப்பதவியிலிருந்து நீக்குமாறு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்ததாகவும் இதன்போது, செயலாளர் நாயகம் ஹஸன் அலி, மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீட் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும்...
Read More

8 மில்லியன் பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம்!

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்திருக்கும் குடிநுழைவு மீதிலான கடுமையான சட்டவிதிகள் காரணமாக, ஏறத்தாழ 8 மில்லியன் சட்டவிரோதக் குடியேறிகள் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் எந்த ஓர் அமெரிக்க அதிபரும் இத்தகைய அதி தீவிரமான, கடுமையான அதிரடி மாற்றங்களைப் பிறப்பித்ததில்லை என்று கூறும் அளவுக்கு டிரம்ப் செயலாற்றி வருகின்றார். இதனால் கடும் கண்டனங்களையும் சந்தித்து வருகின்றார். இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகத்தான் அமெரிக்க வாக்காளர்கள் தன்னைத் தேர்ந்தெடுத்தார்கள் எனக்...
Read More

இன்று நாட்டில் தகவல் அறியும் சட்டமும் கருத்து சுதந்திரமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது! ; இராதாகிருஸ்ணன்

இன்று நாட்டில் தகவல் அறியும் சட்டமும் கருத்து சுதந்திரமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு நிலையில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர வட மாகாண முதலமைச்சரை அடித்து விரட்டுங்கள் என கூறியிருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை அமைச்சர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், இன்று சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கின்ற அனைத்து விடயங்களையும் நாம் ஏற்றுக்...
Read More

மக்களுக்கு நாட்டை நேசிக்கும் கலாச்சாரத்தை கற்பிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்! : பிரிடோ நிறுவனம்

பெரும்பான்மை மக்களுக்கும் நாட்டை நேசிக்கும் கலாச்சாரத்தை கற்பிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நாட்டை நேசிப்பது ஒரு கலாச்சாரமாக மாற வேண்டும். சுதந்திர தினத்தை அர்த்தமுடன் கொண்டாடுவோம். தேசிய கீதத்தை கூட தமிழில் பாட முடியாத நிலையில் இந்த நாடு இருந்தது. இதன் காரனமாக நாம் நமது நாடு என்று சொந்தம் கொண்டாடும் உணர்வு நமக்கு இருக்கவில்லை. ஆயினும் இந்நிலையில் தொடர்ச்சியாக மாற்றம் ஏற்பட்டு கடந்த சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது நமக்கு ஒரு...
Read More

மஸ்கெலியாவில் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த 4 பேருக்கு அபராதம்!

மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள கடைகளில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர்கள் நான்கு பேருக்கு எதிராக அட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள 10 விற்பனை நிலையங்கள் மஸ்கெலியா பிரதேச பொது சுகாதார அதிகாரிகளினால் சோதனையிடப்பட்டது. விலைப்பட்டியல் காட்சியப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை வைத்திருந்தமை, கூடிய விலைக்கு...
Read More
error: Content is protected !!