முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 11, 2017

இலங்கை கைவிரித்தால் சர்வதேசம் களத்தில் குதிக்க வேண்டும்; வவுனியாவில் கூட்டமைப்பு பிரகடனம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த தவறினால் சர்வதேச சமூகம் களத்தில் இறங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டமொன்று இன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை வவுனியாவில் நடைபெற்றது. சந்திப்பின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- ஐ.நா மனித உரிமைப்...
Read More

சிங்களத்துக்கு முதல் இடம் கொடுத்த கருணா; பின் தள்ளப்பட்டது தாய்மொழி!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தரைப்படை தளபதிகளுள் ஒருவராக விளங்கிய கருணா அம்மான் அண்மையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணி என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்தார். அதன் அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கட்சிக்குரிய பெயர்ப் பலகையில் முதலில் சிங்கள மொழியிலேயே கட்சியின் பெயர் எழுதப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் கருணாவின் தாய் மொழியலான தமிழுக்கு இரண்டாம் இடமே வழங்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பின்னர் மஹிந்தவுடன் சங்கமித்த கருணா, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்த...
Read More

அமைச்சுகள்மீது மைத்திரி கழுகுப் பார்வை; விரைவில் அதிரடி மாற்றம்! தொண்டாவுக்கு அடிக்குமா அதிஷ்டம்?

அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரம் காட்டிவருகிறார் என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இதற்காக தற்போதிலிருந்தே அமைச்சுகளை அவர் கண்காணித்து வருகிறார் என்றும், இறுதிக்கட்ட மதிப்பின் பின்னர் அதிரடி மாற்றத்தை செய்வார் என்றும் அந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கடந்தசில மாதங்களுக்கு முன்னரே அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார். எனினும், பிரதமரின் தலையீட்டால் அது பிற்போடப்பட்டது. எனினும், விரைவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென ஜனாதிபதி தற்போது உறுதியாக இருக்கின்றார். சில அமைச்சுகள்...
Read More

நுவரெலியாவில் பல குடும்பங்கள் ஆபத்தில்; துரித நடவடிக்கை எடுக்குமாறு திகாவிடம் டக்ளஸ் கோரிக்கை

நுவரெலியா, டொரிங்டன், கல்மதுரை பிரிவின் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் அனர்த்த ஆபத்துக்களை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களது நிலை குறித்து ஆராய்ந்து, உரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் திகாம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா. நாடாளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:- நுவரெலியா மாவட்டத்தில், அக்கரபத்தனை பகுதியைச் சேர்ந்த டொரிங்டன் தோட்டத்திற்குரிய, கல்மதுரை பிரிவின் 06ஆம் இலக்க தோட்டக் குடியிருப்பைச் சார்ந்த ஒரு குடியிருப்பானது...
Read More

மலையகத்தில் காணாமல்போனோர் குறித்தும் விசாரணை அவசியம்; லோரன்ஸ் வலியுறுத்து

“ மலையக இளைஞர்களும் காணாமல்போயுள்ளனர். எனவே, காணாமல்போனோர் விவகாரத்தை கையாள்வதற்காக அமைக்கப்படவுள்ள அலுவலகம் அவர்கள் குறித்தும் விசாரணைகளை நடத்த வேண்டும்’’ என்று மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லோரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர், காணாமல்போனவர்களின் பிரச்சினை ஆகியன தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:- “ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்...
Read More

மகளிர் படையணியை பலப்படுத்துகிறது ம.ம.மு.; 26 இல் மஸ்கெலியாவில் மாநாடு!

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் மாநாடும், மகளிர் தின நிகழ்வுகளும் எதிர்வரும் 26 ஆம் திகதி மஸ்கெலியாவில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை மலையக மகளிர் முன்னணியின் செயலாளர் சுவர்ண லத்தாவும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் அனுசா சந்திரசேகரனும் முன்னெடுத்து வருகின்றனர். முன்னணியின் தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் அ. லோரன்ஸ் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். சிறப்பு விருந்திரனராக இந்திய துணைத்தூதுவர் ராத வெங்கட் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன்,...
Read More

`சிரங்கா-குரங்கா’ கூட்டணி ச`க’தியில் அமர்ந்து வெட்டிப்பேச்சு; மின்னல் வேகத்தில் தாக்கிப் பேசுகிறார் திலகர் எம்.பி.

“சனி மாலை ச ‘க’ தியில் அமர்ந்து பேசும் திண்ணைப் பேச்சுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை.அது காழ்ப்புணர்வாளர்களின் களம்’’ என்று விமர்சித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமான எம். திலகராஜ். “தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு ஒரு வரலாறு உண்டு. அதேநேரம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான அங்கத்துவம் கட்சிகளில் ஒன்றாக இணைந்து இன்று புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றது. சிரங்கா – குரங்கா என இருவர் ச’க’தியில் அமர்ந்து...
Read More

அரசியல் பலத்தை இழந்துவிட்டது இ.தொ.கா.; ரமேஷ் தெரிவிப்பு

மலையக மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசியல் பலம் இல்லை என்று மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஸ்வரன் தெரிவித்தார். அக்கரப்பத்தனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தொழில் மற்றும் ஏனையை உரிமைகளைத் தட்டிக்கேட்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடம் தற்போது நிலையான பலம் இல்லை. ஆறுமுகனின் கையில் அரசியல் பலம் இருக்கும்போது அனைத்தும் முறையாக நடைபெற்றன. இன்று அவரின் கையில் பலமில்லாததால் மலையக மக்களின் வாழ்வும் இருளுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது....
Read More
error: Content is protected !!