முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 16, 2017

காட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன்!

மேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் தொங்கிக் கொண்டே தேன் எடுப்பது, நண்பர்களுடன் கேலி பேசுவது, நாயகி கேத்ரின் தெரஸாவுடன் காதல் என நகரும் கதையில் ஃபாரஸ்ட் ரேஞ்சரால் சில சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. அவர்களை அங்கிருந்து காலி செய்ய...
Read More

விதியின் சதி…. இரட்டையர்கள் தம்பதிகள் ஆன சோகம்!

அமெரிக்காவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், திருமணத்துக்கு பிறகு தாங்கள் இரட்டையர்கள் என்னும் தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவர் ஜாக்சன் என்பவரிடம் ஒரு காதல் தம்பதி குழந்தை பேறு சிகிச்சைக்காக வந்துள்ளனர். ஜாக்சன் அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளார். அவர்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் ஜாக்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காதல் தம்பதி இரட்டையர்கள் அதாவது ஒன்றாக பிறந்தவர்கள் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய...
Read More

குப்பை மலை ஏன் சரிந்தது? ஆராய தொழில்நுட்பக்குழுவை அனுப்புகிறது ஜப்பான்

மீத்தொட்டமுல்லை பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் இலங்கை வாழ் மக்களுக்கும், அரசுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை ஜப்பான் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஜப்பான் நாட்டு பிரதமர் சின்சோ அபே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். ‘ மேற்படி சம்பவத்தால் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. உடமைகளும் சேத மடைந்துள்ளன. அதிகளவானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இது துர்திஸ்டவசமான சம்பவமாகும். சம்பவம் தொடர்பில் ஜப்பான் மக்கள் அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலைமையினை,...
Read More

மைத்திரி, மஹிந்த, ரணில், கோட்டாவுக்கு மரண தண்டனை: இதுவே அவசியம் என மக்கள் சீற்றம்!

‘குப்பைகளை கொட்ட வேண்டாம், கொட்டவேண்டாம் என எத்தனை தடவைகள் கோரிக்கை விடுத்திருப்போம். எத்தனை போராட்டங்களை நடத்திருப்போம். ஆனால், மஹிந்த அரசோ, மைத்திரி- ரணில் அரசோ எம் மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இன்று எல்லாம் முடிவடைந்தப் பின்னர் ஒப்பாரி வைக்கின்றனர்’ குப்பை மலை சரிந்ததால் அதில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களினதும், குறித்த பகுதியில் வாழும் மக்களினதும் ஆதங்கமே இது. வழமையாகவே கொலன்னாவைப் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும். இம்முறையும் அதற்குரிய ஏற்பாடுகள் தடல்புடலாக செய்யப்பட்டிருந்தன. ஆனால், பிற்பகல் ஆகிய...
Read More

குப்பை மலையை பார்க்க மக்கள் படையெடுப்பு: சூழவுள்ள மக்கள் அச்சத்தில்: அரசியல்வாதிகள் மாயம்! ( நேரடி ரிப்போட்)

கொலன்னாவ மீதோட்டமுல்ல குப்பைமேடு சரிந்துள்ள பகுதியை பார்வையிடுவதற்காக மக்கள் அணிதிரண்டு வந்தவண்ணமுள்ளனர். சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும் தற்போதுதான் சம்பவம் குறித்து பலருக்கும் தெரியவந்துள்ளது. விடுமுறைக்கு பலர் ஊருக்குச்சென்றிருந்தனர். இன்று காலை பலர் தலைநகர் திரும்பினர். இவ்வாறு திரும்பியவர்கள், கொழும்பை சூழவுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆகியோரே சம்பவ இடத்துக்கு வருகை தருகின்றனர். எனினும், தூரத்தில் இருந்து பார்ப்பதற்கே அனுமத p வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் புதையுண்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பில் மேலும்...
Read More

குப்பைக்குள் புதையுண்ட உறவுகளை தேடி அழைந்து ஊளையிடும் செல்லப்பிராணிகள் (நேரடி ரிப்போட்)

வீட்டுரிமையாளர்கள் குப்பைக்குள் புதைந்து உயிரிழந்துவிட்டதால் அவர்கள் வளர்த்த செல்லப் பிராணிகள் , அவர்களைத்தேடி அங்கும் இங்குமாக அலைந்து திரிகின்றனர். மரண ஓலத்தின் பாணியில் நாய்கள் இடும் ஊழை யானது பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கின்றது. அத்துடன், தமது உறவுகளை இழந்துவிட்டு- அநாதைகளாக தவிப்பவர்களும் கண்ணீர் வடித்தப்படியே குப்பை மேட்டை நோக்கி பார்த்த வண்ணமுள்ளனர். தமிழ் சிங்களப் புதுவருடமும் பெரிய வெள்ளி தினமுமான கடந்த வெள்ளிக்கிழமை (14) கொழும்பு நகர்புற கொலன்னாவ மீதோட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் 19 பேர்...
Read More
error: Content is protected !!