முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 25, 2017

தமிழ் தின போட்டியில் டயகம மாணவன் சாதனை!

அகில இலங்கை ரீதியாக தமிழ் தினப்போட்டியில் முதல் முறையாக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று நு டயகம மேற்கு 02 தமிழ் வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்வி கற்கும் வினுஷகாந் விகாசன் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் முதலாம் பிரிவில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அண்மை காலமாக இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி அனைவரையும் போற்றதக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது...
Read More

இளஞ்செழியன் கொலை முயற்சி; சந்தேகநபர் கொலை வழக்கில் பிணையில் வந்தவர்!

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று பொலிஸாரிடம் சரணடைந்திருந்தார். பொலிஸாரினால் தீவிரமான தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை பிரதான சந்தேகநபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார். 39 வயதான சிவராசா ஜயந்தன் என்ற பிரதான சந்தேகநபரே இவ்வாறு சரணடைந்துள்ளார். யாழ். நல்லூர் இவருடைய சொந்த இடம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவர் 1994ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில்...
Read More

அட்டனில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை!

ஹம்பாந்தோட்டை எண்ணை தாங்கியை பெற்றோலியா கூட்டுத்தாபனத்திகு அரசாங்கம் வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய கூட்டுத்தாபன தெழிசங்கத்தினர் நாடளாவிய ரீதியில் நல்லிரவு முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர் இந் நிலையில் ஹட்டன் பிரதேச வாகண ஒட்டுனர்களும் உரியாளர்களும் அச்சம் கொண்டுள்ளனர் எனினும் இரண்டு தினங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பில் உள்ளதாக ஹட்டன் பிரதேச ஏரிபொருள் நிறப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
error: Content is protected !!