முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

August 17, 2017

சொற்போர்க்களமானது ஐ.தே.க. கூட்டம்: விஜயதாஷ பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் ரணிலிடம் ஒப்படைப்பு!

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டமும், நாடாளுமன்றக்குழுக் கூட்டமும் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது காரசாரமான முறையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளதுடன், விஜயதாஷ ராஜபக்ஷவுக்கு எதிராக உறுப்பினர்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இதனால் சீற்றமடைந்த விஜயதாஷ, கட்சி உறுப்பினர்களுடன் சொற்போரில் ஈடுபட்டுள்ளார். இதனால், கூட்டம் சொற்போர்க்களமானது. சுமார் இரண்டரை மணிநேரம் இவ்வாறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்து, விஜயதாஷவிடமிருந்து அமைச்சுப் பதவியை பறிப்பதா அல்லது அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து முடிவெடுக்கும்...
Read More

இறுதிக்கால கொடுப்பனவை பெறாமலேயே இறக்கும் தொழிலாளர்; உடனடியாக வழங்க இதொகா வலியுறுத்து!

மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, ஸ்ரீலங்கா பெருந்தோட்டயாக்கம், எல்கடுவ பிளான்டேசன் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை துரிதகதியில் காலம் தாழ்த்தாது வழங்கப்பட வேண்டும். தேசிய ஆலோசனைசபைக் கூட்டத்தில் சட்டத்தரணி கா.மாரிமுத்து வலியுறுத்து. தோட்டத் தொழிலாளர்களின் சேவைகாலப்பணம், ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைநிதி ஆகியன கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, ஸ்ரீலங்கா பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பிளான்டேசன் நிர்வகிக்கும் அனைத்து தோட்டங்களில் வதியும் தொழிலாளர்களுக்கு இதுவரையிலும் வழங்கப்படவில்லை. நாம் பலமுறை இதைப்பற்றி...
Read More

பொதுத்தேர்தல் நடந்து ஈராண்டுகள்! மலையக எம்.பிக்கள் பெற்ற விருப்பு வாக்குகள் இதோ!!

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவடைகின்றன. ஜனாதிபதித் தேர்தல் 2015 ஜனவரி 8ஆம் திகதி நடத்தப்பட்டது. அதில் எதிரணியின் சார்பில் பொதுவேட்பாளராகக் களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களையும், சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறு ஆசனங்களையும்,...
Read More

ஆட்டம்காண்கிறது அரசு: கூட்டத்தை பிற்போட்டார் மைத்திரி!

முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நேற்று நடத்தவிருந்த கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிற்போட்டுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பேச்சு நடத்தவிருந்தார். மிக முக்கியமான விவகாரங்கள் பல இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்தன. எனினும், இந்தக் கூட்டத்தை வரும் திங்கட்கிழமைக்கு அவர்; பிற்போட்டுள்ளார். டிசெம்பர் மாதம் 31ஆம் நாளுக்குப் பின்னர், தனித்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசிய முன்னணி தயாராகி வருகிறது என்று சில...
Read More
error: Content is protected !!