முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

August 30, 2017

சைட்டம் கல்லூரியை மூடக்கோரி அட்டன் நகரில் தீ பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

மக்கள் விடுதலை முன்னனியினரால் அட்டன் மணிக்கூடு சந்தியிலே 30.08.217 இரவு 6.30 மணியளவில் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னியின் அமைப்பாளர் மஞ்சுள சுரவீர தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர் தீ பந்தம் கையில் ஏந்திய வண்ணம் சைட்டத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பினர் சைட்டம் கல்லூரியை மூடக்கோரியும் இலவசக்கல்வி மற்றும் இலவச சுகாதார சேவையை இல்லாதொழிக்கும் சைட்டம் வேண்டாம் எனவும்...
Read More

இதொகா இளைஞர் அணி அமைப்பாளர் பிரசாந்த்; முதியோருக்கு ஆடைகளை வழங்கி வைத்தார்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கு அமைய டயகம வெஸ்ட் ஐந்தாம் பிரிவு பாரதி முதியோர் கழகத்தில் அங்கம் வகிக்கும் முதியோர்களுக்கு இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாந்த் ஆடைகளை வழங்கிவைத்தார்.

நவம்பர் 20இல் இதொகாவின் நிர்வாகசபையில் அதிரடி மாற்றங்கள் நிகழும்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று கூடியது. இதன்போது நிர்வாகசபை கலைக்கப்பட்டதுடன், புதிய நிர்வாகசபையை தெரிவுசெய்வதற்காக கட்சியின் தேசிய சபைக் கூட்டத்தை நவம்பர் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமானின் மகனுக்கு இளைஞர் அணித் தலைவர் பதவியை வழக்கும் வகையிலேயே நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. அவருக்கு உப தலைவர் பதவியும் சர்வதேச ஆலோசகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. இளைஞர் அணி தலைவராக ஜீவன்...
Read More

அட்டன் எரிபொருள் நிலையத்தில் இப்படியும் நடந்தது; மக்களே அவதானம்!

அவசர அழைப்பொன்றை மனைவிக்கு எடுக்கவென கைப்பேசியை வாங்கிய நபர் தலைமறைவாகிய சம்பவமொன்று அட்டனில் இடம்பெற்றுள்ளது அட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியரிடம் கைபேசியை பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் நகர மத்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 30.08.2017 மதியம் 1 மணியளவில் எரிபொருள் நிரப்ப வாகண நெரிசல் காணப்பட்ட சந்தப்பத்தில் திடீரென அவ்விடத்திற்கு வந்த நபர் தனது மனைவிக்கு அவசரமாக அழைப்பென்றை எடுக்கவேண்டும் என கூடி எரிபொருள் நிரப்பு ஊழியரிடம் கைபேசியை பெற்றுள்ளார்...
Read More

டெஸ்போட்- கிரிமெட்டிய பஸ் சேவை நேர அட்டவணை நீதிமன்றத்தால் மாற்றம்!

குறுக்குப்பாதையில் பேருந்து செல்வதை குறைத்து, டெஸ்போட் கிரிமெட்டிய வழியாக செல்வதற்கு புதிதாக நேர அட்டவணை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. நுவரெலியா ஹட்டன் பிரதான பாதையில் நானுஓயா ரதல்ல குறுக்குப் பாதையை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் அநேகமாக பயன்படுத்துவதால் டெஸ்போட் கிரிமெட்டிய வழியாக பொதுப் (பேருந்து) போக்குவரத்து முறையாக இடம்பெறுவதில்லை. இந்த விடயம் தொடர்பாக ஊடகத்திலும் பல தடவைகள் சுட்டிக்காட்டியதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் குறுக்குப் பாதையில் பஸ்சேவைகளை அதிகரித்தார்கள் ஆனால் குறைக்கவில்லை. இந்த விடயம்...
Read More

அரசியலுக்கு அழைத்து வந்த அமரர் தொண்டமானுக்கு என்றும் நன்றியுடன் அமைச்சர் ராதா!

மலையகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 104 வது ஜனனதினத்தை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தழிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன் அவர்கள் கொழும்பு காலி முகத்திடலின் ஜனாதிபதி செயலகத்தில் காணப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் சிலைக்கு மலர் செண்டு கொண்டு நினைவு கூர்ந்த பொழுது. பா. திருஞானம் – டி சந்ரு

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் செயற்பாடு வரும் 6இல் ஆரம்பம்!

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைனள் எதிர்வரும் 06.09.2017 புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்லூரியின பீடாதிபதி ரமணி அபேநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் இரண்டாம் தவணைக்கான விடுமுறை கடந்த 04.08.2014 அன்று வழங்கப்பட்ட நிலையில் முதலாம் இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 06.09.2017 ஆரம்பமாகவுள்ள நிலையில் இரு தொகுதி மாணவர்களும் 05.09.2017 அன்று மாலை கல்லூரிக்கு சமூகம் தரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
Read More
error: Content is protected !!