முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

September 21, 2017

அக்கரப்பத்தனை நு /லோவர் கிரன்லி தமிழ் வித்தியாலய நூலகத்துக்கு செக் குடியரசு உதவி !

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 அக்கரப்பத்தனை நு லோவர் கிரன்லி தமிழ் வித்தியாலயத்தில் இயங்கும் நூலகத்தினை அபிவிருத்தி செய்ய அட்ரா சிரிலங்கா நிறுவனத்தின் ஊடாக நிதி வழங்க செக்குடியரசு முன்வந்துள்ளதாக அட்ரா நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இயக்குனர் பண்டார திலக்க தெரிவித்தார். இப்பாடசாலையில் 500 இற்கு மேற்பட்ட மாணர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு மாணவர்கள் அமர்ந்து கற்பதற்கு போதிய இடவசதி இல்லை. இதேவேளை மாணவர்கள் வாசிப்பை அதிகரிக்க போதிய இ;டவசதி இல்லை புத்தகங்களை வைப்பதற்கு...
Read More

தாய் சிறுத்தையை இழந்து அநாதரவாக இருந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் நோர்வூட்டில் மீட்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட பகுதியில் இரண்டு சிறுத்தைக் குட்டிகளை நோர்வூட் பொலிஸார் 21.09.2017 மீட்டுள்ளனர். கற்குகைக்குள் இருந்த சிறுத்தைக் குட்டிகளை கண்ட பிரதேசவாசிகள் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்தனர். விரைந்து சென்ற பொலிஸார் இரண்டு சிறுத்தை குட்டிகளையும் மீட்டுள்ளனர். தாய் சிறுத்தையை இழந்த நிலையில் அநாதரவாக காணப்பட்ட சிறுத்தைக் குட்டிகளை மஸ்கெலியா நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். – நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

கொட்டகலை ரோசிட்டா தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் இளைஞர் படுகாயம்!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்ட தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ரொசிட்ட தோட்ட 7ஆம் இலக்க தேயிலை மலையில் (20.09.2017) மாலை தேயிலை செடிகளுக்கு உரம் போட்டுக்கொண்டிருந்த 25 வயதுடைய எஸ்.கலைக்குமார் என்பரே சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். தாக்குதலுக்கு இலக்காகியவரை கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். நோட்டன் பிரிட்ஜ்...
Read More

தமிழ் மொழி மூலம் நிர்வாக சேவையில் சித்தி பெற்ற சேவையாளர் சந்திப்பு!

தமிழ்மொழி மூலம் கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டியில் சித்தியெய்தி தங்களது பயிற்சிகளை நிறைவு செய்துக் கொண்ட 36 கல்வி நிர்வாக சேவையினருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்குமான சந்திப்பு ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கல்வி அமைச்சின் தமிழ் கல்வி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் எஸ்.முரளிதரன் பேராதனை பல்கலைகழகத்தின் பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள். பா.திருஞானம்

சென் என்றூட்ஸ் கலாசார நிலையம் அமைக்க அடிக்கல்; இருபது லட்சம் ஒதுக்கீடு!

தலவாக்கலை சென் என்றூஸ் தோட்டத்தில் கலாசார மண்டபமொன்றை அமைப்பதற்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக்கலாசார மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (20.09.0217) நடைபெற்றது. இதில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்.பொன்னையா உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் தோட்ட பொதுமக்கள் என பலரும் கலந்து...
Read More

நுவரெலியா நல்லாயன் மகளிர் கல்லூரிக்கு உதவி!

கொழும்பு தாஜ்மா நிறுவன உரிமையாளர் மற்றும் ‘சம் சம்’ நிறுவனத்தின் தலைவருமான அல் ஹாஜ் மொஹம்மட் முஸம்மில் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியா நல்லாயன் மகளிர் கல்லூரியின் அதிபர் வண. அருட்சகோதரி நிலங்காத சில்வா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலைக்கு ரூபாய் ஒரு லட்சம் பெறுமதியான மல்டிமீடியா தொகுதி 21.09.2017ம் திகதி கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் சம் சம் நிறுவனத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதை படங்களில் காணலாம். டீ. சந்ரு

விறகு வெட்ட சென்ற பெண் பரிதாப மரணம், டயகமையில் சோகம்!

டயகம வெஸ்ட் இரண்டாம் பிரிவு தோட்டத்தில் விறகு வெட்ட சென்ற தாய் ஒருவரின் மீது வெட்டப்பட்ட மரம் சரிந்து விழுந்ததில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக மரணித்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் 20.09.2017 அன்று மாலை 6 மணியளவில் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது. உயிரிழந்தவர் 55 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான மயில்வாகனம் இந்திராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவுள்ளது....
Read More
error: Content is protected !!