முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 27, 2017

அட்டன் நோக்கி பயணித்த பஸ் தெஹியோவிட்ட பகுதியில் விபத்து; 23 பேர் காயம்!

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அட்டன் பிரதான வீதியின் தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 27.11.2017 அன்று பகல் 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து அட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. விபத்தில் பேரூந்து சாரதி உட்பட 23 பேர்...
Read More

மலையகத்தின் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி கொட்டகலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் கலாமன்றம் ஏற்பாடு செய்துள்ள “மலையக வரலாறும் வாழ்வியலும்” என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி, கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாகியது. கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி குழுவின் பணிப்பாளர் சு.முரளிதரன் இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து 28.11.2017 அன்றும், 29.11.2017 அன்றும் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சயில், மலையக மக்களின் அரசியல், கல்வி, பொருளாதார, வரலாறு தொடர்பான கிடைக்கத்தற்க அரிதான எழுத்து ஆவணங்கள் தொடர்பான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப வைபவத்தில் அட்டன்...
Read More

பொகவந்தலாவையில் திருப்பலி பூஜையின் பின்னர் வழங்கப்பட்ட பொரித்த மீன் விஷமானது; 80பேர் பாதிப்பு!

பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் உள்ள கிரிஸ்தவ ஆலயம் ஒன்றில் இடம் பெற்ற திருப்பலி திருவிழாவின் போது வழங்கபட்ட அன்னதானத்தில் உணவு ஒவ்வாமை காரனமாக 80பேர் வாந்தி மற்றும் வயிற்றோட்ட காரணமாக பாதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரீசோதகர் கதிரவேல் ஜெயகனேஸ் தெரிவித்தார். இந்த சம்பவம் 27.11.2017 திங்கள் கிழமை இடம் பெற்றது 26.11.2017. ஞாயிற்றுகிழமை குறித்த தோட்டத்தில் உள்ள கிரீஸ்த்தவ ஆலயம் ஒன்றில் இடம் பெற்ற திருவிழாவின் போது வழங்கபட்ட அன்னதானத்தில் பொரித்த மீன்...
Read More
error: Content is protected !!