முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

January 27, 2018

இ.தொ.கா மலையக பிரதேசங்களில் மூஸ்லீம் பிரதிநிதிகளுடன் இணைந்தே போட்டியிடுகின்றது – ஆறுமுகன் தொண்டமான்!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மலையக பிரதேசங்களில் மூஸ்லீம் பிரதிநிதிகள் இருவரை இணைத்தே போட்டியிடுகின்றது.

முதல்முறையாக குரங்குகளை குளோனிங் செய்த விஞ்ஞானிகள்…அடுத்த இலக்கு மனிதன்?!

நாட்டை நிர்மூலமாக்கும் அணுஆயுதங்கள், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மனிதனை பறக்க வைத்த விமானங்கள், பூமியைத் தாண்டி நிலவில் மனிதனை களமிறக்கிய விண்கலன்கள், திறமைக்கு சவால்விட்ட கணினிகள் என 20-ம் நூற்றாண்டு சாட்சியாக நின்ற அறிவியல் பாய்ச்சல்கள் ஏராளம். இவற்றுள் ஆக்கசக்திகளும் உண்டு; அழிவு சக்திகளும் உண்டு. ஆனால் 1997, பிப்ரவரி 22-ம் தேதி கிடைத்த அந்த ஒரு செய்தி மானுட சமுதாயத்திற்கே விநோதமானது. அந்த நாளில் வெளியான அந்த கண்டுபிடிப்பு ஆக்கமா அல்லது அழிவா எனத்...
Read More

அட்டன் நகரசபை மாநகரசபையாக மாற்றப்படும்; பைசர் முஸ்தபா தெரிவிப்பு!

அட்டன் நாகரசபையை மாநகரசபையாகவும் மஸ்கெலியா பிரேதேச சபையை நகரசபையாகவும் மாற்றியமைக்க ஜனாதிபதி மைத்திரீபால சிறீசெனஅவர்கள் உத்தரவு வழங்கியுள்ளதாக மாகாணசபை மற்றும் நகரசபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். 27.01.2018.சனிகிழமை கொட்டகலை தொழிற்நுற்ப கேட்போர் கூடத்தில் இலங்கை தொழிலாளர் காஙரசின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் அழைப்பின் பேரின் மக்கள் சந்திப்பில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மக்கள் சந்திப்பில் அமைச்சர் ஊட்பட இ.தொ.கா.வின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண...
Read More

செந்தில் இரட்டை பிரஜாஉரிமை கொண்டவரா…..?அப்படியென்றால் அவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும்!

கருடனுக்கு வந்த மடல்…. நடிகை கீதா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் என்பதால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கினார்கள்.கும்பகோணத்தை பிறப்பிட்மாக கொண்ட ஊவாமாகாண அமைச்சர் செந்தில் எப்படி அமைச்சராக இருக்க முடியும் எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள். செந்திலுக்கு அடியாட்களாக முக்கியமான 7 பேர் அளவில் இருக்கிறார்கள்,அதில் மிக முக்கியமான அடியாட்கள் தான் அடிவாங்கிய கணேசமூர்த்தியும்,அடித்த வெள்ளிகண்ணனும்,அசோகாவும். கணேசமூர்த்தி ஒன்றும் கைசுத்தமான ஆள் இல்லை செந்திலுக்காக கட்டைபஞ்சாயத்து, கொமிஷன் பொறுப்பு என இதர பொறுப்பு எல்லாமே...
Read More

அட்டனில் தகரத்தை மாற்றாதவர்கள் நகரத்தை மாற்றுவார்களா? திகா கிண்டல்!

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பை நாம் உறுதி அளித்ததது போல நிறைவேற்றியுள்ளோம் . அதேபோல ஹட்டன் நகர சபையை மாநகர சபையாக மாற்றும்; எமது இலக்கினை எமது பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே தெரிவித்துள்ளோம். அது அறிவிப்பாக மாத்திரமல்லாது நடைமுறையிலும் செய்யத்தொடங்கிவிட்டோம். ஹட்டன் நகரை மூடியிருந்த தகரங்களை அகற்றி பணிகளை ஆரம்பித்து விட்டோம். பல ஆண்டுகாலமாக இந்த தகரத்தை மாற்ற முடியாதிருந்தவர்கள் இப்போது நகரத்தை மாற்றியமைப்பதாக  கூறுவது வேடிக்கையானது என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி...
Read More

ஏ ஈ மனோகரனுக்கு அவரது பொகவந்தலாவ இல்லத்தில் திருப்பலி பூஜை!

புகழ் பெற்ற இலங்கையின் முன்னணிப் பாடகர் சிலோன் மனோகரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரால் 27.01.2018 அன்று காலை பொகவந்தலாவ சிரிபுர பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மலையகத்தில் பொகவந்தலாவ டின்சின் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர் பொப்பிசைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டார். சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களில் தமது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். இவர் இலங்கையில் முன்னணிப் பாடகர்களின் தனக்கென தனி முத்திரை பதித்திருந்தார். இலங்கையில்...
Read More

இ.தொ.காவை வெற்றிபெறச் செய்வதில் இளைஞர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்; ராஜமணி பிரசாந்த் அறிக்கை !

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கான முழுமையான ஆதரவு இருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் இளைஞர் அணி உதவிச் செயலாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் மக்களை நேரடியாக சந்திக்கும் போது இதனை அறிந்துகொள்ள முடிந்ததாகவும், கடந்த காலத்தில் மக்கள் விட்ட பிழையை சரிசெய்துகொண்டு, சரியான தேர்வான சேவல் சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தொடர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், இளைஞர் இம்முறை...
Read More

இதொகாவின் போனஸ் ஆசனத்தில் போட்டியிடும் வேட்பாளர் சென்ற; வாகனம் மீது கல்வீச்சு!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் ருவன்புர பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போனஸ் ஆசனத்தில் போட்டியிடும் வேட்பாளர் முரளி ரகுநாதன் பயணித்த வாகனத்திற்கு 26.01.2018 அன்று 8.00 மணியளவில் கல்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளுராட்சி தேர்தலுக்காக அட்டன் சித்திரவத்தை தோட்ட பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போதே இந்த கல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் பயணித்த காரின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதுடன், வேட்பாளரும் சிறிய காயத்துக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம்...
Read More
error: Content is protected !!