முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 16, 2018

கம்போடியாவில் பத்திரிகையாளர் கார்மேகத்தின் நூல் வெளியீட்டு விழா!!

தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்தவும் தமிழர்களுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்குமான வரலாற்று உறவையும் கடல் சார் வணிக வரலாற்றையும் நினைவு கூர்ந்து நடைபெறும் கம்போடியா உலகத்தமிழர் மாநாட்டில் பத்திரிகையாளர் அமரர் எஸ்.எம். கார்மேகம் “வாழ்வும் பணியும் என்ற வரலாற்று ஆவணத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதா கிருஷ்ணன் வெளியிட்டு வைக்கின்றார்.

வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக விவசாயிகள் வீதியில்….

நுவரெலியா மாவட்ட செயலக பகுதிக்குட்பட்ட அம்பேவெல, பட்டிப்பொல கந்தஎல, 30 ஏக்கர் மற்றும் 7ம் கட்டை போன்ற பகுதிகளில் உள்ள விவசாய காணிகளுக்கு காட்டு எருமைகள் வேலிகளை உடைத்துக்கொண்டு ஊடுருவதனால் ஏற்படும் சேதங்களை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் செயற்பாட்டை கண்டித்தும் குறித்த பிரதேசங்களின் விவசாயிகள் 16.05.2018 அன்றைய தினம் அம்பேவெல பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

கொட்டகலை பிரதேசசபைகுட்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் வாதிகளின் பெயர்பலகைகளை அகற்ற நடவடிக்கை!!

கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள காட்சிபடுத்தபட்டிருந்த தொழிற்சங்க அரசியல்வாதிகளி பெயர்பலகைகைளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கொட்டகலை பிரதேச்சபையின் தலைவரால் 16.05.2018. புதன்கிழமை தீர்மானம் ஒன்று முன்னெடுக்கபட்டது .

எருமை மாடுகள் விவசாய காணிகளை நாசம் செய்வதை எதிர்த்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பு!!

எருமை மாடுகள் விவசாய காணிகளை நாசம் செய்வதால் நுவரெலியா பிரதேச செயலாளர் திருமதி. சுஜீவா போதிமான்ன அவர்களின் தலைமையில் நுவரெலியாபிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின்போது இக்குற்றச்சாட்டை முன்வைத்து அந்த எறுமைகளை பிடித்து அவைகளை வளர்க்க வசதியுள்ளவர்களுக்கு கையளிக்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அட்டன் நோக்கி பயணித்த ஆட்டோ” கம்பளையில் திடீரென தீப்பற்றியது; அதில் பயணித்தவர்கள் தப்பினர்!

கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் 16.05.2018 அன்று காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். கண்டியிலிருந்து அட்டன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென தீப்பிடிக்க ஓட்டுனரும், பயணித்த சிறு குழந்தையோடு, மொத்தமாக 5 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் அணைவரும் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர். இந்த முச்சக்கரவண்டியை பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தும் சுமார் 7...
Read More

இன்று நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்!!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
error: Content is protected !!