முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 27, 2018

சுமந்திரன் மற்றும் விக்ணேஸ்வரனின் நோக்கம் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் பிளவு படுத்துவதே – ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவிப்பு!

எந்த சமயமும் தீமையானவற்றை போதிப்பதில்லை. ஆனால் சுமந்திரன் அவர்களும் விக்ணேஸ்வரன் அவர்களும் வடக்கில் விகாரைகளை அமைக்க கூடாது என்று தெரிவித்து வருகிறார்கள்.

மத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவிப்பு!

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு வெறும் கடிதங்கள் மட்டும் எழுதினால் போதாது, அதே போன்று மத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இராமேஸ்வரத்தில் பேட்டியளித்துள்ளார்.

ரம்பொடை லிலஸ்லேண்ட தோட்டத்தில் இயற்கை அனர்த்ததில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அமைச்சர் ரங்கே பண்டார!

ரம்பொடை லிலஸ்லேண்ட தோட்டத்தில் அனர்த்ததில் பாதிப்படைந்த 103 குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டு உலருணவு பொருட்களை அமைச்சர் ரங்கே பண்டார வழங்கிவைத்தார்

அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் திகாம்பரம்!

அண்மையில் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நோர்வூட் கெசல்கமுவ ஆற்றுப் பகுதி, சாமிமலை கவரவிலை தோட்டம், ஓல்டன் 10 ஆம் நம்பர் மற்றும் சாமிமலை கொலனி ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மக்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் நேற்று சந்தித்து அவர்களின் தேவைகள் பற்றி கலந்துரையாடினார்.

மவுண்ட்வோர்னன் தோட்ட வீடமைப்புத்திட்டத்தின் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக வீடுகளின் திறப்புக்கள் கையளிப்பு : விரைவில் திறப்பு விழா!

மலையகத்தில் அமைச்சர் திகாம்பரத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தனி வீட்டுத்திட்டத்தினால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் 449 குடும்பங்களை சேர்ந்த 1788 பேர் பாதிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 25ம் திகதி மாலை 4 மணி வரையளவில் 449 குடும்பங்களை சேர்ந்த 1788 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தெரிவித்தார்.

மண்சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இடம்பெயர்வு!

தலவாக்கலை சவுத் மடக்கும்புர தோட்டத்தில் 25.05.2018 அன்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 20 வீடுகளில் வாழ்ந்த சுமார் 96 பேர் அந்து தோட்டத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நோர்வூட் பகுதியில் பாரிய சிறுத்தை புலியின் உடலம் மீட்பு!

நோர்வூட் மேற்பிரிவு தோட்டபகுதியில் பாரிய சிறுத்தை புலி ஒன்றை கொலை செய்த நிலையில் புல்கான் ஒன்றில் இருந்து மீட்கபட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் .

உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் முற்றாக சேதம்!

நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம் 26.ம் திகதி அன்று இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் மாத்திரம் குடும்ப உறுப்பினர்கள் இருந்துள்ளனர் மற்றுமொரு வீட்டில் உள்ளவர்கள் தமது உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருந்தபோதே தீ சம்பவம் ஏற்பட்டுள்ளது . இதன் போது வீட்டில் இருந்த பெருமதிமிக்க பொருட்களும் பாடசாலை மாணவர்களின் உபகரணங்களும் எரிந்து...
Read More
error: Content is protected !!