முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 6, 2018

மேலதிக வகுப்பு நிறைவடைந்ததன் பின்னர் வீடி திரும்பிய 14 வயதுடைய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்- நிட்டம்புவயில் சம்பவம்!!

நிட்டம்புவ,அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் 14 வயதுடைய மாணவன் ஒருவன் மீது தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். 

தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 12 பேர் காயம்! தம்புள்ளையில் சம்பவம்!!

ஹபரண – தம்புள்ளை பிரதான வீதியில் ஹரிவடுன்ன பகுதியில் தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

அட்டன் தேயிலை நிறுவனத்தின் ஏற்பாட்டில் சான்றுதல் மற்றும் கேடயங்கள் வழங்கிவைப்பு!!

அட்டன் தேயிலை நிறுவனத்தின் ஏற்பாட்டில் 16தோட்டபகுதிகளை சேர்ந்த 250 தொழிலாளர்களுக்கு சான்றுதல் மட்டும் கேடயங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 06.06.2018.புதன்கிழமை காலை அட்டன் பிரீன்ஸஸ் மண்டபத்தில் இடம் பெற்றது

நாவலப்பிட்டில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் பலி!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாலப்பிடிய கண்டி பிரதான வீதியில் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக நாலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

பெருந்தோட்ட பாடசாலைகளில் தமிழர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்: அமைச்சரவையில் மனோ கணேசன்!

மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தையும், அவிசாவளை உள்வரும் ஹோமாகமை கல்வி வலயத்தையும் சார்ந்த பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கு தோட்டங்களை சாராத சகோதர இனத்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது சரியானதல்ல என இன்று அமைச்சரவையில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் வாதிட்டதாவது, கடந்த கால வரலாறுகள் எடுத்து பார்க்கும் போது, இப்படி நியமனம் பெருகின்ற சகோதர இனத்து ஆசிரியர்கள், நியமன விதிகளை மீறி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றம் பெற்று சென்று...
Read More

மலையகத்தில் பேதமின்றி மக்கள் சேவை தொடர்கின்றது : ஸ்ரீதரன் தெரிவிப்பு!

தொழிற்சங்க அரசியல் பேதமின்றிய மக்கள் சேவை மலையகத்தில் தற்போது தான் முன்னெடுக்கப்படுகின்றன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பொகவந்தலாவை ஓல்டி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் செப்பனிடப்பட்ட பாதையைத் திறந்து வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் கெம்பியன் பிரதேச  அமைப்பாளர்...
Read More

தலவாக்கலையில் 5 வயது சிறுமி கடத்தல் சம்பவத்தில் மேலும் நால்வருக்கு விளக்கமறியல்!!

தலவாக்கலையில் 5 வயது சிறுமியை கடத்திச் சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகத்துக்குரியவர்கள் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
error: Content is protected !!