முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 7, 2018

கினிகத்தேனையில் பாரிய மண் மேடு ஒன்று சரிந்துவிழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு!!

மலையகத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக கினிகத்தேன பகுதியில் உள்ள இந்து ஆலயத்திற்கு அருகாமையில் பாரிய மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குரத்து பாதிக்கபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்

தலவாக்கலை சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பில் மேலும் சிறுவர் ஒருவர் நுவரெலியா பொலிசார் மீட்பு!!

தலவாக்கலையில் ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டு விற்பணை செய்யப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர் இசார மஞ்சநாயக்க வீட்டிலிருந்து மீட்க்கப்பட்டுள்ள 11 வயது சிறுவனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் பராமரிப்பு நிலையைத்தில் தங்கவைக்க நுவரெலியா நீதிமன்ற மாவட்ட நீதவான் பிரமோத ஜெயசேகர உத்தரவிட்டுள்ளார்.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து துண்டிப்பு!!

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் 07.06.2018 அன்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலா நகரில் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை!!

நோர்வூட் பிரதேச சபைக்குற்பட்ட பொகவந்தலா நகரில் வடிகாண் புணரமைப்புக்கா அகழப்பட்ட பாரிய குழிகளை விரைவில் மூடுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நீர்தேக்கம் மற்றும் நீர்வீழ்ச்சியின் நீரின்மட்டம் உயர்வு!!

மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலையகத்தில் அடைமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

மலையகத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக அட்டன் கொழும்பு பிரதான வீதியின் டி.கே.டபள்யு பகுதி பகுதி அளவில் நீரில் முழ்கியுள்ளன 07.06.2018. வியாழக்கிழமை பிற்பகல் வேலையில் பெய்த கடும் மழையின் காரணமாக அட்டன் கொழும்பு பிரதான வீதி பனிமூட்டமாகவும் காணபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளைகளினால் நடுத்தெருவிற்கு வந்த தாயாரின் இறுதிக்கிரியைகளை ஏற்பாடுசெய்துள்ள பொகவந்தலாவ தோட்டமக்கள்!!

தனது மகளினால் வீதியில் விட்டுசென்ற தாயின் சடலத்தை நல்லடக்கம் செய்ய தோட்டமக்களினால் ஏற்பாடு பொகவந்தலாவ கொட்டியாகலை என்.சி தோட்டபகுதியை சேர்ந்த வீரய்யா ,வல்லியம்மா ஆகியே இருவரும் பொகவந்தலாவ கொட்டியாகலை என்.சி. தோட்டபகுதியில் தமது வாழ்க்கையினை கூடாரம் ஒன்றில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடதக்கது. இவர்களின் மகள் திருமணம் முடித்துவைத்த பின் இவர்களிடம் இருந்த பணம் அனைத்தையும் மகளும் மருமகனும் பெற்று கொண்டதன்பின் தனது பெற்றோர்களை பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் விட்டு சென்றுள்ளதாகவும் இவர்களை இனங்கண்ட கொட்டியாகலை என்.சி.தோட்டமக்கள் பொகவந்தலாவ...
Read More

மலையகத்தில் கடும் மழை- நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!!

மலையகத்தில் விட்டு விட்டு கடும்மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடரும் மழையின் காரணமாக விலசுரேந்திர நீர் தேக்கத்தில் நீர் நீரம்பி வழிந்து ஒட கூடிய நிலை காணபடுவதோடு லக்ஷபான நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

அட்டன் பொலிஸ் நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போடைஸ் தோட்ட உத்தியோகத்தர்கள் வீதி மறித்து ஆர்பாட்டம்- போக்குவரத்து பாதிப்பு!!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டயகம பிரதான வீதியில் போடைஸ் பகுதியில் அட்டன் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போடைஸ் தொழிற்சாலை முன்பாக இலங்கை தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் அட்டன் கிளை காரியாலய உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் 07.06.2018 அன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
error: Content is protected !!