முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 10, 2018

பாரிய மரமொன்று மின்சாரக்கம்பிகளின் மேல் சரிந்து வீழ்ந்ததில் மின்சார தடை- அக்கரப்பத்தனை இருளில்!

அக்ரபத்தனை ஊட்டுவளி பிரதேசத்தில் பாரிய மரமொன்று மின்சாரக்கம்பிகளின் மேல் சரிந்து வீழ்ந்ததில் பல பிரதேசங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவில் மோட்டர் சைக்கிள் விபத்து

நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை தோட்டப்பகுதியில் பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஸ்கூட்டி மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைமந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான செயலமர்வு!!

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் பொலிஸ்சேவை மஸ்கெலியா சாமிமலை பகுதியில் ஆரம்பித்து ஒரு மாதம் நிறைவினை முன்னிட்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையில் மஸ்கெலியா சாமிமலை கலாச்சாரமண்டபத்தில் மஸ்கெலியா பிரதேச கர்ப்பிணி தாய்மார்களுக்கான செயல்மர்வு 10.06.2018.ஞாயிற்று கிழமை ஏற்பாடு செய்யபட்டிருந்தது

நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் மண்சரிவு!!

நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை தோட்டப்பகுதியில் பிரதான வீதியில் மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்துள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு குடியிருப்புகள் முழுமையாக சேதம் ஒருவருக்கு காயம்- தலவாகலையில் சம்பவம்!!

தலவாகலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மடகும்புற தோட்டவைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள இரண்டு குடியிருப்பின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததினால் இரண்டு குடியிருப்புகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்து மடக்கும்பற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்
error: Content is protected !!